பழந்தமிழரின் அளவை முறைகள்...

Author: தோழி / Labels:

இந்த வலைப்பதிவின் மிக முக்கியமான பதிவு இது. தொடர்ந்து படித்து வரும் நண்பர்கள் இந்த பதிவினை அச்செடுத்து வைத்துக் கொள்ளலாம். சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது.

எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

19 comments:

தமிழ் மதுரம் said...

உதிலை ஒரு சில அளவை முறைகளைத் தான் கேள்விப் பட்டிருக்கிறன். பகிர்வுக்கு நன்றிகள் தோழி!

chandru2110 said...

நல்ல பயனுள்ள சேகரிப்பு . இதை முன்னடியே (பதிவுகளின் ஆறம்பத்திலேயே) சொல்ல வேண்டியதுதானே.

ராம்ஜி_யாஹூ said...

பகிர்விற்கு நன்றி.

ஆனால் இந்த நாழிகை என்ற வார்த்தை ஆரியர்களின் வார்த்தை, எனவே இதை பயன் படுத்த கூடாது என்று அல்லவா திராவிட கட்சிகளின் கருது உள்ளது

jagadeesh said...

பார்க்கபோனால் உங்கள் வலைதளத்தின் எல்லா இடுகைகளையும் அச்செடுத்து கொள்ள வேண்டியவை தான். அதில், இதுவும் ஒன்று. மிகவும் உபயோகமான தகவல்.

lalli said...

dear tholi,

can you tel me .. what is ther alavu ( தேர் அளவு).. it is the அளவு used during king saraboji 's period..

if anyone knows the answer,,, kindly reply...

Unknown said...

60 மணித்துளிகள் ஒரு நிமிடம்
24 நிமிடம் ஒரு நாழிகை ஆகும்

Ravichandran said...

அன்புத்தோழி !

மிக அருமை, தொடரட்டும் தங்களது சிறந்த பணி,

வாழ்க வளமுடன்,

நன்றி ! வணக்கம்!!

தோழன் ஆ.ரவிச்சந்திரன்,விழுப்புரம்.

Ravichandran said...

அன்புத்தோழி !
நகலெடுக்கும் வழி முறைகளை கூற வேண்டுகிறேன்,
நன்றி ! வணக்கம்!!
தோழன் ஆ.ரவிச்சந்திரன்,விழுப்புரம்.

Anonymous said...

தோழி அவர்களுக்கு,
பயனுள்ள பதிவு வாழ்த்துகள் மேலும் பல பயனுள்ள பதிவுகளை தாருங்கள்.

அறிந்துகொள்ள
28(30) நாடி - 1 வினாடி (வி = பெரிய)
60 வினாடி - 1 நாளிகை
60 நாளிகை - 1 நாள்

10 நாளிகை - 1 சிறுபொழுது
3 சிறுபொழுது - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
120 நாள் - 1 பெரும்பொழுது
6 பெரும்பொழுது - 1 ஆண்டு
60 பொழுது - 1 திங்கள்
6 திங்கள் - 1 அயனம்

@ராம்ஜி_யாஹூ
நாளிகை என்பது நாள் என்பதன் உட்பிரிவு நாள் என்பது தமிழ்ச் சொல்லாக இருக்கையில் எங்ஙனம் நாளிகை ஆரியச்சொல்லாக இருக்க முடியும் வடமொழிதவிர வேறு எந்த ஆரிய மொழியிலாவது இச்சொல்லோ அல்லது இதன் வேர்ச்சொல்லோ இருக்கிறதா என்பதை கவனிக்க இதிலிருந்து நாளிகை என்பது தமிழ்ச்சொல் என்பது திண்ணம் உங்களது கருத்தில் உள்ள வார்த்தை எனும் சொல்லும் திராவிடம் எனும் சொல்லும் தான் ஆரியமொழிச் சொற்கள் இதை மாற்றி சொல் என்றும் தமிழ் என்றும் சொல்லலாம்

THIRUMAL said...

nanri

Unknown said...

அவுன்ஸ் என எழுதியிருக்கிறிர்களே

Gopalakrishnan.V said...

தகவலுக்கு நன்றி...... மேலும் நில அளவை பற்றி
தெரிந்து கொள்ள் ஆவல்.[காணி,குழி,வீசம்]

THIRUMAL said...

uyaramaha valara ethum marunthu erunthal sollungal

Unknown said...

valuble info, thanks

Unknown said...

thanks

VIJAY RAHAVAN said...

அன்பு சகோதரி அவர்களுக்கு நன்றி,
தாங்கள் எழுதிய பழந்தமிழரின் அளவை முறைகள் படி,
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.(168ml)
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.(336ml)
மற்றொரு இடத்தில் தாங்கள்
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.(168 * 2 = 336ml)
இரண்டு உழக்கு = ஒரு உரி.(336 * 2 = 672ml)
இரண்டு உரி = ஒரு நாழி.(672 * 2 = 1.344Litres)
எட்டு நாழி = ஒரு குறுணி.(1.344Litres * 8 = 10.752Litres)
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.(10.752Litres * 2 = 21.504Litres)
இரண்டு பதக்கு = ஒரு தூணி.(21.504Litres * 2 = 43.008Litres)
மூன்று தூணி = ஒரு கலம்.(43.008Litres * 3 = 129.024Litres)

என்று கூறியுள்ளீர்கள். இதன்படி பார்த்தால்
ஒரு கலம் = 129.024Litres
ஆனால் தாங்கள்
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
என்று கூறியுள்ளீர்கள்.
தயவு செய்து எனக்கு குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை சிரமம்பாராமல் மற்றொரு முறை விளக்குமாறும், மின்னஞ்சல் அனுப்புமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
செ.விஜயராகவன்,
தஞ்சாவூர்.

VIJAY RAHAVAN said...

அன்பு சகோதரி அவர்களுக்கு நன்றி,
தாங்கள் எழுதிய பழந்தமிழரின் அளவை முறைகள் படி,
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.(168ml)
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.(336ml)
மற்றொரு இடத்தில் தாங்கள்
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.(168 * 2 = 336ml)
இரண்டு உழக்கு = ஒரு உரி.(336 * 2 = 672ml)
இரண்டு உரி = ஒரு நாழி.(672 * 2 = 1.344Litres)
எட்டு நாழி = ஒரு குறுணி.(1.344Litres * 8 = 10.752Litres)
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.(10.752Litres * 2 = 21.504Litres)
இரண்டு பதக்கு = ஒரு தூணி.(21.504Litres * 2 = 43.008Litres)
மூன்று தூணி = ஒரு கலம்.(43.008Litres * 3 = 129.024Litres)

என்று கூறியுள்ளீர்கள். இதன்படி பார்த்தால்
ஒரு கலம் = 129.024Litres
ஆனால் தாங்கள்
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
என்று கூறியுள்ளீர்கள்.
தயவு செய்து எனக்கு குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை சிரமம்பாராமல் மற்றொரு முறை விளக்குமாறும், மின்னஞ்சல் அனுப்புமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
செ.விஜயராகவன்,
தஞ்சாவூர்.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

தற்கால அளவுகளுடன் ஒப்பிட்டு பதிவுகள் செய்யுங்கள்,பயனுள்ள பதிவு. நன்றி

Unknown said...

அனைவருக்கும் நன்றி மருத்துவ குறிப்புகள் புத்ததகஙகளுக்கு உதவவும்

Post a Comment