மந்திரயோகம் - “பிரணவம்”...

Author: தோழி / Labels:

மந்திரங்களில் தலையாயதும் முதன்மையானதும் ஓம் என்னும் பிரணவ மந்திரம் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். மிரளும் பிரணவமாகிய ஓம் என்பதன் தத்துவத்தினை இந்த பதிவில் காண்போம்.

ஓம்என்கிற பிரணவ மந்திரத்தினை மற்ற மந்திரங்களை உச்சரிக்கும் பொது முதலில் சேர்த்து உச்சரிக்க வேண்டியது அவசியம்.

இதனை தாரக மந்திரம், பிரணவம் என்பார்கள், தாரகம் என்றால் ஒன்றை தாண்டச் செய்வது என்று பொருள். கப்பலுக்கு தாரகம் என்று ஒரு காரண பெயர் உண்டு. கப்பல் எப்படி கடலைக் கடக்க மனிதர்களுக்கு உதவுகிறதோ, அது போல பிறவிக் கடலை கடப்பதற்க்கு பிரணவ மந்திரம் உதவுகிறதால் அதனை தாரக மந்திரம் என்று அழைப்பர்.

பிரணவம் என்பதற்க்கு ப்ர - பிரபஞ்சம், - என்றால் இல்லை, - உங்களுக்கு அதாவது இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு பிரபஞ்சதிற்கான பந்தம் அற்றுவிடும் என்பது பொருள்.

ஓம்என்னும் மூலத்திலிருந்தே எல்லா வேதங்களும் மந்திரங்களும் பிறந்தது. என்றும், எனவே இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு எல்லா மந்திரங்களும் ஜெபித்த பயன் கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.

பிரம்மா இந்த பிரணவ ஜெபம் செய்தே பிரம்ம பட்டமடைந்ததாககாசிகாண்டம்குறிப்பிடுகிறது. பிரம்மனால் இந்த பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல முடியாததால் முருகனால் குட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கந்த புராணம் சொல்கிறது. அத்துடன் இந்த பிரணவ மந்திரத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசம் செய்த முருகன் சுவாமிநாதர் என்னும் பேர் பெற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

உலக ஸ்ரிஷ்டிக்காகவும், நன்மைக்காகவும், சிவனின் கையில் இருக்கும் உடுக்கையும், விஷ்ணுவின் கையில் இருக்கும் பாஞ்ச சன்யம் என்கிற சங்கும் எப்போதும் ஓங்கார ஒலியை எழுப்பிக் கொண்டே இருக்கும்.

இந்த தாரக மந்திரத்தை சைவர்கள் ஆத்ம பஞ்சாட்சரம் என்றும், வைணவர்கள் சூட்சும சடாட்சரம் என்றும் சொல்வர். இந்த ஓங்காரத்தின் பெருமையை சித்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"

என்று திரு மூலரும் இந்த ஓங்காரத்தின் பெருமையை உரைக்கிறார்.

இனி, இந்த மந்திர வரிசையில் அடுத்ததாக பஞ்சாட்சரம் பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

வலையகம் said...

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்
www.valaiyakam.com

வலையகம் said...

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்
www.valaiyakam.com

KadalPura said...

உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்...
தமிழ் சித்தர்கள் சொல் படித்து என் சிந்தை சிறிது சிதறாமல் உறுதியடயக்கண்டேன்..
நன்றி

jaisankar jaganathan said...

நன்றி. அருமை. அப்படியே ஓம் என்னும் மந்திரத்தின் பொருளையும் விளக்கவும்

Post a Comment