யோகம் - சில தெளிவுகள்

Author: தோழி / Labels:

ஆசையெனும் பெருங்கடலில் சிக்கித் தவிப்பதுதான் மனித வாழ்வென ஆகிவிட்ட சூழ்நிலையில், அத்தகைய மனிதர்களை மீட்டெடுக்க மனித குலத்திற்கு கிடைத்த அரும்பெரும் கொடைதான் யோகம்.

"யோகா" என்கிற வடமொழிச் சொல்லுக்கு, ஒருவரின் எண்ணங்களையும் , சிந்தனைகளையும் ஒருமுகப் படுத்தி அதனை செயல்படுத்துவது என்பதாக பொருள் சொல்லப் படுகிறது. இதனையே மனிதனாகிய ஜீவாத்மா, இறை நிலையான பரமாத்மாவோடு இணையும் செயல் என ஆன்மீக விளக்கமாகவும் கூறுகின்றனர்.

யோகத்தில் என்னதான் நடக்கிறது?

தூய்மையான எண்ணம், செயல், சிந்தனையுடன் உயர்வான இறை நிலையினை தியானித்து எமது உடம்பிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மனதை ஒருமுகமாக்கி, அதன் ஆற்றலை உயர்வான இறை நிலையோடு இனைத்துக் கொள்வதுதான் யோகாமுலம் நிறைவேறுகிறது.

யோக மார்க்கத்தில் ஈடுபடுவோரை யோகி என்கின்றனர். யோகி எனப் படுபவர் இனப துன்பங்களுக்கும், பந்த பாசங்களுக்கும், புகழ்ச்சிகளுக்கும், தூற்றுதல்களுக்கும் அப்பாற்பட்டவராக இருப்பர்.

எல்லா வினைகளுக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. இது மனிதனுக்கும் பொருந்தும், தான் செய்யும் ஒவ்வொரு செயலின் எதிர்வினையை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாத போது, நிலை தடுமாறி சீர்குலைந்து துன்ப சகதியில் வீழ்ந்து அல்லல் படுகிறான்.

இத்தகைய துன்பங்களில் இருந்து தன்னை விடுவித்து பற்றற்ற நிலையை உருவாக்கி தருவதே யோகம் ஆகும். இப்படி விடுபட்டோரே யோகியாவர்.

ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் யோகமார்க்கத்தில் ஈடு பட்டு இறை நிலையினை அடையலாம். இதற்கு சாதி, மத, சமுதாய தடைகள் என எதுவும் கிடையாது. எனினும், யோகமார்க்கத்தில் வெற்றி அடைய சில நியதிகள் உள்ளன அவற்றை முறையாக கடைப்பிடிப்பவர்கள் குறுகிய காலத்திலேயே யோக மார்க்கத்தில் வெற்றியடையலாம்.

அதென்ன நியதிகள்? அடுத்த பதிவில் பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

puduvaisiva said...

யோகத்தை மன தூய்மையுடன் மிக விழிப்பு நிலையுடன் ஒருவன் பின்பற்றினால் அவன் தன் நிழலை கூட கட்டுப்படுத்த முடியும்.

நன்றி தோழி

jagadeesh said...

அருமையான இடுகை. அவசியமான இடுகை. பிரமாதம் தோழி, வாழ்க வளமுடன்.

jagadeesh said...

எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள்.

prince said...

யோக மார்க்கத்தில் ஈடுபடுவோரை யோகி என்கின்றனர். யோகி எனப் படுபவர் இனப துன்பங்களுக்கும், பந்த பாசங்களுக்கும், புகழ்ச்சிகளுக்கும், தூற்றுதல்களுக்கும் அப்பாற்பட்டவராக இருப்பர்.///

தெளிவு பிறந்தது!!! நன்றி தோழி

rajsteadfast said...

Anbin Thozhi,

Thodarnthu Thangal Pathivugalai padithu Payan adaikirom. Sanskrit Mozhi Patriya Sithhargalin
padalgalgal or thagavalgal pattri therinthukolla aavalaai ullom. Thayavu seithu ithu pattriya pathivugal ida vendukirom.

Nanri.

Srividhya R said...

waiting for next post..........

nagen said...

பூவுலகில் பிறந்த ஒவ்வொரும் கற்கவேண்டிய கலை
யோகக்கலை

OHM SIVASAKTHINAGAMMAL said...

எத்தனை காலமுந்தான் யோகம் இருந்த்தால் என்
முக்தனும் ஆவாயோ மோட்சமும் உண்டாமோ?

Dr Rajesh Dhandapani - +919442610118 said...

moksam peruvatharuku vali enna

OHM SIVASAKTHINAGAMMAL said...

நல்ல குருநாதரை அனுகி
யோகம்
நிஷ்டை
சமாதி
மஹா சமாதி
போன்ற தீட்சைகளை பெற்று மோட்சம்
அடைய முயற்ச்சி செய்யவும்.
நன்றி.
அன்புடன்
ஆர்.கண்ணன்.

OHM SIVASAKTHINAGAMMAL said...

நல்ல குருநாதரை அனுகி
யோகம்
நிஷ்டை
சமாதி
மஹா சமாதி
போன்ற தீட்சைகளை பெற்று மோட்சம்
அடைய முயற்ச்சி செய்யவும்.
நன்றி.
அன்புடன்
ஆர்.கண்ணன்.

OHM SIVASAKTHINAGAMMAL said...

நல்ல குருநாதரை அனுகி
யோகம்
நிஷ்டை
சமாதி
மஹா சமாதி
போன்ற தீட்சைகளை பெற்று மோட்சம்
அடைய முயற்ச்சி செய்யவும்.
நன்றி.
அன்புடன்
ஆர்.கண்ணன்.

vinnoli said...

மிக்க அருமையான விளக்கம்

Unknown said...

asaivam sapiduvathai nirutukal

tinamum kalai mallai siva mandiram oru 1/2 mani neram solugal suma erukum pothum solugal eravanin nillaya ninaivil erukal. siddar samathiku adikadi sendru varukal... jevakarunyathai kadipidikal..mukthi adiyalam.

Post a comment