ஆணென்ன...பெண்னென்ன....?

Author: தோழி / Labels: , ,

ஆனாதிக்கமும், பெண்ணடிமைத் தனமும் ஓங்கியிருந்த அந்த கால கட்டத்தில் பெண்ணடிமைதனம் அல்லது ஆண், பெண் பாகுபாட்டினை எதிர்த்து கலகக் குரல் கொடுத்திருக்கிறார் சிவவாக்கியர்.

"அண்ண லேஅ னாதியே அநாதி முன்அ னாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றல்லோ பிறப்பதற்க்கு முன்னெலாம்
கண்ணிலானின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்த வாறு எங்கனே?"


- சிவவாக்கியர் -

கருவில் உயிர் நிலையில் ஆண் என்றோ பெண் என்றோ வேற்றுமை இல்லை. உயர்வான அந்த நிலையில் வேற்றுமை காணாதவர்கள், மனிதனாய் பிறந்த பின்னர் வேற்றுமை பாராட்டுவது ஏன்?

தன் சமகால சமூகத்திற்கெதிரான சிவவாக்கியரின் இந்த கருத்தினை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறேன். பாலின பாகுபாடு அல்லது பெண்ணடிமைத் தனத்தினை அவர் முற்றாக நிராகரித்தார் என்பதற்கு இந்த பாடல் மிக முக்கியமானதொரு ஆதாரம்.

ஆக உலகிலுள்ளவர்கள் சிந்தனையை சித்தர்கள் அறியாமல் இருக்கவில்லை. என்பதையே இது வலியுறுத்துகிறது..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

jagadeesh said...

''எங்கெல்லாம் மாதர் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வார்கள்,'' என்று புராதன மனு கூறியுள்ளார்.

அண்ணாமலை..!! said...

முற்றிலும் அரிதான தகவல்!
நன்றிகள் தோழி!

rajsteadfast said...

Migavum Nalla Thagaval.

Nanri

Post a comment