இரசவாதம் - என் பார்வையில்!

Author: தோழி / Labels: ,

இரசவாதம், கொஞ்சம் பெரிய தொடராகி விட்டது . இந்த இடத்தில் இடை நிறுத்தி பிரிதொரு சமயத்தில் தொடரலாம் என நினைக்கிறேன். இந்த இடத்தில் எனது தனிப்பட்ட பார்வைகளை பதிவது அவசியமென நினைப்பதால் இந்த பதிவு.

மிக நிச்சயமாக இரசவாதம் என்பது அரியதொரு கலை இதை கிரகித்தல், பயிற்சி, சிந்தனை, திட்டமிடல், செயல்பாடு, என ஒவ்வொரு கட்டத்தையும் துல்லியமான திட்டமிட்டு செயற்படுத்தினால் உறுதியான பலன்கள் உண்டு. இன்றைக்கும் கூட இரசவாதம் மூலம் செயற்கை உலோகம் தயாரிப்பது நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

சித்த புருஷர்கள் இந்த அரும் பெரும் கலையினை மருத்துவத்திற்காக மட்டுமே பயன் படுத்தினார்கள். மனித உடம்பில் உள்ள ஒவ்வொருபாகத்திற்கும், அதில் உள்ள நுண்ணிய அணுக்களும் வலிமை மிக்கதாக இருக்கவும், அவற்றின் செயல் திறன் குறையாமல் இருக்கவும் உலோக மருந்துகளை செய்யவதன் பொருட்டே இந்த ரசவாத கலையை உருவாக்கினார்கள்.

இன்றும் சித்த மருத்துவத் துறையில் பலவிதமான பஸ்பங்கள், செந்தூரங்கள், குளிகைகள் போன்றவற்றை செய்வதற்கு, அனுபவம் உள்ள பல சித்த மருத்துவர்கள் செயற்கை உலோகதயாரிப்பு மூலமே அவற்றை செய்கிறார்கள்.

இராச வாதக் கலையின் ஒரு பகுதி தான் உலோகம் கட்டுவது. இதன் எல்லைகள் மிக விரிவானவை....

இன்றைக்கும் பழனியில் அருள் பாலித்திருக்கும் மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவ பாஷாணங்களின் கட்டால் உருவாகியது. இந்த நவபாஷன கட்டும் ஒரு ரசவாதமே, பாசானங்களை திடமான உலோகம் போல கட்டுவதுதான் நவ பாஷாணக் கட்டு ஆகும். ரசவாதம் என்பது பொய் என்றோ, பித்தலாட்டம் என்றோ கூறுவோருக்கு பழனியப்பனையே பதிலாக காட்டலாம்.

சித்தர்களால் உருவாக்கப் பட்ட இந்த அரிய ரசவாதக் கலையை ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் தங்களின் நுண்ணறிவால் தான் வாழும் சமூகத்திற்கு பயனுள்ளதாகக்க வேண்டும். இந்த உயரிய நோக்கத்தை முன் வைத்து ஆய்வுகள் பல செய்திடப் படுதல் வேண்டும்.

இதை வாசிக்கும் எவரேனும் ரசவாதம் பற்றிய புதிய சிந்தனையுடன் புது வழிகளையும் உருவாக்கிடும் முயற்சியில் ஈடுபட்டால் அதுவே எனது பதிவுகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் ! நடப்பவை யாவும் நல்லவையாகவே இருக்கவேண்டும் !

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

6 comments:

jagadeesh said...

//எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் ! நடப்பவை யாவும் நல்லவையாகவே இருக்கவேண்டும் !//
வாழ்க வளமுடன்!

ப்ரின்ஸ் said...

முயற்சிக்கலாமே!!! ஆனால் ஒரு கண்டிஷன் : மூலப்பொருட்கள் எல்லாம் நீங்கள் தான் கொடுக்கணும் ..

சூர்யா said...

நல்லெண்ணத்துடன் சித்தர்கள் புகழ்பாடும் தங்களுக்குச் சிரம் தாழ்த்துகிறேன்.
...
காணொளி: தமிழ்ச்சித்தர் கண்ட வியக்க வைக்கும் மருத்துவம்
http://cyber-mvk.blogspot.com/2010/07/blog-post_08.html

போகன் said...

சித்தர்களை பகுத்தறிவு எல்லைக்குள் வராதவர் என்று ஒரேடியாக ஒதுக்கும் போக்கு அல்லது அவர்கள் சொன்னதை அப்படியே எடுத்துக் கொண்டு வழிபடும் போக்கு இரண்டுமே அவர்களை புரிந்துகொள்ள உதவாது.நவீன அறிவியல் பார்வையிலும் அவர்களை ஆராய்ந்தால்தான் முழுமையான ஒரு சித்திரம் கிடைக்கும் என்பது என் கருத்து.

தமிழ் ஜோதிடம் said...

எதுக்குமே ஒரு ப்ராப்தம் வேண்டும். ரசவாதம் கட்டுவதற்கு தகுதி, ஒழுக்கம், லவ்கீகம் இன்றி ஐதீகத்துடன் முயற்சி செய்யலாம். இதில் வெற்றி கொள்வதற்கு நிச்சயம் ஒரு சுழி வேண்டும். எல்லாரும் ஈஸ்சனுக்குள்ளே. ஆனால் எல்லாரும் ஈசனவது இயலுமா.

S.Chandrasekar said...

போகர் தன் சப்தகாண்டத்தில் கீழ்வரும் பாடலை பாடியுள்ளார். ஆக, தங்க ரகசியம் நமக்கு அம்பலமானாலும், அதன் செய்முறையில் நமக்கு வெற்றி கிட்டுமா ?

பலிக்குமே இத்தங்கம் பிரவித்தங்கம்
பாரிலுள்ள சிவயோகிக்கான தங்கம்
ஒலிக்குமே ஜெகஜோதியான தங்கம்
வுத்தமனே கருமிகட்கு வாயக்காதப்பா
நலியாளர் தங்களுக்கு இந்ததங்கம்
நாதியற்ற பேர்களுக்கு நவிலவேண்டும்
பலியாது கருமிகளாய் இருப்பாரானால்
பாருலகில் கருமிகட்கு வாய்க்காதன்றே.

அண்மையில் போகர்-சப்தகாண்டம் பற்றிய ஆய்வு நூலை முடித்தேன். அதில் இவற்றை தெரிந்து கொண்டேன்.

Post a Comment