சனி நீராடு? ஏன்?, எதற்கு?

Author: தோழி / Labels: , ,

சனி நீராடு!, தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் தொட்டுத் தொடரும் ஒரு வாசகம். நம்மைப் போல உஷ்ணமான சீதோஷ்ன நிலை பகுதியில் வாழ்வோருக்கு தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள் சொல்வதை, என்றைக்கோ நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இதன் பின்னால் இருக்கும் அநேக விஷயங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் படாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த வகையில் குறிப்பாக "புதன், சனி நீராடு" என்பது பிரபலமான சொல்லாடல், ஏன் புதன் சனி நீராடு என்கிறார்கள்?

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

"கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்
கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்
பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்
பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்
தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்
தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்
நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க
நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."


- தேரையர் -

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

இவற்றை அனுபவமோ அல்லது ஆராய்வோ இல்லாமல் எழுதியிருக்க முடியாது. இவற்றின் பின்னால் இருக்கும் சூட்சுமங்களும், அறிவியல் நுட்பங்கள் இன்னமும் ஆராயப் பட வேண்டியுள்ளது...

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

28 comments:

jagadeesh said...

அருமையான இடுகை. நல்லது தோழி. "புதன்,சனி" நீராடு தான் சிறந்தது. ///**ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும்**// அதாவது அழகை பாழ் படுத்திவிடுமா?

Praveenkumar said...

தகவல்களை அருமை தோழி ..! முன்னோர்கள் அனைத்திலும் அனுபவப்பட்டே எழுதியிருக்கீங்க..! என்பதை இதன்வாயிலாக அறியலாம்..!

Asiya Omar said...

இவ்வளவு சின்ன வயதில் அருமையான விஷ்யங்களை விளக்கி வரும் உங்கள் ப்ளாக் அற்புதமாக இருக்கு.பாராட்டுக்கள்.

Anonymous said...

good

தோழி said...

@jagadeesh

ஆமாம் உடல் அழகை பாதிக்கும்... நன்றி..

vithyasagar said...

arumaiyana pathivu

Unknown said...

thozhi great miga nandru thangaludaiya pani sirakattu enathu ennangalukku unkalathu pathivu vadivam koduthullathu mikka makilchi enathu nedunaalaiya aasai sidharkal noolai ezhiya thamil yaavarum puriyum vannam mozhi perarpathu athai thaankal thiram pada seithulleerkal mikka nandru aaga arumai men melum ezhuthu pani sirakka adiyen mahalingathai prarthikiren

Unknown said...

i too have interest in our knowledge this shows our country's intelligence, proven methods to follow, to be healthy and wealthy.
this is the second time i am posting my comments in the net. you inspired me to put reply,yes it deserve a appreciation.
good
keep it up

sithika

Molagaa said...

இணையதளத்தில் எங்களுக்கு கிடைத்த ஒரு அறிய பொக்கிஷம் தான் தோழி நீங்கள், நன்றி , தொடரட்டும் உங்கள் ஆன்மிக சேவை

Bharathi pitthan said...

நல்ல விசயம்!நல்ல விசயம்!

Sasikumar C said...

Wonderful article...

Viswa said...

Great Job Thozhi, Vazhga Valamudan.

Sriram said...

Thanks for the article. Oil is extracted from Til(Ellu)-> Nalla+ Ellu+ Nei(Nalennai). As per astrology Ellu is also linked with saturn. Hope this helps.

vengaiyan said...

நன்றி. தங்கள் இடுகை நன்றாக இருக்கிறது.

மேலும் நான் எனது பிறந்த நேரத்தினை அறிய ஆசைப்படுகிறேன். எனது பிறந்த நாள் ஏப்ரல்7-1975 கும்ப ராசி, சதய நட்சத்திரம் ஆகும். my mail id siva2306@gmail.com

vengaiyan said...

நன்றி. தங்கள் இடுகை நன்றாக இருக்கிறது.

மேலும் நான் எனது பிறந்த நேரத்தினை அறிய ஆசைப்படுகிறேன். எனது பிறந்த நாள் ஏப்ரல்7-1975 கும்ப ராசி, சதய நட்சத்திரம் ஆகும். my mail id siva2306@gmail.com

vengaiyan said...

ஏப்ரல்7, 1975 கும்பராசி, சத்ய நட்சத்திரம். எனது பிறப்பு நேரத்தினை தெரிவியுங்களேன்.

Arun said...

Hai,
Thalai muluku-vathu endral, 'Thalai kulipatha allathu kulikavea kutathu enba-tha?'.

Thanks.

Unknown said...

Have a question, than why female need to do head oil both on Tuesday and Friday?

Karthi said...

THis is for men. What about women? Women normally take oil bath on tuesday and friday.

Unknown said...

நன்று ஆனால் வெள்ளி கிழமை செவ்வாய் கிழமை குளிப்பது சிறந்தது என்று எப்படி சொல்வார்கள்

Unknown said...

nanri

Unknown said...

aamam aamam

Unknown said...

aamam aamam

Unknown said...

in my childhood my granne was telling that men should take oil bath every saturday [and/or] Wednesday , women should take oil both in every Friday [and/or] Tuesday. and there is a proverb in tamil and it is indicating us the important of taking oil bath. " Vaithiyanukku kodukkurathu vaaniyanukku kodukkanum" Vaithiyan - Doctor , Vaaniyan - the person who is selling oil.

Unknown said...

Sir one of my friend having rpes HSV-2 can you please tell me how to cure this virus, since there is no permanent cure, it will be helpful to everybody in the world

Unknown said...

Good

Unknown said...

GOOD

Unknown said...

good

Post a comment