இரசவாதம் - யார் உண்மையான ரசவாதி?

Author: தோழி / Labels:

இரசவாதம் என்பது பெரிய அறிவியல், வெறுமனே அதையும், இதையும் கலந்தால் இன்னொன்று கிடைக்கும் என்பதாக சொல்வாராயின் அவர் இரசவாதியே இல்லை.

ஒரு உண்மையான இரசவாதி ஏதாவது ஒரு பொருள் கிடைத்தால் அதன் திண்ம பகுப்புகளை பற்றி ஆராய்ந்து அறியும் தகுதி உடையவனாக இருக்க வேண்டும். அது தனிமமா அல்லது கூட்டுப் பொருட்களின் சேர்க்கையா என்பது மாதிரியான அடிப்படைகளை உணர்ந்தவனாக இருத்தல் வேண்டும்.கூட்டுப் பொருளாக இருந்தால் அது அப்படி சேர என்ன காரணம்? அந்த பொருளின் இயற்கை தன்மையே என்ன? அதன் சூழல் காரணமாக இதில் ஏதும் சேர்க்கைகள் அதிகரித்துள்ளதா? போன்ற விபரங்களை அறிய தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

அத்துடன் திண்ம பொருள், காற்று பொருள், நீர்மைப் பொருள் அவற்றின் கூட்டினால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி அறிந்தவனாகவும், ஒவ்வொரு பொருளின் குணம், சுவை, வலிமை, செயல்திறன், அவற்றின் வரலாறு போன்றவை பற்றிய புரிதல் கொண்டவனாகவும் இருத்தல் வேண்டும்.

சித்தர்கள் இவற்றை எல்லாம் சிறப்பாகவும் விரிவாகவும் படிப்பவர்களுக்கு இலகுவாகவும் தொகுத்து தந்துள்ளனர். இதை ஊன்றிப் படிப்பதன் மூலம் இரசவாதம் செய்யக்கூடிய, உலோகங்கள், உப்புக்கள் போன்றவற்றின் அடிப்படை அறிவை பெறலாம். மேலும் அவற்றின் நல்ல தன்மைகளும், கெட்ட தன்மைகளையும் நமக்கு தேவையான வகையில் அவற்றை முன் தயாரிப்பு செய்வதையும் அறிந்து கொள்ள முடியும். இந்த முன் தயாரிப்பு முறையை சுத்தி செய்தல் என்று குறிப்பிடுவர். இரசவாதம் செய்வதற்க்கு தேவையான கருவிகளையும், அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் அறிந்து கொள்வது அவசியம்.

இவை அனைத்தையும் துல்லியமாக அறிந்த பின்னரே ரசவாதம் செய்ய முயற்சி செய்ய வேண்டும். குரு முகமாய் இவை உங்களுக்கு கிடைக்குமானால் எளிதாய் கற்றுக் கொள்ள முடியும்.

இப்படி கற்றறிந்த ரசவாதிக்கு முதலில் கை கூடி வருவது ரசமணி, ரசலிங்கம் போன்றவை ஆகும். இதுவே ரசவாதத்தில் முதல் படியாகும். ரச மணி பற்றி போதுமானவரை முன்பே சொல்லியிருக்கிறேன். அதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ரசலிங்கம் பற்றி பார்க்கலாம். ரசமணி என்பது பயன்படுத்துபவர்கள் பயன்பாட்டை பொறுத்து அதன் தொழிற்பாடு இருக்கும். ஆனால் ரசலிங்கம் என்பது பொதுவான பயன்பாடுகளை மட்டுமே கொண்டது. அதனால் அது எல்லோருக்கும் அது ஒரே பயனையே கொடுக்கும்.

பில்லி, சூனியங்களின் தாக்கங்களில் இருந்தும், கிரக கோசார பலன்களில் இருந்தும், செல்வ சிறப்புக்களையும், வியாபார முன்னேற்றங்களையும், உழைக்கும் பணம் வீட்டில் தங்கவும், சகல ஐஸ்வர்யங்களையும் பெற ரசலிங்கத்தை வணங்க சொல்லி அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில் சொல்லியுள்ளார்.

இதற்காக கடைகளில் மலிவாய் கிடைக்கும் ரசலிங்கத்தை தேடிப்போய் வாங்கி ஏமாற வேண்டாம்... அவை நிச்சயம் உங்களுக்கு பலன் தராது.

