புலிப்பாணி ஜோதிடம் 300 - பாகம் 5.

Author: தோழி / Labels: ,

புலிப்பாணி முனிவர் இந்த நூலினை ஒரு புதிர் விளையாட்டினைப் போல அமைத்திருக்கிறார். எந்த ஒரு மனிதரின் பலனையும் துல்லியமாய் அறிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட இந்த நூலின் கட்டமைப்பு அசாத்தியமானது.

ஒன்றைத் தொட்டு ஒன்றாய் தொடந்து செல்வதாக வடிவமைத்திருக்கும் புலிப்பாணி முனிவரின் அறிவுத்திறம் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.

நூலின் துவக்கத்தில் லக்னங்களைப் பற்றி விவரித்து விட்டு, தொடர்ச்சியாக கிரகங்களின் தன்மையினை விளக்குகிறார். பின்னர் லக்னத்தை கொண்டு குறிக்கப்படும் ஒவ்வொரு பாவங்களின் பலன்களை விவரிக்கிறார். அதைத் தொடர்ந்து என்ன லக்னத்திற்கு என்ன பலன் என்று விளக்கி விட்டு. ஒவ்வொரு கிரகமும் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை விவரித்துக் கொண்டு சொல்கிறார்.

கிரகங்களின் பார்வைகளும் அதன் பலன்களையும் சொல்லும் வேளையில், ஒருவரது ஜாதகத்தில் உள்ள யோகங்களைப் பற்றி விளக்கும் அவர், தோஷங்களைப் பற்றியும் அதற்க்குரிய பரிகாரங்களையும் சொல்கிறார்.

உதாரணத்திற்கு பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க என்ன பரிகாரம், நாகதோஷம், செவ்வாய் தோஷம், காரியத்தடை எதனால் ஏற்படுகிறது அதை நிவர்த்திசெய்வது எப்படி? எந்த கிரகநிலை உள்ளவர் என்ன தொழில் செய்தால் அதிக லாபமீட்டலாம் என்பதையும், அத்துடன் என்ன கிரக நிலை உள்ள ஜாதகர் என்ன கற்பார் என்றும் , சில கிரகங்களின் அமைவிடத்தை வைத்து அந்த ஜாதகருக்கு புதையல் கிடைக்கும் என்பதையும் வரையறுக்கும் முறையும் சொல்லியுள்ளார்.

இந்த கிரகங்களின் மகா திசையில் இந்த புத்தி நடைபெற்றால் இன்ன பலன் என்பதையும் வரையறுத்து தெளிவாக சொல்கிறார். இவை எல்லாம் விளக்கமாக சொல்லும் அவர் இடைக்கிடையே தன்னுடைய குரு போகரின் அருளால் பக்குவமாக சொல்கிறேன் புலிப்பாணி என்று கூறிச் செல்கிறார்.

"பாரே நீ போகருட கடாட்சத்தாலே
பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே"

இந்த நூலின் அமைப்பினையும், தன்மையும் நானறிந்த வகையில் விளக்கியிருக்கிறேன். இதை பயன் படுத்தும் முறையினை பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழுக்கும், சோதிட கலைக்கும் கிடைத்த அரும்பெரும் கொடை இந்த நூல் என்றால் மிகையில்லை. இந்த நூலை முறையாக பயன் படுத்தினால் எவரும் தங்களின் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

Unknown said...

மிகவும் அருமையான பதிவு....இந்த நுலை எங்கே,எப்படி பெற்றுகொள்ளலாம்....ஆவலுடன் எதிர்பாக்கிறேன்... நன்றி

Piththa_ Piraisoodi said...

சித்தர்கள் ஏடுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். வைத்திய சாஸ்திரம், வானசாஸ்திரம் மற்றும் ஞான சாஸ்திரம் . இறையருளை ஒளியாக உள்ளே பெறுவதற்கு ஏற்றதாக புற உடலை கல்பமக்கவே வைத்திய சாஸ்திரம். உடலினுக்குள்ளே உள்ள உயிராற்றலை சீராக்கி புற உடம்போடு லயிக்கச்செய்து ஒருமிக்க வழிகாட்டுவதே வான சாஸ்திரம். உதாரணம்: மேஷம், சிம்மம் தனுசு ராசியோ லக்னமோ உள்ளவர்கள்தான் தியானம் செய்யமுடியும் (அக்னி) . கடகம் , விருசிகம் ,மீன ராசி அல்லது லக்கினமுள்ளவர்கள் உணர்வு பூர்வமான பூஜை செய்யமுடியுமே தவிர தியானம் செய்ய முடியாது (நீர்). ரிஷபம், கன்னி, மகர ராசி அல்லது இலக்கண முள்ளவர்கள் உணர்வற்ற நிலையில் வழிபாடு செய்வார்கள் (நிலம்).மிதுனம், துலாம் கும்பம் ராசி அல்லது லக்கனமுள்ளவர்கள் சதா சத் சிந்தனையில் பேசி மகிழ்வார்கள். (வாயு) . உடலோடு உயிர் லயமானால்தான் ஞானம் கிட்டும். சித்தர்களின் பயணம் ஞானத்தை நோக்கித்தான்.

C.SRIRAM said...

மிகவும் அருமையான பதிவு....இந்த நுலை எங்கே,எப்படி பெற்றுகொள்ளலாம்....ஆவலுடன் எதிர்பாக்கிறேன்... நன்றி

Senthil Kumar said...

அன்புத் தோழி..!

புலிப்பாணி சோதிடம் 300 கிடைக்குமா?

நன்றி..!

Sundaram.C said...

unarvatra nelayil vazhipadu endral enna?

Unknown said...

nice, .....

Post a comment