கண்நோய் காரணிகளும், மருந்தும்...

Author: தோழி / Labels: , , ,

"பாரே பொடிக்கடல் பருவ வெயில் மேற்படல்

வாறே கொங்கையாள் மாயை மிகச்செயல்

சாயே முளுக்கறல் கண்ணால் அனல்பார்த்தால்

சீரேறு பாஷாணம் தின்றதால் கண்நோய்"

- திருமூலர் வைத்திய சாரம் 600 -

கடுமையான வெய்யில் உடம்பில் படும் படியாக இருப்பவர்களுக்கும், பெண் மோகம் அதிகமாக கொண்டவர்களுக்கும், மிக அதிக வெளிச்சத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும், மிக வெப்பமான பொருள்களை உற்று பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்யாத பாசாண வகைகளை உண்பவர்களுக்கும் கண்நோய் வரும் என்று சொல்லும் திரு மூலர் மேலும்,

"கண்நோய் வரும் காரணம் இன்னும் கேள்
புண்ணான மேகத்தால் பருவேட்டை வாயுவால்
தன்னாம் மலக்கட்டால் தன்சலக் கட்டினால்
புண்ணாம் இரணத்தில் போடும் காரத்தாலே"

- திருமூலர் வைத்திய சாரம் 600 -

கண் நோய் வருவதற்கான காரணங்களையும் சொல்கிறார். மேகத்தாலும், வாயுவாலும், மலச்சிக்கல் வருவதாலும், சிறு நீரை அளவுக்கதிகமாக அடக்குவதாலும், புண்ணான காயங்களுக்கு போடும் கார மருந்துகளாலும் கண் நோய் வரும் என்று சொல்வதோடு,

"காரச்சுருக்கால் கடும் ராசா தூமத்தால்
நேரொத்த சாரம் நிறை மூக்கின் வாசத்தால்
பாரொத்த பேதியால் பலப்பல தண்ணீரால்
சீரொத்த கண்ணில் பிறக்கும் வியாதியே"

- திருமூலர் வைத்திய சாரம் 600 -

கண்நோய் வருகிற வேறு சில காரணங்களும் உள்ளது, பாத ரசத்தின் புகை படுவதாலும், நவச்சாரம் போன்ற மருந்துகளுன் வாசனையை நுகர்வதாலும், அதிகமாக பேதியாவதாலும், பலவகையான நீரைப் பருகுவதாலும் கண்களில் நோய் ஏற்படுகிறது என்கிறார்.

அத்துடன் அதுக்கு அவரே மருந்தும் சொல்கிறார்,

"இந்துப்பு திப்பிலி இயல்பீத ரோகிணி
நந்திப்பூச்சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக் கருந்ததி தோன்றிடும்
நந்திக்கு நாதன் நயந்து உரைத்ததே"

- திருமூலர் வைத்திய சாரம் 600 -

கண் நோய் ஏதும் உண்டானால், இந்துப்பு, திப்பிலி, பீத ரோகிணி ஆகியவற்றை எடுத்து நந்திய வட்டை பூவின் சாற்றுடன் சேர்த்து மிருதுவாக அரைத்து கண்ணில் பூசிவந்தால் கண்நோய் குணமாகும், அத்துடன் குருடனுக்கும் பார்வை கிட்டும் இதை நந்திக்கு சிவன் சொன்னது என்கிறார் திருமூலர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

15 comments:

கொல்லான் said...

//கொங்கையாள் மாயை மிகச்செயல்
//
பொருள் புரிகிறதா?
//பெண் மோகம் அதிகமாக கொண்டவர்களுக்கும்,//
தவறு. இதன் பொருள் பெண்ணுக்கு உடம்பு என்றொரு பெயரும் உண்டு. இப்பொழுது கொண்டு கூட்டி பொருள் கொள்க.

தமிழ் மதுரம் said...

