தாய்மை வழிபாடு அல்லது சக்தி வழிபாடு என்பது தொன்மையானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். இந்த சக்திக்குரிய மந்திரமாக "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை குறிப்பிடுகிறார் திருமூலர்.
பிரணவ மந்திரம் எப்படி சிறப்பாக விளங்குகிறதோ அது போலவே "ஹ்ரீம்"சிறந்து விளங்குகிறது.
"ஓங்காரி யென்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே யினித்தி ருந்தாளே"
- திருமூலர் -
பிரணவ வடிவான, பச்சை நிறத்தையுடைய தேவி பஞ்ச கிருத்தியங்களுக்கும் படைக்க முனைந்த பொழுதில், சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய ஐவரை தனது அம்சமாக உருவாக்கிய பின்னர் "ஹ்ரீம்" என்ற பீஜத்தில் எழுந்தருளினாள் என்கிறார் திருமூலர்.
ஹ் + ர் + ஈ + ம் = "ஹ்ரீம்" என்பதாவது, சிவ பீஜம் , அக்கினி பீஜம், மகாமாயை, விந்து ஆகியவற்றைக் குறிக்கும். இது புவனங்களுக்கேல்லாம் ஈஸ்வரியான புவனேஸ்வரியின் வடிவமாகும்.
"ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி மனதை அலைபாய விடாமல் ஒருமுக படித்ததினால், முக்காலமும் உணர்ந்து, மரணத்தை வென்று என்றும் ஜீவித்திருக்கலாம் என்றும் சொல்கிறார் திருமூலர். அத்துடன்,
இந்த "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை தியானிக்கும் போது மூலாதாரத்தில் ஹ் - என்ற எழுத்தையும், இதயத்தில் ர் - என்ற எழுத்தையும்,புருவ மத்தியில் ஈ - என்ற எழுத்தையும், சிரசில் ம் - என்ற எழுத்தையும் நியாசம் (தியானம்) செய்தால் அட்டமாசித்தும் கைகூடி வரும் என்கிறார்.
அதனால் தேவி வழிபாட்டிற்கு உரிய மூலமந்திரமான "ஹ்ரீம்" சிறப்பானதும், உயர்வானதும் ஆகும். குருமுகமாக உபதேசம் பெற்று பயனடைந்திடலாம்.
அடுத்த பதிவில் சித்தர்களால் இரகசியமாக பாதுகாக்கப் பட்டதும், உயர்வானதுமான பஞ்சதசாட்சரி மந்திரம் பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

5 comments:
நன்று. // சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன்// மூவரும் சிவன் ஒருவன் தானே?
@jagadeesh
சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன் மூவரும் சிவனின் அம்சமாக கொள்ளப்படுகின்றனர்.. நன்றி.
உங்களின் அனைத்து பகுதியும் சிறப்பாக உள்ளது .
தோழிக்காக ஜகதீஷ் அவர்களுக்கு பரமேஸ்வரன், தன்னில் தானாக இருக்கும்போது சதாசிவன். உமா என்ற பார்வதியுடன் இருக்கும்போது உமா மகேஸ்வரன். கோபம் கொண்டு பக்தர்களைக் காக்க வரும்போது ருத்ரன்.
@jagadeesh
சிவன் எப்போதும் தன்னில் தானாக இருக்கும்போது சதாசிவன் , துணைவி உமா என்கிற பார்வதியுடன் இருக்கும்போது உமா மகேசன், கோபம் கொண்டு பக்தர்கலைக் காக்க எழும்போது ருத்ரன்.
Post a Comment