நாடி சோதிடம்... சில நெருடல்கள்...

Author: தோழி / Labels:நாடி சோதிடம் நம்மில் பலர் ஆச்சர்யத்துடன் மலைக்கவைக்கும் அதிசயம். சித்தர்களால் உலகிற்கு அளிக்கப் பட்ட கொடை, இதுவரை பிறந்த அல்லது இனி பிறக்கப் போகிற ஒவ்வொரு மனிதன் குறித்து என்றைக்கோ எழுதி வைத்துவிட்டுப் போனா விலைமதிப்பில்லா பொக்கிஷம்...இப்படியெல்லாம்தான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.

இதைக் குறித்து விரிவாய் பார்ப்பதற்கு முன்னர், இம்முறை குறித்த ஓர் அறிமுகம். அதாவது ஒருவரின் கை ரேகையினை மட்டுமே வைத்து அவருக்கான ஏடை தேடியெடுத்து அவரின் பலன் சொல்வதுதான் இந்த முறை. ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையும் தேவைப் படும்.இதில் இன்னொரு நிபந்தனை கூட உண்டு. உங்களுக்கு விதிக்கப் பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் நாடி சோதிடம் பார்க்க முடியும்.

உங்களுக்கான ஏடுகள் என சிலவற்றை எடுத்து வந்து உங்களிடம் வாசித்துக் காட்டுவர். அதில் எது உங்களின் விவரங்களோடு பொருந்தி வருகிறதோ, அதுவே உங்களுக்கான ஏடு. அதில் உங்களுக்கு கூறப்பட்டிருக்கும் பலன்களை சோதிடர் வாசித்துக் காட்டுவார். நீங்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.

இனி இது தொடர்பாக என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சித்தர்களின் பெயரில் சொல்லப்படும் மூட நம்பிக்கைக்களையோ மலிவான வியாபார உத்திகளையோ நான் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அதன் பொருட்டே எனக்கான தேடலை தொடங்கி நான் அறிந்த மற்றும் உணர்ந்த தகவல்களை பதிவும் செய்கிறேன்.

இதனை சொல்வதால் நான் சித்தர்களின் பாடல்களையோ, அவர்கள் சொன்ன செய்திகளையோ சந்தேகிக்கிறேன் என்று அர்த்தமில்லை, பலரும் நம்பாத சித்தர்களின் ரசவாதம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை மற்றும், ஆர்வத்துடனும் தொடர்ந்து தேடுதல் செய்து வருகிறேன்.

நான் புரிந்து கொண்ட வகையில் சித்தர்கள் நாடி என்பது ஒரு குறிப்பிட்ட தனி மனிதர்களை சார்ந்ததாக இல்லை. மேலும் அவர்கள் தனிமனிதர்கள் குறித்து பெரிதாக எதுவும் எழுதியதும் இல்லை. தனது குரு, அல்லது சீடர் பற்றிய குறிப்புகளைத் தவிர வேறு எதுவும் குறிப்பிட்டு சொல்ல கூடியாதாக இல்லை.

நிதர்சனம் இப்படி இருக்க உலகில் பிறந்த, வாழ்கிற, பிறக்கவிருக்கின்ற மனிதர்கள் எல்லோருக்கும் தனிதனி ஏடுகள் எழுதிவைத்தார்கள் என்றால் அதன் உண்மை தன்மை குறித்த ஐயப்பாடுகள் ஏற்படுவது இயற்கையே.

மேலும் அவர்கள் பாடல்கள் எல்லாம் மறை பொருளில் பாடப்பட்டவைகளே, அப்படி இருக்க, இந்த நாடி ஜோதிடத்தில் மட்டும் தெளிவாக எழுதியிருப்பதன் மர்மம் என்ன? என்பதுதான் என்னுடைய தேடலின் துவக்க புள்ளி.

சித்தர்கள் சோதிடம் பற்றி எதுவும் சொல்ல வில்லை என்று அர்த்த மல்ல, சித்தர்கள் சோதிடத்திலும் வல்லவர்களே, அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ரேகைகளை கொண்டு எழுதியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தான் சொல்கிறேன்.

அப்படியானால் சித்தர்கள் சொன்ன நாடி என்பது என்ன?

சித்தர்கள் சொன்ன நாடி என்பது நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட, கையைப் பிடித்து நெட்டை வாக்கில் பெருவிரலுக்கு மேலே இருக்கும் ஆரை எலும்பின் மேலே ஓடும் நாடியை மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலாக மூன்று விரல்களால் சமமாக மெதுவாய்த் தொட்டு நாடியைக் கண்டு கொண்ட பின் விரல்களை மாற்றி மாற்றிப் பார்த்தால் நாடி நடையைத் தெரிந்து கொள்ளும் முறை மட்டுமே...

