யோகத்தில் வெற்றியடைந்திட....

Author: தோழி / Labels:

உணவு உட் கொள்வதில் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். அருஞ்சுவை உணவாய் இருந்தாலும் அரை வயிறே உண்ணுதல் வேண்டும்.வட மொழியில் இதனை "மிதாகார" என்பர். அதாவது கூடுதலாய் இல்லாமலும், குறைவாக இல்லாமலும் மிதமாக உண்பதாகும்.

"பசித்த பின் புசி" இது சான்றோர் வாக்கு.பசியின் அளவிற்கு ஏற்றவாறு அல்லாமல் மிகுதியாக உண்டால் நோய் ஏற்படும். யோகம் பயில்பவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு முக்கிய காரணியாகிறது.

அளவுக்கு அதிகமாய் உண்பவனும், மிகுந்த பட்டினியால் வாடுபவனும் யோகத்தில் வெற்றி பெறமுடியாது.

இது போலவே, நாள் முழுவதும் குறட்டை விட்டு தூங்குபவர்களுக்கும், எப்பொழுதும் தூங்காமல் விழித்துக் கொண்டே செயலாற்றுபவர்களுக்கும் யோகம் வெற்றியளிப்பதில்லை.

இந்த பொல்லாத தூக்கத்தினால். தான் பல விசயங்களை இழந்து விட்டதாக கண்ணதாசன் தான் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

கடுமையான உடல் உழைப்பும் கூடாது, சோம்பேறித் தனமாகவும் உட்கார்ந்திருக்க கூடாது, அதிகமாக உணவு உண்டு ருசிக்கு அடிமை ஆகவும் கூடாது, அதற்க்காக பட்டினி கிடந்தது உடலை வருத்தவும் கூடாது.

உண்பது,உறங்குவது, உழைப்பது என எல்லாவற்றிலும் அளவுடனும், நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்.. இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக வெற்றியடையலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

Mugilan said...

ரொம்ப சரியா சொன்னீங்க தோழி! ஹூம்ம் இந்த இயந்திர வாழ்க்கையில பலதை இழக்கின்றோம்!

நிகழ்காலத்தில்... said...

//மிகுந்த பட்டினியால் வாடுபவனும் யோகத்தில் வெற்றி பெறமுடியாது//

அதனாலேயே வள்ளல் பெருமான் அன்னதானத்தை வலியுறுத்தினார்.

நல்ல பகிர்வு சகோ.

அண்ணாமலை..!! said...

நல்ல பதிவு தோழி!
கண்ணதாசன் தூக்கத்தினாலும், மறதியினாலும்
வாழ்க்கையில் இழந்தது நிறைய!!!!

Post a Comment