யோகம் பயில்வோர் சந்திக்கும் தடைகள்...

Author: தோழி / Labels:

முழுமையான தன்முனைப்போ அல்லது, கவன குவிப்போ இல்லாது யோகம் பயிலும் போது, பயிற்சி செய்பவருக்கு தடைகள் பல வரும் என்று சொல்லும் பதஞ்சலி முனிவர், அத்தகைய தடைகளை பின்வருமாறு விளக்குகிறார்.

எண்ணங்களைக் குழப்பும் சிந்தனைகள் உருவாகும், இதை "சித்த விகஷோப" என்கிறார்.

உடலை வருத்தும் நோய்களும் அதனால் உருவாகும் தடையினை "ஸ்தியானா"என்கிறார்.

தான் பயிலும் யோகம் கைகூடுமா என்கிற சந்தேகம் உருவாகும் மனத் தடையினை "சம்சயா" என்கிறார்.

அலட்சியத்தன்மையையினால் உருவாகும் கவனச் சிதறலை "பிரமாதா" என்கிறார்.

தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கைவரப் பெற்ற மன ஒருமைப் பாட்டை தக்க வைத்துக்கொள்ள இயலாமல் அதை இழக்கும் தன்மையை "அனாவஸ்த்திதத்வா" என்றும் குறிப்பிடுகிறார்.

எனவே, ஒருவர் யோகப் பயிற்சி செய்யும் போது இது போன்ற தடைகளை எதிர் கொள்ள உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். இவை முறையான குருவின் மேற்பார்வையில் பயிலும் போது தவிர்க்கப் படும்.

தடைகள் எது வந்த போதிலும் அதை தாண்டி தன் இலக்கை அடையும் மன உறுதியும், தீர்க்கமான சிந்தனையும் உள்ளவருக்கே யோகம் சித்திக்கும்.

அடுத்த பதிவில் யோகத்தின் உச்ச நிலை பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

தமிழ் மதுரம் said...

தடைகள் எது வந்த போதிலும் அதை தாண்டி தன் இலக்கை அடையும் மன உறுதியும், தீர்க்கமான சிந்தனையும் உள்ளவருக்கே யோகம் சித்திக்கும்//

தத்துவக் கருத்துக்களும் சொல்லுறீங்களோ?
யோகத்திலை கோபத்தைக் கட்டுப் படுத்த ஏதாவது வழிகள் உள்ளனவா? அவற்றையும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே?

jagadeesh said...

சில பேர் யோக மார்க்கத்தில் ஆரம்ப நிலையில் நன்றாக ஈடுபட்டு பின்னர் மனம் சிதறிவிடுவர். அத்தகையோருக்கு இது மிகவும் பயனுள்ள தகவல். மிக்கநன்றி.

தோழி said...

@தமிழ் மதுரம்

மனித வாழ்விற்கு தேவையான அத்தனை நல்ல குண நலன்களும் யோகத்தில் இருக்கிறது. கோபத்தையும் அடக்கலாம், குருமுகமாய் பயிலுங்கள்.. நன்றி..

nagen said...

எனக்கும் பல தடைகள் வந்தது யோகா பயிலும்போது.

may said...

மன்னிக்கவும்... இவைகள் தடைகள் அல்லவே... இவைகள் எப்போதும் இருப்பவை... சற்று சிந்தியுங்கள்... மனிதன் யோக நெறி தொடராவிட்டாலும் இவை உண்டே...

Post a comment