இதற்க்கு உதாரணமாக அகத்தியர் நாடியின் ஒரு சில பாடல்களை கீழே தந்துள்ளேன்...

"கரிமுகனடியை வாழ்த்தி கைதனில் நாடிபார்க்கில்
பெருவிரலங்குலத்தில் பிடித்த நடுவே தொட்டால்
ஒருவிரலோடில் வாதம் முயர்நடுவில் பித்தம்
திருவிரல் மூன்று லோடிற் செத்தும நாடியாமே."


- அகத்தியர் நாடி -

"ஆகிய நாடி மூன்றும் படபடவேன்றோடிற் சென்னி
வாக்கினிலன்னம் கோழி மயிலென் நடக்கும் வாதம்
எகியவா மையட்டை இவையென நடக்கும் பித்தம்
போகியே தவளை பாம்பு போல்வான் சேத்துமம் தானே"


- அகத்தியர் நாடி -

அப்படியானால் சித்தர்கள் ஜோதிடம் கணித்த முறை என்ன? அடுத்த பதிவில் பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

40 comments:

jagadeesh said...

மிக சுவாரஸ்யமான தலைப்பு. தொடருங்கள். உங்களை பாராட்ட தமிழில் வார்த்தைகளே இல்லை.

தமிழ் மதுரம் said...

யாழ்தேவியின் நட்சத்திரமாகத் தாங்கள் ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள். நாடி ஜோதிடம் உண்மையா? பொய்யா?

கொல்லான் said...

எனக்கு நாடி சோதிடத்தில் நூறு சதம் உண்மையாக நடந்திருக்கிறது. காரணம், நாட்டில் நாடி சோதிடம் பார்ப்பவர்களில் மொத்தமே மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே உண்மை. மற்றவர்கள் டுபாக்கூர் ஆசாமிகள்.

டவுசர் பாண்டி... said...

நாடிஜோதிடம் என்பது ஒரு வகையான புதிர் விளையாட்டு போலத்தான், நம்மிடமிருந்தே தகவல்களை கறந்து அதனை வைத்து நமக்கே கதை சொல்லும் வித்தையை நானும் பல தடவை பார்த்திருக்கிறேன்.

rajsteadfast said...

Payanulla Thagaval.

EEn Nanbarkku paarka senra pothu,
Olai suvadi kondu Avargal sonna thagavalgal ,
Migavum Aacharyamaaga irunthathu..

உலகில் பிறந்த, வாழ்கிற, பிறக்கவிருக்கின்ற மனிதர்கள் எல்லோருக்கும் தனிதனி ஏடுகள் எழுதிவைத்தார்கள்???

Intha Dout thaan yenakkum vanthathu.

Ithai patriya pathivugalai aavaludan yrthir paarkiren.

Nanri

seeprabagaran said...

சித்தர்கள் பற்றிய தங்களின் ஆய்வு பாராட்டுக்குரியது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

தாங்கள் சுட்டிக்காட்டியுள்ள நாடிபார்க்கும் முறை உடற்கூறு பற்றியும் நோய்நொடி பற்றியும் அறிந்து கொள்வதற்கானது.

நாடி சோதிடத்தில் குறிப்பிடப்படும் நாடி விரல் ரேகை அடிப்படையிலானது. சோதிடத்தில் குறிப்பிடப்படும் 12 இராசிகளுக்கான 27 நட்சத்திரங்களையும் நான்கு பாதங்களாக பிரித்துள்ளனர் 27 x 4 = 108. அதுபோல் நாடி சோதிடத்திலும் மனித குலத்தை 108 வகையாகப் பிரித்துள்ளனர். இதனடிப்படையிலே நாடி சோதிடம் பார்க்கப்படுகிறது.

Anonymous said...

@seeprabagaran

enakku naadi parthu solla mudiyuma prabakaran....

my email id is gautam.sathish@gmail.com

Anonymous said...

enakkum naadi parka vendum, yaravathu paarthu solla mudiyuma, my id is gautam.sathish@gmail.com

Anonymous said...

idhil sillaruku unmaiyaga nadanthu irruku. silaruku nadakavilai.yeppadi irrundhalum naam nam life la nammaium kadavulaium thavira yedhaium nuzhaiya vidakudathu.

vidhi yenbadhu nada irrupathu adhai madhiyal vellum podhu vidthi palan illamal pogum. piragu yedharku indha nadi jothidam yella?????????????????????????

Anonymous said...

