இரசமணி - சில தகவல்கள்...

Author: தோழி / Labels:

பாதரசம் எனப்படும் தாதுவே இரசம் எனப்படுகிறது. இதை சிவனின் சொத்து என்கின்றனர். திரவ நிலையில் இருக்கும் அத்தகைய உயரிய இரசத்தை முறையாக கட்டி மணியாக்கி, சித்தர்கள் பயன்படுத்தினர்.

இரசமணி கட்டுவது என்பதுதான் ரசவாதத்தின் முதல் படி, இரசத்தை கட்டும் முறை தெரிந்தவன் தெய்வ அனுக்கிரகத்தை பெற்றவன், நவக்கிரகங்களின் ஆசி பெற்றிருப்பவன். அவனே ரசவாதியாகும் முழு தகுதியும் கொண்டவனாவான். அவனை மற்றவர்கள் தேவர்களுக்கு சமமாக மதிக்க வேண்டும் என்கிறார் கருவூரார்.

"இருந்து பார் சூதத்தை எவ்வண்ணத்தாலும்
இருக்கினவன் தேவனடா இடுக்கமில்லை
"

- கருவூரார் -

"ஆண்டகை தன மோதிரம் அடுத்த பொருளெல்லாம்
தீண்டளவில் வேதிகைசெய் தெய்வ மணி கொல்லோ"


- கம்பர் -

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... இத்தனை மகத்துவம் பொருந்திய இரச மணியால் கிடைக்கும் பயன்கள் அநேகம். அந்த பயன்களை இரண்டு பகுதிகளாக வகுக்கலாம்.

ஒன்று ஞான நிலை அடைய விரும்புபவர்களுக்கு பயன்படும் விதம், மற்றயது உலக இன்பங்களில் வாழ்பவர்களுக்கு பயன் படும் முறை.

முதலில் உலக இன்பங்களில் வாழ்பவர்களுக்கான பயன்கள் பற்றி பார்க்கலாம்...

இந்த இரசமணியைக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால், உடலிலுள்ள முப்பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகியவை சமப்பட்டு தமது நிலைகளில் சீராக இயங்க வைக்கும். இதனால் இவை தொடர்பான எந்த நோயும் உடலைத்தாக்காது பாதுகாக்கும்.

மேலும் நவக்கிரக கோசார பதிப்புக்கள் , பில்லி , சூனியம், செய் வினை போன்றவை அண்டாது பாதுக்காக்கும்.

இடி மின்னல் பருவ மாற்றங்கள் பாதிக்காது மற்றும் விலங்குகள் விஷ பிராணிகள் போன்றவை இம் மணி வைத்திருப்பவர்களை அண்டாது.

இனி ஞான நிலை பெற விரும்பியவர்களுக்கு இம்மணி செய்யும் பலன் பற்றி பார்க்கலாம்.

இராசமனிக்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் தன்மை இயற்கையிலேயே அமைந்திருப்பதால் எந்த பொருளின் சத்தை அதற்க்கு கொடுத்தால் என்ன பலன் தரும் என்பதை அறிந்து செயல்பட வைக்கும் திறமை ஞான நிலை பெற விரும்பியவர்களுக்கு உண்டு.

நவ லோகம் , நவமணி, நவ பாஷாணம் ஆகியவற்றின் சத்துக்களை இதற்க்கு சாரணை முறை மூலம் ஊட்டி அதை வாயில் அடக்கிக் கொண்டு யோகம் பயின்று ஞான நிலை பெறுவார்.

அத்துடன் உடலோடு உயர எழும்பி ஆகாய மார்க்கமாக செல்லும் கேகன குளிகையாகவும் செயல்பட வைப்பார்.

இது போன்று பல சிறப்புக்களைக் கொண்ட இந்த ரசமணியை நாம் உபயோகிக்கும் முறையை பொறுத்து அது பலன் தரும். இதை கட்டும் வழிமுறைகள் பலவற்றை சித்தர்கள் ஒளிவு மறைவின்றி அனைவரும் பயன்பட பாடி வைத்துள்ளனர்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

சிவகுமார் சுப்புராமன் said...

ரசமணி பற்றிய தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி தோழி!

kamal said...

i want bambo leaves jose

maheshraja said...

தோழி வணக்கம்,

என்னுடைய பெயர் மகேஷ்ராஜா, மதுரையிலிருந்து எழுதுகிறேன்.
இது என்னுடைய முதல் பதிவு.
நான் கிட்டதட்ட உங்கள் site-ல் உள்ள அனைத்து பதிவுகளையும் படித்திருக்கிறேன்.

நான் கீழே குறிப்பிட்டிருக்கும் செய்முறை மற்றொரு site-ல் படித்தது. எனக்கு அதில்
குறிப்பிடப்பட்டிருக்கும் கௌரி என்ற பொருள் என்ன? அது கௌரி பாஷாணமா அல்லது கௌரி என்ற வேறு பொருளா அல்லது சந்தையில் கிடைக்கும் மஞ்சப்பாஷாணமா? என்ற என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்யவும்.
அப்படி கிடைத்தால் அது தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும். நான் மதுரையில் இருக்கிறேன்.
தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி தோழி.சண்முகச் செந்தூரம் :- சுத்திசெய்த லிங்கம் வராகனெடை-1, சுத்திசெய்த வீரம் வராகனெடை-1, சுத்திசெய்த பூரம் வராக னெடை-1, சுத்திசெய்த தாளகம் வராகனெடை-2, சுத்திசெய்த கௌரி வராகனெடை-1, சுத்திசெய்த வெடியுப்பு வராகனெடை-1, இவைகளைப் பொடித்து கல்வத்திலிட்டு முட்டை வெண்கருவிட்டு
இரண்டு ஜாமம் நன்கு அரைத்து பொடித்து காலியான் ஓர் முட்டைக்குள் செலுத்தி, மேலே ஓர் முட்டை ஓட்டை மூடிச்சீலைமண் செய்யவும். அவ்வாறு சீலைமண் செய்யும் போது முட்டை யின் மேல் பாகத்தில் ஒரு தம்படி அளவுக்கு முட்டை ஓடு தெரியும் படிவிட்டு மற்ற பாகங்களை யெல்லாம் மறையும் படி சீலை மண் செய்ய
வேண்டும். இது உலர்ந்த பின்பு ஓர் வாயகலமான சட்டியில் இரண்டு விரற்கடை உயரத்திற்கு மணற்கொட்டிப் பறப்பி அதன் நடுவில் சீலை செய்து வைத்துள்ள முட்டையில் வைத்து முட்டையின் முக்கால் பாகம் மறையும் படி மணலை கொட்டி, அசையாமல் அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து வரவும். மேலே தெரியும் முட்டை ஓடானது
வெந்து கம்பியால் தொட்டுப்பார்க்க துவாரம் விழுவதாக இருப்பின் அதுவே தக்கபதமென ஓர் இரும்பு கம்பியை முட்டையின் உள்ளே செலுத்தி துழவிப்பார்க்க மருந்துகள் உருவி கட்டியிருக்கும், அச்சமயம் கீழிறக்கி ஆற விட்டு முட்டையின் உள்ளே உள்ள மருந்தை மட்டும் அரைத்து பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு 2 அரிசிப் பிரமாணம் தினம் 2 வேளை தேனில் கொடுக்க சுரம், சந்நிகபசுரம், சுவாசகாசம் முதலியன குணமாகும்

Post a comment