புலிப்பாணி ஜோதிடம் 300 - பாகம் 4.

Author: தோழி / Labels: ,

புலிப்பாணி சித்தரின் சோதிட நூலினைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், இதுவரையில் நாம் பார்த்த சோதிட அடிப்படைகள் சிலவற்றை நினைவு படுத்திட விரும்புகிறேன்.

ஒருவரின் ஜாதக பலனை கணிப்பதற்க்கு, அவரின் பிறந்த நேரம் வைத்து ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை வரையறுக்கப் படுகிறது.

இராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இராசி என்பது பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அது தான் ராசி. அந்த ராசியை கொண்டு தான் கிரகங்களின் சஞ்சாரங்களை கணித்து பலன் கூற வேண்டும். இதையே கோசார பலன் என்று அழைப்பர்.

லக்னம் என்பது குறிப்பிட்ட ஜாதகருக்கு என்ன திசை நடக்கிறது எபதையும், எந்த கிரகம் எத்தனையாவது வீட்டில் உள்ளது என்பதையும், அதன் அதிபதி யார்?, அவர் என்ன நிலையில் இருக்கிறார்? அவர் ஆட்சி பெற்றிருக்கிறாரா?, அல்லது உச்சம் பெற்றிருக்கிறாரா?, அல்லது நீசம் அடைந்திருக்கிறாரா?, என்பதை அறிய உதவும்.

இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்ட எவரும் "புலிப்பாணி ஜோதிடம் 300 " என்ற நூலை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

"புலிப்பாணி ஜோதிடம் 300 " என்ற நூலில் காப்பு அடங்கலாக மொத்தமாக 309 பாடல்கள் உள்ளன. அந்த பாடல்கள் அனைத்திற்கும் தெளிவான பொருள் கூற தெரிந்தவர்கள் உலகிலுள்ள எந்த ஒரு மனிதரின் ஜாதக பலன்களையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நான் அறிந்த வரையில் மிகச் சிலரே இதில் விற்பன்னராய் இருக்கின்றனர். அவர்களை தேடியறிந்து பலன் கேட்பதே சிறப்பு.

இந்த நூலில்,

"ஆதியெனும் பராபரத்தின் கிருபை காப்பு
அன்பான மனோன்மணியாள் பாதங் காப்பு
சோதி எனும் பஞ்ச கர்த்தாள் பாதங் காப்பு
சொற்பெரிய கரிமுகனுங் கந்தன் காப்பு
தீதி எனும் மூல குரு முதலாயுள்ள
நிகழ்ச்சித்தார் போகருட பாதங் காப்பு
வாதிஎனும் பெரியோர்கள் பாதங் காப்பு
வாழ்த்துகிறேன் ஜோசியத்தின் வண்மை கேளே"


ஆதிக்கும் ஆதியாய் விளங்கும் பரம்பொருளுக்கும், அன்பான மனோன்மணி அம்மனின் பாதத்திற்கும், ஜோதிவடிவான பஞ்ச பூதங்களின் பாதத்திற்கும், முதற் கடவுளான ஆனைமுகனுக்கும், கந்தனுக்கும், என்றும் வாழும் சித்தராகிய போகருக்கும், எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சான்றோர்களையும் வணங்கி நல்வாழ்த்துக்களுடன் ஜோதிடத்தின் சிறப்பை சொல்கிறேன் கேள் என்பதாக ஆரம்பிக்கிறார்.

இனி இந்த நூலைக் கொண்டு ஒருவரின் பலன்களை எவ்வாறு அறிவது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

soorya said...

thodaraddum nin paNNi.
vaazhthukal.

if u wanna cantact me
sooryavinothan@gmail.com

jagadeesh said...

இந்த ஜோதிட இடுகைகளை எல்லாம் நான் தனி ஒரு புத்தகத்தில் எழுதி, படித்து கொண்டிருகிறேன். மிக்க நன்றி.

Shankar said...

I need the book.. can i download somewhere.. really i checked it and its predictions are so perfect

Shankar said...

புலிப்பாணி சோதிடம்

தோழி said...

@Shankar

தரவிரக்கம் செய்யும் வகையில் தளங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை...

தமிழகத்தில் இந்த நூல் கடைகளில் கிடைப்பதாக அறிகிறேன்.. முயற்சித்துப் பாருங்கள்.

ASHOK said...

அன்பு தோழி ஒருவர் பிறக்கும் போது சூரியன் எந்த இடத்தில் உள்ளதோ அது தானே ராசி , நீங்கள் சந்திரன் என்று எழுதி உள்ளீர்கள். எது சரி என்று தெளிவு படுத்தவும். உங்கள் எழுத்திற்கு நான் ரசிகன்.

தோழி said...

@ASHOK KUMAR . J
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் எங்கு இருக்கிறாரோ அந்த இடமே ஜாதகரின் ராசியாகும்.

சூரியன் ஒரு மாதத்திற்க்கு ஒரு ராசியில் சஞ்சரிப்பார் உதாரணமாக சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியில் இருப்பார். நீங்கள் சொல்வதுபோல் சூரியனைக் கொண்டு ராசி கணிப்பதாக இருந்தால் சித்திரை மாதத்தில் பிறக்கும் அனைவரும் மேஷ ராசியாக அமைய வேண்டும்.

ஆனால் சந்திரன் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்வது இரெண்டேகால் நட்டத்திரக் காலமே ஆகும்.

நன்றி

seeni said...

அன்பு தோழிக்கு,
புலிபாணி ஜோதிடம் 300 நூல் கிடைக்குமா? தரவிறக்கம் செய்ய முடியுமா அல்லது புத்தக கடைகளில் கிடைக்குமா?

Post a Comment