தோழி அவர்களுக்கு கை ரேகை கொண்டு நாடி பார்ப்பது உண்மை இல்லை என்று கூருகிற் சரி , ஆனால் இன்னொரு வகையான நாடி உள்ளதே அதைபற்றி தாங்கள் ஒன்றும் கூறவில்லையே , அதுதான் ஜீவ நாடி , சித்தர்களே நேரடியாக வந்து பேசும் முறையை பற்றி தங்கள் கருத்து என்ன? ஏனெனில் நான் சமிபத்தில் அகத்தியர் அருள் வாக்கு பார்த்தேன் ( ஜீவ நாடி) அதில் அகத்தியர் நான் கேட்ட அனைத்தும் கேள்விக்கும் பதில் தந்து மேலும் எனக்கு ஆறு மாதத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக இருக்கும் என கூறினார் . தங்கள் பதிளுக்காக் காத்திருக்கிறேன்

நிலாமதி said...

அறிவாளிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

ராவணன் said...

ஆதாரம் உங்கள் வீட்டுப்பரணில் இருந்தால் மட்டுமே நம்புவீர்களா? சித்தர்கள் மூடர்கள் என்றே உங்கள் பதிவு.அங், ரங், சங், மங் போன்ற மந்திரத்தால் மாங்காய் பழுக்கவைக்கும் சித்தர்கள் என்றே எழுதி அவர்களின் உழைப்பை, கண்டுபிடிப்பை கொச்சைப்படுத்தும் பதிவுகளே அதிகம்.
சித்தர்கள் அனைத்துத் துறைகளிலும் உச்சத்தை அடைந்தார்கள்.எந்த மந்திரமும் இல்லை,
அனைத்தும் அறிவியல்.மேலோட்டமாக சித்தர் பாடல்களைப் படித்தால் அப்படித்தான் தோன்றும்.

மு.வேலன் said...

வைத்தீஸ்வரன் கோவில் அருகே பார்க்கப்படும் நாடி ஜோதிடத்தைப் பற்றி சொல்லுங்கள். நன்றி.

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

உன்னுடை வாதம் கருத்துரெம்பப நல்ல இருகிதும்மா ஒரு ஆராச்சி கட்டுரை மாதுரி மிகவும் நன்று இந்தத்துறை யில் பி ஹச் டி பட்டம் பெரும் தகுதி நீ பெறமுடியும் என்று நினைக்கிறன்மென் மேலும் சிறந்து வளர் வாழ்த்து வாழ்க வளரக வளமுடன் subburajpiramu

நா.க.மலர்ச்செல்வன் said...

நானும் நாடி சோதிடம் பார்க்க சென்றேன். என்னிடமே வார்த்தைகளை வாங்கி அதை கொண்டு கணித்து சொல்கின்றனர் என ஐயப்பட்டேன். வெளியே வரும் போது தற்செயலாக உள் அறை ஒன்றில் மூன்று பேர் அமர்ந்து தேதி மாதம் வைத்து சாதக கட்டம் கொண்டு கணித்து கொண்டிருந்ததை பார்த்தேன். இரண்டாம் முறை சென்றேன், இம்முறை நான் பிறந்த தேதி, மாதம் தெரியாது என்றேன், நான்கு முறை இதையே செய்தேன், இன்று வரை எனக்கு ஏடு கிடைக்கவில்லை.

muthuxp said...

Sister vanakkam, vazhga valamudan!

palanisankaran said...

migavum achariyamana thavagalkal, thedungal ungal murachi vetriagatum. unmaiyai velli vidungal.

mani said...

நம் ரேகைகள், உடல் உறுப்புகளின் செயல் பாடுகள் மற்றும் நம் என்னத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது, என்பது போன்று நான் பல செய்திகளை கேழ்வி பட்டு இருக்கிறேன்.... சித்தர்கள் மருத்துவத்தில் சிறந்தவர்களாக இருப்பதால் கண்டிப்பாக கை ரேகை பற்றி கண்டிப்பாக ஆராயாமல் இருந்து இருக்க மாட்டார்கள்..... எனவே இந்த கைரேகை ஜோதிடம் பொய் என்பதை நீங்கள் நிரூபிக்க நினைத்தால் சித்தர்கள் இந்த ரேகைகள் பற்றி என்னென்ன விசயங்களை ஆராய்ந்து உள்ளனர் என்பதை முதலில் கண்டு பிடியுங்கள்..... அப்போது தான் நீங்களும் தெளிவைய முடியும்..... எங்களை போன்ற அதிகம் அதை பற்றி தெரியாதவர்களுக்கு புரிய வைக்கவும் முடியும............

Jeeva said...

Neenga namburingalo illiyo naan namburaen.....Ean na ennoda personal experience iruku.... ungaluku ithu thodarba thagaval venumna na, thiruchenthur Ku poi anga ungaloda thedaluku Eathavathu bayanulla thagaval kedaikuthanu paarunga....
Vithikappatal mattume paaka mudiumgrathu unamnu sollalam.... mattrum tamil naatula kiripitu solla koodiya edangalum iruku.

