இரசவாதம் - சொரூப ரசமணி...

Author: தோழி / Labels: , ,

இனி வரும் பதிவுகளில் கொங்கணவர் கூறியுள்ள் எட்டு விதமான வீரிய ரசமணிகளின் பண்புகளையும், அவற்றின் பயன்களையும் பார்ப்போம். அந்த வகையில் முதலில் சொரூப ரசமணி.


"வேளுநீ சுரூப மான
விளங்கிய மணி யின் விந்தைத்
தாளுநீ வாயிற் போடவே
தனிச் சூடன் தீபமாகும்
தீபம் போல் நிக்கும் தேகம்
சிதையாமல் தத்தியோடும்
கோபம் போம் முளையும் போம்
கொடிய வாசனையும் போம்
தாபம் போம் மயக்கம் போம்
தன்னையும் எடுக்கும் போம்
ரூபம் போம் சாயை போம்
நொடிக்குள் சித்தி பாரே"

- கொங்கணவர் -

சொரூப மணியின் விந்தையைக் கூறுகிறேன், இந்த மணியை வாயில் இட்டுக் கொண்டால் தேகமானது கற்பூர தீபத்தின் சுடர் போல தக தகவென்று பிரகாசிக்கும் நிமிர்ந்து நின்று சிதறாமல் ஒளிவிடும் தீபம் போல இருக்கும் அத்துடன், கோபம், ஆசை, சட நாற்றம், மனதின் மயக்கங்கள், இச்சைகள் அனைத்தும் போகும். இவையாவும் நொடியில் சித்தியாகும் என்று சொல்லும் கொங்கணவர் மேலும் தொடர்ந்து,

"சித்தியாம் ஞான சித்தி
சிறந்து வாஇத்தான் முன்னே
இத்தியா மறிய மாகில்
எளிதிலே ஞானம் வாரா
யேத்தியே நோக்க நோக்க
வெளுக்கவா சனையாற் கேட்டு
பத்திய மனமும் விட்டு
பட்டம் போலாடும் காணே
காணிந்த மணியைப் போட்டால்
கையிலே சிக்கும் போதம்
பூணிந்த மூல நாதருக்கு
பொருந்திய நந்தி சொன்னார்
வாழ்நந் திஎன்னக்கு சொல்ல
வளமாக பார்த்துக் கொண்டேன்
தாணிந்த போக மூர்த்தி
தன்பாத மறிந்தி லேனே"

- கொங்கணவர் -

சொரூப ரசமணியால் ஞான சித்தி, யோகா சித்தி கை கூடும் இதை முறையாக செய்யாதவர்களுக்கு இலகுவாக ஞானம் கிடைக்க வேறு மார்க்கம் இல்லை, இதை முறையாக செய்து வாயில் போட்டுக் கொண்டு மனக்கண்ணில் பார்க்க பூர்வ ஜென்ம பந்தம், உலக மாயை அனைத்தும் நீங்கும், இல்லையெனில் மேல்லோகத்துக்கும் கீழ் லோகத்துக்கும் இடையில் ஆன்மாவானது பல பிறப்புகள் எடுத்து பட்டம் போல் ஆடிக்கொண்டிருக்கும் என்று சொல்லும் இவர் இந்த மணியை செய்யும் முறையானது நந்தி தேவர் திரு மூலருக்கு சொன்னார், நந்தி சொன்ன இந்த முறையை என் குருநாதர் போகரின் அருளால் நானும் அறிந்து கொண்டேன் என்கிறார்.

அடுத்த பதிவில் காமதேனு ரசமணி, போக ரசமணி, சந்தான ரசமணிகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

7 comments:

jagadeesh said...

அருமை. "கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா!"

அண்ணாமலை..!! said...

கொங்கணவர் பாடல்களுக்கு நல்ல விளக்கம் தோழி!
தாங்கள் முந்தைய பதிவில் கூறியுள்ள
ரசமணி இந்த வகையானதா?
நன்றிகள்!

தமிழ் மதுரம் said...

கொங்கணவர் பற்றிய விளக்கமும், சொரூப மணியின் விந்தையின் விளக்கமு அருமை.

lalli said...

tholi,
can you tell us, how to prepare these rasamani.if possible

it will be better, as i think so, friend

jagadeesh said...

@lalli
The Making of Rasamani is explained in "இரசவாதம் - ரசமணியும், ரசலிங்கமும்",Topic,Also video added in it. find it in rasamani Labels.

rasamani said...

உண்மையான ரசமணி நீர் அருந்தும் தன்மை கொண்டது. உருகும் தன்மை கொண்டது.

B.பாஸ்கர். said...

வணக்கம்



தோழி , நல்ல உறவு, தங்களது பதிவுகளும் மிக மிக அருமையான பதிவுகள், உண்மையாகவே மிகவும் சிரமப் பட்டு தகவல் சேகரிக்கிறீர்கள், அவைகளை தாங்களே ரகசியம் காக்காமல் வெளியிடுவதே தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது, மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி.

Post a Comment