உணவே உயிர்..!

Author: தோழி /

மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழும் ரகசியமே அவனது உணவு பழக்க வழங்களில்தான் ஒளிந்திருக்கிறது. இதை நம்மில் பலரும் புரிந்து கொள்ளாமல் ருசிக்கு அடிமையாகி உடலை கெடுத்துக் கொள்கிறோம். நமது உணவுகள் அனைத்திலும் அமிலத்தன்மையும் காரத்தன்மையும் அடங்கியிருக்கிறது. இது உணவுப் பொருட்களின் தன்மையைப் பொறுத்து அளவில் வேறுபடும்.


ஆரோக்கியமான உடலமைப்பிட்கு எண்பது சதவிதமான காரத்தன்மையும், இருபது சதா வீதமான அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் இருந்தால் நிறைந்த சக்தியும் நீடித்த ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும் கிடைக்கும்.

சித்தர்கள் உணவை மூன்று கூறுகளாய் பிரித்து உணர்த்தி வைத்துள்ளனர். அவையாவன சாத்வீக உணவு, ராஜோ உணவு, தாமச உணவு என்பனவை ஆகும். சாத்வீக உணவு தூய்மையை தருபவையாகவும், ராஜோ உணவு உணர்ச்சிகளை தூண்டுபவையாகவும், தாமச உணவு ஆரோக்கியமற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.சித்தர்கள் பெரும்பாலும் சாத்வீக உணவையே உண்டு வாழ்ந்ததாக குறிப்புகள் கிடைக்கின்றன.

பால், வெண்ணை, தேன், பழவகைகள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவை சாத்வீக உணவிலும், மாமிசம், மீன் , பருப்பு வகைகள் மற்றும் சூடாக உண்ணப்படும் உணவு வகைகள் ராஜோ உணவிலும், கருவாட்டு மாமிசங்கள், மது , லாகிரி, அதிகம் புளித்த உணவுகள் தாமச உணவிலும் அடங்குகிறது.

இதன் அடிப்படைகளை எங்கள் உடல் நலத்துக்கு ஏற்ற உணவை தெரிவுசெய்து ஆரோக்கியமாக வாழ் வோமாக...

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திப்போம்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

அகல்விளக்கு said...

நல்ல பகிர்வு தோழி...

உணவுப்பழக்கங்கள் பற்றி மேலும் பல தகவல்கள் எதிர்பார்க்கிறேன்...

Asiya Omar said...

உணவே உயிர் அருமை.short & sweet ஆக சொல்லி அசத்திட்டீங்க.

Murugeswari Rajavel said...

kaara vagai unavu patri sollungal

தோழி said...

@MURUGU

மிருகங்களின் மாமிசம், தானியம் இவைகளில் அமில தன்மையும், பச்சை பட்டாணி, கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் காரத்தன்மையும் உள்ளது... நன்றி..

Sasikumar C said...

Really wonderful information...i'll try to implement the same...thanks thozhi

Unknown said...

தோழி அவர்களுக்கு கடந்த சில வருடங்களாக பால், பாலில் சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்களும் விஷமாகி வருவதால் பால் மனிதனுக்கு ஏற்ற உணவே இல்ல்லை மற்றும் பழங்களில் ஆப்பிள், பேரிக்காய் சாப்பிடக்கூடாது காரணம் அவைகளில் ஆர்சனிக் பாய்சன் உள்ளது இந்தத்தகவல் இன்டர்நெட்டில் பார்க்கலாம்.....

Unknown said...

good info.
there are more about this in 9th text book(tamil)

Post a comment