Jeeva said...

Ungaludaiya aarachi viral regai Samantha a irukura maathiri theriyaliye....

Nadi Astrology said...


Namaskar , Sri Atri Astro Centre Welcomes to you ,Thank you for Contact us, Kindly call us for more details +91-94439-86041 or Skype ID : jeevanadi

mohanraj b said...

fraud don't believe it ..... they will try to make out your name just by asking few questions like first letter, last letter of your name, god name related to your name....

Bashi . . . said...

Thozhi, could you please send me the continuation links ... to prof.bash@gmail.com

Bashi . . . said...

Please let me know the continuation link to prof.bash@gmail

Ashok said...

Naadi astrology is 100% true and there is no doubt in this for me. Proof for it will come to THOZHI'S hands by Sidhars blessings in a period of time.
Only sad thing in this matter is lots of wrong people have started this as money making business, Only God should punish the culprits and the blessings of Sidhars should reach all around.

https://draft.kaviyazhi.blogspot.com said...

நல்ல விஷயத்தை அறிந்ததில் மகிழ்ச்சி

K. Sankar said...

அகத்திய பெருமான் நிகழ்த்திய அற்புத திருவிளையாடல்களை நாடி சொல்லும் கதைகள் என்ற பெயரில் ஸ்ரீ அனுமத்தாசன் எழுதியிருக்கிறார். மொத்தம் 5 பாகங்கள். வாங்கி படித்து இன்புற விரும்புவர்கள் அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை கைபேசி எண் 9444160161 தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

Unknown said...

naadi paarkum vetham anupa mudiyuma mam

The Indian Money Maker said...

I disagree with this post. my experience says otherwise.

K. Sankar said...

ஸ்ரீ ஹனுமத்தாசன் எழுதிய நாடி சொல்லும் கதைகள் அகத்தியர் அருள் வாக்கு புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம்.. அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

Anonymous said...

Neenga thavarana idathirku sendrirukirirgal ...

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் said...

உங்கள் வாயாலே எல்லாவற்றையும் வாங்கி விடுவார்கள் ! வல்லின வரிசை, மெல்லின வரிசை , நான்கெழுத்து என அவர்கள் உங்கள் பேரையோ அல்லது தந்தை, தாய் பேரையோ கேட்டால் அவர்கள் அதனையே கூறுவார் , பிறர் பெயர் அதாவது சகோதர , சகோதரி என கேட்காதவர்கள் பெயரை கூறுவதில்லை ! உங்கள் தந்தை பேரை மாற்றி சொல்லி பாருங்கள் .நீங்கள் நினைத்த அதே தவறான பெயர் பிற சரியானவற்றுடன் வரும் ! பித்தலாட்டம் !

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் said...

நன்றாக கவனித்து பாருங்கள் ஒவொவொரு எழுத்தாய் உங்களிடமே பிடுங்கி கொள்வார்கள் ! ஞாபக சக்தியை கட்டாயம் பாராட்ட வேண்டும் !

Unknown said...

@நா.க.மலர்ச்செல்வன்

This is 99% true, remain 1% persons maybe true, but it's very difficult to find that true person. Also they told me Sidder agathiyar write about me in that "edu", I get that edu suvadi and watch it, but no tamil words are there, only lines are there. Actually agathiyar period is aprox. 6th century, that perid almost same tamil letters, words are there (from the history of tamil, padalgal etc), but with small different. So I think maximum persons are cheeting, only their aim is collecting money, they collect Rs.200.00 each gontom, total 13+, parigaram aprox Rs.5000.00+.

Unknown said...

NADI ASROLOGY IS MONEY MAKING BUSINESS THEY ARE SAYING FUTURE AS PER OUR HOROSCOPE ASTOLOGY IS 100 PERCENT TRUE DO NOT BELIEVE NADI

Unknown said...

Ungal adutha pathivu eppothu

Unknown said...

அருமை சகோ

சோழ நாடுடையான் (சோழ நாட்டான்) said...

vanakkam.. nan indru nadi jothidam parthu vanthen... achariyathil viyenthen... en peyar, en kudumba nabargalin peyar solli, en pirantha date solli antha kilamai ennavendrum sonnar... ivai anaithum avaral evvaru ariya mudium... en pirantha neram avaruku epadi therium.

Thanushan Sellathurai said...

where did you see Jeeva Nadi??
Please tell me the address?? really appreciate it.
thanks

Unknown said...

mudakkuvathathilerunthu mumzhumaiyaga gunam pera marunthu sollunkga

Post a Comment