சித்தர்கள் கணித்த சோதிடம்...

Author: தோழி / Labels: ,

"இதென்ன கிரகச்சாரம் " இது பேச்சு வழக்கில் நாம் அடிகக்டி கேள்விப்படும் வார்த்தையாடல்,இந்த கிரகசாரம் என்பது கிரகங்களின் போக்கில் விளையும் அல்லது சஞ்சரிப்பதால் ஏற்படும் சார பலன் அல்லது கோசார பலன் என்று சொல்வர்.

குறிப்பிட்ட சமயந்தில் கிரகங்கள், நட்சத்திரம், ராசி போன்றவைகள் இருக்கும் நிலையை அனுமானித்து அதன் மூலம் நடந்ததை நடப்பதை நடக்க போவதை சொல்லும் முறையினைத்தான் சித்தர்கள் உருவாக்கிய ஜோதிட முறை என்கிறோம்.

ஜாதகங்கள் கணிப்பதில் தவறு இருக்கலாமே தவிர ஜோதிடம் தவறல்ல என்பது என் கருத்து. ஒருவரின் பிறந்த நேரம் சரியாக இருந்து அதன் படி சரியாக கணித்து விட்டால் ஜோதிடம் ஒருபோதும் தவறாகாது.

சித்தர்கள் ஜோதிடம் கணிக்க மூலமாக கொண்ட சில காரணிகள் மற்றும் கூறுகளை பின் வருமாறு பட்டியலிடலாம்....

நட்சத்திரங்கள்.
அயனங்கள்.
ராசிகள்.
ருதுக்கள்.
நட்சத்திராதிபதி.
லக்னாதிபதி.
கிரகங்கள்.
கிரகங்களின் பார்வைகள்.
கிரகங்களின் ஆட்சி வீடுகள்.
கிரகங்களின் உச்ச நீச இஸ்தானங்கள்.
கிரகங்கள் ராசியில் இருக்கும் கால அளவு.

இவற்றைக் கொண்டு கணிப்பதன் மூலம் நடந்த, நடக்கும், நடக்க போகிற பலன்களை சரியாக சொல்லும் முறையே சித்தர்களால் சொல்லப்பட்ட சோதிடம் ஆகும்.

இதற்க்கு உதாரணமாக ஒரு சில அகத்தியர் பாடல்களை கீழே தந்துள்ளேன்...

"ஞாயிறு திங்கள் செவ்வாய் நற்குரு வெள்ளி கூடிற்
காயுரு பிதிர் துவேஷி காரிரா கூவும் காணே"

- அகத்தியர் -

"இனியதொரு மிதுன பலன் கேளு கேளு
..................................................................
தனிமையா லிருபத்தேட்டில் கண்டால்
தரும் சுபகிரகமே பார்த்தால் மைந்தா
தக்கதோர் வருஷம் அறுபத்து மைந்தும்
தரையினில் லிருப்பார் என்று ராயப்பா"


- அகத்தியர் -


அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

கொல்லான் said...

அதே அகத்தியர், ஜோதிடம் என்பது மக்களுக்கு ஒரு பிடியாதாரமாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அதிலேயே மூழ்கி விடக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்.

VELU.G said...

என்னங்க திடீர்ன்னு சோசியம் எல்லாம் பாக்க ஆரம்பிச்சிட்டீங்க

kimu said...

அருமையான பதிவு.
தொடரட்டும் உங்கள் பயணம்.

வாழ்த்துக்கள்.

Vijai said...

astrology is a science and always true.But it depends on the person who caliberates it .

தோழி said...

@kalavum kattrum ara

சோதிடம் என்பது அறிவியல் என்பது உண்மைதான், ஆனால் அதன் வெற்றி, தோல்வி என்பது கையாள்பவரை பொறுத்தது...

navan said...

சோதிடம்..ஜோதிஷம்....இப்படி எப்படி வார்த்தைகள் போட்டாலும்..இதன் அர்த்தம் ஒளி உள்ள இடம். வெளிச்சம். கண்... வழி...செல்ல
வேண்டிய பாதை..இப்படி அர்த்தப் படுத்தி..தற்கால நம் சிந்தனை செயல்களை
நெறி படுத்திக் கொள்ள வேண்டும்.

RMG said...

arputham thozhi ungaludaya pani potruthalukkum,
vanakkathukkum uriathu-kidaitharkariya pokkishathai engalukku vazhangi varugireerkal-
guruvarul nichayam thunai nirkum -RMG-

RAVINDRAN said...

நண்றி

Post a comment