இரசவாதம் - ரசமணியும், ரசலிங்கமும்...

Author: தோழி / Labels: ,

பாதரசம் நீர்மை தன்மையான ஓர் தனிமம். இதை திண்மமாய் மாற்றிட நவீன அறிவியல் பல கோடி ரூபாய் செலவழித்து, பல்லாண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் செலவு அதிகம் வைக்கும் வழிமுறைகளை கண்டறிந்தனர்.

ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்கள் இதற்கான எளிய முறையினை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இதன் அருமை பெருமைகளை உணராது போனது நமது குற்றமே....

ரசவாதத்தின் துவக்க நிலையே பாதரசத்தினை கட்டுவதாகும். இதற்கென பல முறைகள் இருக்கின்றன. நமது தேவைக்கேற்ற வகையில் இந்த முறைகளை பயன் படுத்திக் கொள்ளலாம்.

பாதரசத்தை திண்மமாக்கி அதன் மூலம் ரசமணி, ரசலிங்கம் இவற்றை உருவாக்கலாம். சித்தர்கள் கூறியுள்ள முறைப்படி உருவேற்றிய பின்னர் இந்த ரசமணியை உடலில் அணிந்து கொள்ளலாம், பூசையில் வைத்தும் பூசிக்கலாம். இது பல்வேறு நல்ல பலன்களை தரும் என சித்தர்கள் கூறி இருக்கின்றனர். ரசலிங்கம் என்பது பூசைக்கு மட்டுமே உரியது. இதை வைத்து வணங்குவதால் நலம் விழையும் என கூறுகின்றனர்.

சித்தர் மொழியில் துரிசு எனப்படும் காப்பர் சல்பேட்டை தொடர்ச்சியாக புடம் போடுவதன் மூலம் கிடைக்கும் சுண்ணத்தை, விரலி செடியின் இலையுடன் சேர்த்து அரைத்து கிடைக்கும் சாற்றினை, சுத்தி செய்யப் பட்ட பாதரசத்துடன் சேர்த்து ( 2:1 என்ற விகித அளவில்) கல்வத்தில் இட்டு அரைக்க ரசம் கட்டும்.

திரைந்த நிலையில் இருக்கும் ரசத்தை தேவையான அளவில் உருட்டி மணிகளாகவோ, லிங்கமாகவோ செய்து கொள்ள வேண்டும். எளிதாக சொல்லி விட்ட இந்த முறை, செயற்ப்பாடு அத்தனை இலகுவானதில்லை, நிறைய நேரமும், பொறுமையும், செலவும் பிடிக்கும் ஒன்று. முறையான பயிற்சி மற்றும் அனுபவம் நிறைந்தவர்களால் மட்டுமே இதை செய்ய இயலும்.

சமீபத்தில் இந்த முறையில் நான் முயற்சித்ததில் குருவருளால் ரசம் கட்டியது. அதனைக் கொண்டு நான் உருவாக்கிய ரசமணி மற்றும் ரசலிங்கத்தின் படங்களை இத்துடன் இணைத்திருக்கின்றேன்.

இரசமணி...இரசலிங்கம்...
ரசமணி தொடர்பான மின்னஞ்சல்களை தவிர்க்கவே விரும்புகிறேன். இந்த பதிவுகளின் நோக்கம் தகவல்களை பகிர்ந்து கொள்வது, மற்றும் இது தொடர்பான எனது அனுபவங்களை பதிந்து வைப்பது மட்டுமே, வேறெந்த நோக்கமும் எனக்கு இல்லை. இதை புரிந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.

ரசமணி செய்வதை பற்றி யூ ட்யூபில் கிடைத்த வீடீயோ ஒன்றினையும் பாருங்கள்...
சித்தர்கள் இராச்சியத்தின் 200 வது பதிவு இது, இந்த நேரத்தில் இந்த பதிவின் வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்ப உதவிகளை செய்து தரும் நண்பர் திரு. விவேகானந்தன் அவர்களுக்கும், மற்றும் இந்த முயற்சியில் தொடர்ந்து எனக்கு ஊக்கமும், ஆலோசனைகளை அளித்துவரும் நண்பர்களுக்கும் என்னுடன் இந்த பதிவில் இணைந்திருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

Vijai said...

வாழ்த்துக்கள் .. உங்கள் எழுத்துப்பணி சிறக்கட்டும்

chandru2110 said...

ரசமனியில் செய்த இரண்டும் நல்லா இருக்கு. வெற்றி கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி. இன்னும் பல சித்த மருத்துவ முறைகளை செய்து வெற்றி காணுங்கள். இருநூறு சீக்கிரம் ஐநூறு ஆகட்டும்.

PAISAPOWER said...

உங்கள் குருவின் அருளால் இரசவாதி ஆகிவிட்டீர்கள்....வாழ்த்துகள்.

இருநூறுக்குக்கும் வாழ்த்துகள், இன்னும் பல நூறு பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

தமிழ் அமுதன் said...

இது ஒரு அரிய பதிவு ..! வழங்கியமைக்கு நன்றிகள்..!

இருநூறுக்கு வாழ்த்துக்கள்..!

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள்

jagadeesh said...

செய்தே காட்டி விட்டர்கள். வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் நிறைய சாதிக்க அந்த ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

பாலா said...

நீங்க நிறைய வியத்தகு சாதனைகள் பல செய்ய குருவருள் உடனிருக்கும்....
இன்னும் பல ஆச்சர்யங்களை காண ஆவலுடன் இருக்கிறேன்..

வாழ்த்துக்களுடன்
பாலா
கோவை

Unknown said...

Dear sister

very very useful message..........

Thanks
Srini

Unknown said...

good

Manikandan said...

i want rasamani can u give one? agathiyar arul irunthal enaku kidaikattum

Unknown said...

Ungalidam Padilla virumpuhiren.enghu erukkireer

Unknown said...

nalla thagaval. nan patharasam patri collecting detials. its important one. Thank you

Unknown said...

Ethu padithapin oru vishayam solkiren. rasam kattiyavathu. perithalla. rasathei kolluvathu enpathu than perithu avane. devan

vasu said...

Sir I can make mercury metal..and fire proof..and acid proof...I think we should meet together to progres our work..so plz call if u like my work..I think no one made mercury metal..and fire proof...and acid proof ...so plz call...me...9008390082

Post a Comment