மந்திர யோகம் - "பஞ்சதசாட்சரி"

Author: தோழி / Labels: ,

மந்திரயோகம் தொடரில், இதுவரை சொல்லப்பட்ட மந்திரங்களைப் போல மிக சிறப்பானதும் சித்தர்களால் தங்கள் சீடர்களுக்கு இரகசியமாக உபதேசிக்கப் பட்ட பஞ்சதசாட்சரி மந்திரம் பற்றிய தெளிவுகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

இந்த மந்திரமானது பதினைந்து அட்சரங்களை கொண்டதால், இதை பஞ்சதசாட்சரி மந்திரம் என்று அழைக்கின்றனர்.

காலங்காலமாக இந்த மந்திரமானது குருமுகமாகவே சொல்லப்பட்டு வந்துள்ளது. சித்தர்களும் தங்கள் பாடல்களில் இதை மறைத்தே பாடியுள்ளனர்.

"சுகாராதியோ ரைந்துங் கானிய பொன்மை
அகராதி யோரா றத்தமே போலும் வாக்பவம்
சகராதி யோர் நான்கும் தான் சுத்த வெண்மை
சுகாராதி மூவித்தை காவிய முத்தியே"

- திருமூலர் -

என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். இதில் வரும்,

சுகாராதி ஐந்து :- க , ஏ , ஈ , ல , ஹ்ரீம்.
அகராதி ஆறு :- ஏ , ஹ , ஸ , க , ல , ஹ்ரீம்.
சகாராதி நான்கு :- ஸ , க , ல , ஹ்ரீம்.

மூவித்தை என்பது மூன்று கூடத்தைக் குறிக்கும்

அவையாவன, வாக்பவ கூடம் , காமராஜ கூடம், சக்தி கூடம். இந்த மூன்று கூடத்திற்கும் மூன்று நிறங்கள் குறிக்கப் படுகிறது, அவை முறையே பொன்னிறம், செந்நிறம், வெண்ணிறமாகும் என்று திரு மூலர் குறிப்பிடுகிறார்.

இந்த அட்சரங்களை கொண்டு உருவாக்கப் பட்டது தான் பஞ்சதசாட்சரி மந்திரம். இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கும், இதை புவனேஸ்வரி சக்கரத்தில் அமைத்து வழிபடுபவர்களுக்கும் நினைத்ததெல்லாம் உடனடியாக ஈடேறும் என்றும், அட்டமா சித்துக்களும் கைவரப் பெரும் என்றும் அகத்தியர் சொல்கிறார். ஆனால் அவரும் இந்த மந்திரத்தை மறைத்தே பாடியுள்ளார்.

குருவருளை வேண்டி, முயற்சியுடன் கூடிய தேடல் உள்ள எவருக்கும் இந்த மந்திரம் கிடைக்கும். நான் அந்த மந்திரத்தை இங்கே பகிர்ந்து கொள்ள இயலாதவளாக இருப்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த மந்திரத்தை பற்றியும், அதன் பெருமை பற்றியும் ஆனந்த லகரியும் சொல்கிறது.

இத்துடன் மந்திர யோகம் பற்றிய தொடரை நிறைவு செய்கிறேன்...பிரிதொரு சந்தர்ப்பத்தில் தொடர முயல்கிறேன்.

இனி வரும் பதிவுகளில் சித்தர்கள் அருளிய ரசவாதம் பற்றியும், அதில் எனது பரிசோதனை மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

மங்குனி அமைச்சர் said...

இனி வரும் பதிவுகளில் சித்தர்கள் அருளிய ரசவாதம் பற்றியும், அதில் எனது பரிசோதனை மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.///


செய்யுங்க

கொல்லான் said...

சித்தகளைப் பற்றி ''தெளிவான'' கருத்துக் கொண்டிருக்கும் ஒருவரை நான் உங்களுக்கு அறிமுகம் செய்யலாமா? ஏனெனில் சித்தர்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் மதிப்பு காரணமாக தெளிவான வழிகாட்ட விரும்புகிறேன்.

jagadeesh said...

பொதுவாக மந்திரங்களை எத்தனை முறை ஜெபிக்க வேண்டும். மந்திரங்களை சொல்லும் போது கடை பிடிக்க வேண்டியவை ஏதேனும் உண்டா?

Unknown said...

சுகாராதியோ ரைந்துங் கானிய பொன்மை
அகராதி யோரா றத்தமே போலும் வாக்பவம்
சகராதி யோர் நான்கும் தான் சுத்த வெண்மை
சுகாராதி மூவித்தை காவிய முத்தியே"

- திருமூலர் -

அப்படியானால் இது பஞ்சதசாட்சரி மந்திரம் இல்லையா?

அப்படி தங்களிடம் அந்த மந்திரம் இருப்பின் பகிர்ந்து கொள்வதில் தவறில்லையே தோழி.

நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன் தோழி.. நாம் எவ்வளவுதான் முயன்றாலும் எது எது யார் யாரை சென்றடைய வேண்டுமோ அது அது அவரவர்களை சென்றடையும்.

தாங்கள் அந்த மந்திரத்தை பதித்தாலும் யார் அதை மதித்து ஆராதனை செய்கிறார்களோ அவர்களுக்கு தாஙக்ள் பேருதவி செய்ததாக இருக்கட்டுமே..

Anonymous said...

விமல்

தோழி,
நீங்கள் கூறுவது முற்றலும் சரி. ஜரோப்பாவின் கிறிஸ்தவ மிசனரிகளில் 16ம் நூறறாண்டிலிருந்து இரசவாதத்தை கண்டறிய இரகசியமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகவே பல இரசாயனம்(வேதியியல்) வள ர்ச்சியடைந்தது. They found many formulas by mistake

thilipkumara said...

i love tirumular

thilipkumara said...

I LOVE THIRUMULAR

Post a Comment