சமகால வாழ்வியல் நோய்களும் தீர்வுகளும்...

Author: தோழி / Labels:

சித்தர்களின் பழந்தமிழ் பாடல்களை பொருளாக்கம் செய்து பதிவிடுவது மட்டுமே என்னுடைய பதிவுகளின் நோக்கமில்லை.

சித்தர்கள் அருளிச் சென்ற பாடல்களில் பொதிந்திருக்கும் தகவல்கள், காலங்கள் பல கடந்தாலும் இன்றைக்கும் நமக்குத் தேவையான தீர்வுகளை தர வல்ல அறிவு களஞ்சியம்.இது மிகைப் படுத்தப் பட்ட வார்த்தை இல்லை. உண்மையான உண்மை!

இந்த நூல்களை அகழ்ந்தாய்ந்து அனைவரும் பயன்படுத்திக் கொள்ளதக்க, தேவையான விழிப்புணர்வோ அல்லது நெறிப்படுத்துதலோ பெரிய அளவில் இல்லாமல் போனது வருத்தமான நிதர்சனம். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட நம்மாலான வகையில் முயற்சிப்போம் என்கிற முனைப்பின் தொடர்ச்சியே இந்த வலைப்பதிவுகள்.....

பணத்தை மட்டுமே மையமாய் வைத்து வாழும் நிர்பந்தத்தில், மனிதனின் இயல்புகள், எண்ணங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாகி விட்டது. இத்தகைய இயல்பை மீறிய வாழ்க்கை முறையினால் உடலியல் ரீதியாகவும், மனவியல் ரீதியாகவும் வெகுவான பாதிப்புகளுக்கு உள்ளாகிறான். போட்டியும், பொறாமையும் சூழ்ந்த இயந்திர வாழ்க்கையில் இது பற்றி ஆரம்பத்தில் எவரும் கவலைப் படுவதில்லை.

மன அழுத்தம் முதல் மாரடைப்பு வரை பாதிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இயல்பினை மீறிய வாழ்க்கை முறை தந்த பரிசில்கள்தான் இவை. ஆங்கில மருத்துவ முறையில் இந்த பாதிப்புகளுக்கு அநேக தீர்வுகள் இருந்தாலும் அதன் பலன் மற்றும் செலவுகள் குறித்து பல விமர்சனங்கள் இல்லாமல் இல்லை.

சீனாவில் இன்றைக்கும் பாரம்பரிய மருத்துவம்தான் கோலோச்சுகிறது, ஆனால் அழகு தமிழில் அரிய தீர்வுகள் ஆயிரம் இருந்தும் அதை பயன் படுத்திக் கொள்ள முனையாதது நமது தவறுதான்... ம்ம்ம்ம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இம் மாதிரியான பாதிப்புகளுக்கான எளிய நிரந்தர தீர்வுகளை சித்த மகா புருஷர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்.

இந்த வகையில், இனி வரும் சில பதிவுகளில் எந்திர மயமாகிவிட்ட சமகால வாழ்வியல் போராட்டத்தில் நம்மில் பலரும் அல்லல் படும், உடல் சார்ந்த நோய்களுக்கு சித்தர்கள் அருளிய தீர்வுகளை பட்டியல் இட உத்தேசித்திருக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

kalavum kattrum ara said...

/// நமது தவறுதான்... ம்ம்ம்ம் ?/////என்ன ஒரு ஆதங்கம் .. நிச்சயம் உங்க பதிவு மூலமாக இந்த ஆர்வத்தினை சில நூறு பேர்களிடமாவது உண்டு பண்ணி விட்டீர்கள் ... வாழ்த்துக்கள்

rk guru said...

நீங்கள் சொல்வது உண்மைதான்.......ஆனால் நம்முடைய மனது எதுவும் மறக்கும் மனது. பதிவுக்கு என்னுடைய வாழ்த்துகள்...நன்றி

Sriram, Bahrain said...

Yes you are right. Congrats for your new assignment, this will be beneficial to all.

Sakthi-tamildasan said...

தொழி, நான் இந்த வலைப்பக்கத்தின் மிக நண்ணிய பார்வையாளன். இந்த வலைப்பூவின் அரிய செய்திகளை கண்டு கவரப்பட்டு தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் ஆர்வத்துக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் சேவைக்கு நன்றி.

Shiva said...

டாக்டருக்கு படிப்பவர்கள் படிப்பு முடித்து , மருத்துவத்துக்கு வருவார்கள்.
நீங்களும் மருத்துவத்தையே பாடமாக எடுத்து படிக்கிறீர்கள்.
வாருங்கள், வந்து நோய்களுக்கான சித்தர்களின் தீர்வுகளை சொல்லுங்கள்.

SivaSubramanian said...

நீரிழிவு நோய்க்கான மருத்துவ குறிப்புகளை கூறுங்கள் தோழி......

Moorthi K said...

Hello Sir
my penis is small how to increase please tell me sir i request you your answer my withing

Post a Comment