நவீன அறிவியலில் கண்டறியப்பட முன்பே எமது சித்தர்கள் நிறைய விடயங்களை அர்பணித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். தங்களின் பதிவுகள் தான் மரபு நடையில் பரவியிருக்கும் சித்தர்களின் கருத்துக்களை உரை நடையினூடாக எம்மோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது என்று கூறலாம். நல்ல முயற்சி. தொடர்ந்தும் நிறைய அறிவுரைகள், ஆலோசனைகள், குறிப்புக்கள் வழங்க வாழ்த்துக்கள் தோழி.

தங்க முகுந்தன் said...

இன்றைய ஞாயிறு தினக்குரலில் - இந்த வார நட்சத்திரமாக தாங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள்! எமது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

தோழி said...

@கொல்லான்

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...

suharman said...
This comment has been removed by the author.
Eswari said...

இந்துப்பு, பீத ரோகிணி ன்ன என்ன?

தோழி said...

@Eswari

இந்துப்பு, பீத ரோகிணி என்று கேட்டால் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்... நன்றி.

anandbluestar said...

hi thozhli , i am Anand . thanks for sharing ur konwledge . i am always welcome ur greatfull service . i give very very great and royal salute for you .................

Naveen said...

Dear Thozhi,

Kan Purai ullavarkaluku medicine yethenum ullatha?

CKGOPINAATHAN said...

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விராழியூர் என்ற கிராமத்தில் ஸ்ரீமத் குரு குமாரசுவாமி ஜீவசமாதி அமைந்து உள்ளது.இவர் 1854 ஆம் ஆண்டு பிறந்தார். தனது 14 ஆம் வயதில் சிவபெருமானின் ஆசி பெற்று பாம்பு கடித்து இறந்து போனவர்களை 72 மணிநேரம் கழித்து உயிர் பிழைக்க வைக்கும் மந்திர உபதேசத்தை பெற்றார்.1934 ஆம் வருடம் தை மாதம் கிருத்திகை நட்சத்திரம் செவாய் கிழமை மாலை 6 மணிக்கு தன்னுடைய 300 ஹேக்கர் நிலத்தையும் தானமாக கொடுத்துவிட்டு ஜீவசமாதி அடைந்தார்.அதன்பிறகு அவருடைய பேரன் திரு ராமசாமி ஸ்வாமிகள் அதனை பராமரித்தார்.அதன்பிறகு அதன் வழிபடு முறையை யாருக்கும் சொல்லாமல் மறைந்துவிட்டார். சுமார் 50 வருடங்களுக்கு பிறகு திரு ராமசாமி சுவாமிகளின் தம்பி மறைந்த தெய்வத்திரு குமாரசாமி அவர்களின் மூன்றாவது மகனான அடியேன் கோபிநாதன் அந்த ஜீவசமாதி கண்டுபிடித்து பூஜை செய்து வருகிறேன்.அந்த ஜீவசமாதியில் வில்வம் என்று அழைக்க கூடிய ஸ்ரீ விருச்சம் சுயம்பு ஆக வளர்த்து உள்ளது.இதற்கு சுகர்மஹரிஷி நாடி ஜோதிட குறிப்பும் உள்ளது. மேலும் தகவலுக்கு 9944560139

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Unknown said...

dear friend,
is there any remedy for chronic renal failure

karthik said...

Dear Friend,
I like almost all your post. But,my humble request, please don't forget to mention these in your post," don't try these things without any proper sitha practioner". (especeially for eye, nose, tongue).

Unknown said...

தங்களின் தளத்தில் குறிப்பிடப் பட்டு உள்ள கண் மருத்துவத்துக்கான பீதரோகிணி மூலிகை இலங்கையில் பெற்றுக்கொள்ள மிக சிரமமாக உள்ளது. இம்மூலிகையை பெற்றுக்கொள்ள எதுவாக இம்மூலிகயுன் நிழல் படத்தை தந்து உதவுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி

Post a Comment