அகத்தியர் அருளிய விகுர்தரச் சித்து...

Author: தோழி / Labels: , , ,

"காணவே விரோதமாய சித்து சொன்னேன்
கருவான விகுர் தரச் சித்துக் கேளு
பேணவே சிவன் வேம்பு சமூலம் கொண்டு
பிரளவே நொறுக்கி அதில் வகையைக் கேளு
தோணவே அண்டமோடு பிண்டம் கூட்டி
காருக்காக பாண்டமது விட்டுக் கொண்டு
நாணவே குளித் தைலம் வாங்கு வாங்கு
நன்மையுள்ள தைலமத்தில் வகையை கேளு"

- அகத்தியர் -

"வகையென்ன கற்பூர சுண்ணம் போட்டு
மத்தித்து ரவிமுகத்தில் வைத்துப் போற்றி
திகையாதே தைலமத்தை நாவில் தீத்தி
செப்பக் கேள் தின்பண்டமேல்லாம் தின்க
நகையாதே தின்றதேல்லாம் இனிக்கும்பாரே
நன்மையுள்ள செலங்கலேல்லாம்அமிர்தமாகும்
பகையான பகைகலேல்லாம் தன்மையாகும்
பக்குவமாய் இக்கருவை பகர வொண்ணாதே"


- அகத்தியர் -

சிவனார் வேம்பு சமூலம் கொண்டு வந்து நறுக்கிக் கொண்டு அதில் குழித்தைலம் எடுத்து, அந்தக் குளித்தைலத்துடன் கற்பூரச்சுண்ணம் போட்டு நன்கு கலக்கி சூரிய ஒளியில் வைத்து பின்னர் சூரியனை வணங்கி எடுக்கவும்.

இதை நாக்கில் தடவிக்கொண்டு எதை தின்றாலும் இனிக்குமாம். நஞ்சும் அமிர்தமாகும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

jagadeesh said...

பெரும்பாலும் சித்தர்கள் பஞ்சபூதங்களையும், இறைவனையும் வணங்கியே எந்த மூலிகையும், மருந்தையும் உண்ணும் முறை வகுத்துள்ளனர். நல்லது.

தமிழ் மதுரம் said...

உங்களின் யாழ்தேவி வாக்குப் பட்டையினைக் காணவில்லை?

தமிழ் மதுரம் said...

தோழி தங்களின் ஒரு சில பதிவுகளுக்கு நான் வழங்கிய பின்னூட்டங்களைக் காணவில்லை?

தோழி said...

@தமிழ் மதுரம்
இயன்றவரையில் எல்லா பின்னூட்டங்களையும் அனுமதிக்கிறேன். தவறுதலாக ஒரு சில பின்னூட்ங்களை நீக்கப்பட்டிருக்கலாம்.

எனது நண்பர் ஒருவர்தான் வலைபதிவின் வடிவமைப்பில் உதவுகிறார். விரைவில் இனைத்துத் தருவதாய் கூறியிருக்கிறார்...
நன்றி...

sundaram kandaswaami said...

please visit and read the contents------

http://time2rich.com/kanda

Unknown said...

it is worth and
very use full

Post a comment