சித்தர்களைப் பற்றிய தேடலில் மிகவும் சுவாரசியமானதும், மர்மங்கள் சூழ்ந்த ஒரு தலைப்பினை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.
புதிர்களுக்கும், புரட்டுகளுக்கும் குறைவில்லாத தீனியை தரும் அந்த தலைப்பு "இரசவாதம்"
இரசவாதம் என்னும் சொல்லுக்கு இரசத்தை வேதித்தல் என பொருள் கொள்ளலாம், வேறு வகையில் பாதரசத்தைக் கொண்டு அதை தேவையான வகையில் உருமாற்றம் செய்து கொள்ளுதல் என்றும் கொள்ளலாம்.
பொதுவில் இரசவாத முறை ரெண்டு நிலைகளைக் கொண்டது.
ஒன்று பாதரசத்தை தின்மமாக்கி அதை ரசமணி, ரசலிங்கம் போன்ற உருவங்களாக செய்தல்.
மற்றது மட்டமான உலோகங்களான ஈயம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்பு போன்றவற்றை உயர் உலோகமான தங்கமாக மாற்றுவது.
இப்போது உங்களுக்கு இதெல்லாம் சாத்தியமா என்கிற எண்ணம் வரலாம்...
ஏனெனில் கடந்த காலங்களில் இரசவாதிகள் என்று சொல்லிக்கொண்டோர், பொன் செய்வதாக சொல்லி, மக்களின் பணம், பொருட்களைக் பெற்றுக் கொண்டு ஓடிப் போன கதைகள் நிறைய உண்டு. இரசவாதம் செய்கிறேன் என தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர் இருக்கின்றனர்.இம்மாதிரியான தவறான பல முன்னுதாரணங்கள் ரசவாதம் என்பதே ஏமாற்று வித்தை என்பதாக கருத்துக்கள் உருவாகிட காரணமாகி விட்டது.
ரசவாதத்தை விமர்சிக்கிறவர்கள் எவரும், இதன் பின்னால் இருக்கும் உண்மைத் தன்மையை பற்றி ஆராயமல், அல்லது அது பற்றிய முறையான அறிதல் இல்லாமல் கருத்து சொல்கின்றனர் என்பதே எனது ஆதங்கம். எடுத்தேன் கவிழ்த்தேன் என கருத்துச் சொல்வதை தவிர்க்க வேண்டும்.
சித்தர்களின் சோதிட, மருத்துவ, மாந்திரீக, யோக, ஞான நூல்களின் உண்மைத் தன்மை இன்றைக்கு அரசாங்கங்களே ஏற்றுக் கொள்ளப்பட்டு மேலதிக ஆய்வுகளை நடத்துகின்றனர். இரசவாதமும் இப்படி மேலதிக ஆய்வுகள் தேவைப்படும் ஒரு தத்துவம் என்பதுதான் நிதர்சனம்.
ஒரு அடிப்படை அறிவியல் தத்துவம் ஒன்றினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்....
தாவரங்கள் எல்லா இடத்திலும் பச்சையாகவே இருப்பதில்லை. இந்த பச்சையின் நிறம் மாறுபடும், ஏன் சில இடங்களில் சிவப்பான தாவரங்களைக் கூட காண முடியும். இந்த நிறத்தை நிர்ணயிக்கும் நிறமிகளின் பின்னால் இருப்பது அந்த தாவரத்தில் மிகுந்திருக்கும் உலோக உப்புகள் என்பது தாவர இயலில் நிரூபிக்கப் பட்ட உண்மை. இதற்கு அந்த தாவரம் இருக்கும் மண்ணும் காரணம்.
குறிப்பிட்ட ஒரு உலோகம் அந்த செடியால் ஜீரணிக்கதக்க வகையில் உப்பாக இருக்கிறது என்று அர்த்தம். வேறு வகையில் சொல்வதானால் இயற்கையாகவே உலோகம் உப்பாக உருமாறி தாவரம் ஜீரணிக்கத்தக்க நிலையை அடைந்துள்ளது.
உலோகம் உப்பாக மாற முடியுமானால், உப்பை ஏன் உலோகமாக மாற்ற முடியாது?
இந்த இடத்தில்தான் இரசவாதம் உங்களுக்கு விடைகளோடு வருகிறது.
அடுத்த பதிவில் இரசவாதம் செய்பவரின் தகுதி மற்றும் அடிப்படைகளை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

5 comments:
ஒருவகை மலை தாவரத்தின் இலை மிகவும் தடிமனாக இருக்குமாம் அந்த இலையில் ஒரு துத்தநாக கம்பியை குத்தி வைத்து விட்டு மறுநாள் எடுத்தால் அந்த கம்பி செம்பாக மாறி இருக்கும் என கேள்வி பட்டு இருக்கிறேன். அது உண்மையா..? அதற்க்கு சாத்தியம் உண்டா..?
///உலோகம் உப்பாக மாற முடியுமானால், உப்பை ஏன் உலோகமாக மாற்ற முடியாது?///
முடியும்...!
மயில் துத்தம் எனப்படும் காப்பர் சல்பேட்டை நெருப்பில் போட்டு உருக்கினால் முதலில் புகைந்து போய் கடைசியில் கொஞ்சம் செம்பு எஞ்சி நிற்கும்.
அப்படி போடுங்க. விழித்தெளியுங்கள் தோழர்களே!
வெறும் ஆன்மீகத்துடன் கூறாமல் அறிவியலோடு இணைத்து அருமையா சொல்லியிருக்கீங்க..!
//உலோகம் உப்பாக மாற முடியுமானால், உப்பை ஏன் உலோகமாக மாற்ற முடியாது?// நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதற்கான விடையை.
@தமிழ் அமுதன்
COPPER CAN REACT WITH NITRIC ACID AND PRODUCE COPPER SULFATE. WHICH CAN BE RECONVERTED IN TO COPPER METAL.
HENCE உப்பை உலோகமாக மாற்ற முடிYUM.
Post a Comment