சித்தர் மரபியலில் அட்டமா சித்திகளையும் அடைந்த பதினெண் சித்தர்கள் மேலானவர்களாக போற்றி வணங்கிடப் படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இந்திய துனைக் கண்டத்தினை சேர்ந்தவர்கள். காலத்தால் மிகவும் முந்தியவர்கள்.
பலரும் அறிந்திடாத தகவல் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் சித்தர்களைப் போலவே ஈழத்து சித்த பரம்பரை என ஒன்று இருந்திருக்கிறது. இவர்கள் காலத்தால் பிந்தியவர்கள். சமூக அமைப்பில் இருந்து விலகியவர்களாய் இருந்ததால், இவர்கள் குறித்த பெரிதான குறிப்புகள் ஏதும் நமக்கு கிடைக்க வில்லை.
நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களை பார்க்கும் வேளையில் இவர்களைப் பற்றிய விவரங்கள் ஆச்சர்யம் தருபனவாய் இருக்கிறது. சில பெண் சித்தர்களைப் பற்றிய குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன.தமிழகத்தில் இருந்து வந்து போன சித்தர்களைப் பற்றிய குறிப்புகள், ஈழத்துச் சித்தர்கள் ஜீவசமாதியடைந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள் என பகிர சுவாரசியமான தகவல்கள் அவை!
இந்த குறிப்புகளின் அடிப்படையில், ஈழத்தின் நாக்கு திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருப்பதாக தெரிகிறது.
அவையாவன, வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிட் சுவாமிகள் சமாதியும், கிழக்கே காரை தீவில் சித்தனைக் குட்டி சுவாமிகள் சமாதியும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் சமாதியும், தெற்கே நாவலப் பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் விளங்குகின்றன.
ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்...
கடையிற்சுவாமிகள்.
பரம குரு சுவாமிகள்
குழந்தை வேற் சுவாமிகள்.
அருளம்பல சுவாமிகள்.
யோகர் சுவாமிகள்
நவநாத சுவாமிகள்
பெரியானைக் குட்டி சுவாமிகள்
சித்தானைக் குட்டி சுவாமிகள்
சடைவரத சுவாமிகள்
ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
செல்லாச்சி அம்மையார்
தாளையான் சுவாமிகள்
மகாதேவ சுவாமிகள்
சடையம்மா
நாகநாத சித்தர்
நயினாதீவு சுவாமிகள்
பேப்பர் சுவாமிகள்
செல்லப்பா சுவாமிகள்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...
Post a Comment



4 comments:
நல்ல, அறிந்திராத தகவல்கள்!
மிக்க நன்றிகள்!
சித்தர்கள் என்றாலே "தமிழ் உணர்ந்தவர்கள்" மட்டுமே.
இரசமணி பற்றி அறிந்த்தில் மகிழ்ச்சி கமலிக்குளிகை, அட்டமாசித்திக் குளிகை,வராகக்குளிகை,சித்த இரசமணி, நவநீத இரசமணி, தொடுப்பு இரசமணி, சிராவண இரசமணி பற்றி எழுதவும். நன்றி,வணக்கம். கே.எல்.டி.மாரியப்பன்.
சித்தானைக் குட்டி சுவாமிகள் பத்தி பதிவு போட்டுட்டேன்......பாருங்க என்னோட வலைப்பூவ...
Post a Comment