அடுத்த பதிவில் என்னுடைய சில முயற்சிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசவாதம் - சில அடிப்படைகளும், தெளிவுகளும்...

Author: தோழி / Labels:

சித்தர்களைப் பற்றிய தேடலில் மிகவும் சுவாரசியமானதும், மர்மங்கள் சூழ்ந்த ஒரு தலைப்பினை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

புதிர்களுக்கும், புரட்டுகளுக்கும் குறைவில்லாத தீனியை தரும் அந்த தலைப்பு "இரசவாதம்"

இரசவாதம் என்னும் சொல்லுக்கு இரசத்தை வேதித்தல் என பொருள் கொள்ளலாம், வேறு வகையில் பாதரசத்தைக் கொண்டு அதை தேவையான வகையில் உருமாற்றம் செய்து கொள்ளுதல் என்றும் கொள்ளலாம்.

பொதுவில் இரசவாத முறை ரெண்டு நிலைகளைக் கொண்டது.

ஒன்று பாதரசத்தை தின்மமாக்கி அதை ரசமணி, ரசலிங்கம் போன்ற உருவங்களாக செய்தல்.

மற்றது மட்டமான உலோகங்களான ஈயம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்பு போன்றவற்றை உயர் உலோகமான தங்கமாக மாற்றுவது.

இப்போது உங்களுக்கு இதெல்லாம் சாத்தியமா என்கிற எண்ணம் வரலாம்...

ஏனெனில் கடந்த காலங்களில் இரசவாதிகள் என்று சொல்லிக்கொண்டோர், பொன் செய்வதாக சொல்லி, மக்களின் பணம், பொருட்களைக் பெற்றுக் கொண்டு ஓடிப் போன கதைகள் நிறைய உண்டு. இரசவாதம் செய்கிறேன் என தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர் இருக்கின்றனர்.இம்மாதிரியான தவறான பல முன்னுதாரணங்கள் ரசவாதம் என்பதே ஏமாற்று வித்தை என்பதாக கருத்துக்கள் உருவாகிட காரணமாகி விட்டது.

ரசவாதத்தை விமர்சிக்கிறவர்கள் எவரும், இதன் பின்னால் இருக்கும் உண்மைத் தன்மையை பற்றி ஆராயமல், அல்லது அது பற்றிய முறையான அறிதல் இல்லாமல் கருத்து சொல்கின்றனர் என்பதே எனது ஆதங்கம். எடுத்தேன் கவிழ்த்தேன் என கருத்துச் சொல்வதை தவிர்க்க வேண்டும்.

சித்தர்களின் சோதிட, மருத்துவ, மாந்திரீக, யோக, ஞான நூல்களின் உண்மைத் தன்மை இன்றைக்கு அரசாங்கங்களே ஏற்றுக் கொள்ளப்பட்டு மேலதிக ஆய்வுகளை நடத்துகின்றனர். இரசவாதமும் இப்படி மேலதிக ஆய்வுகள் தேவைப்படும் ஒரு தத்துவம் என்பதுதான் நிதர்சனம்.

ஒரு அடிப்படை அறிவியல் தத்துவம் ஒன்றினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்....

தாவரங்கள் எல்லா இடத்திலும் பச்சையாகவே இருப்பதில்லை. இந்த பச்சையின் நிறம் மாறுபடும், ஏன் சில இடங்களில் சிவப்பான தாவரங்களைக் கூட காண முடியும். இந்த நிறத்தை நிர்ணயிக்கும் நிறமிகளின் பின்னால் இருப்பது அந்த தாவரத்தில் மிகுந்திருக்கும் உலோக உப்புகள் என்பது தாவர இயலில் நிரூபிக்கப் பட்ட உண்மை. இதற்கு அந்த தாவரம் இருக்கும் மண்ணும் காரணம்.

குறிப்பிட்ட ஒரு உலோகம் அந்த செடியால் ஜீரணிக்கதக்க வகையில் உப்பாக இருக்கிறது என்று அர்த்தம். வேறு வகையில் சொல்வதானால் இயற்கையாகவே உலோகம் உப்பாக உருமாறி தாவரம் ஜீரணிக்கத்தக்க நிலையை அடைந்துள்ளது.

உலோகம் உப்பாக மாற முடியுமானால், உப்பை ஏன் உலோகமாக மாற்ற முடியாது?

இந்த இடத்தில்தான் இரசவாதம் உங்களுக்கு விடைகளோடு வருகிறது.

அடுத்த பதிவில் இரசவாதம் செய்பவரின் தகுதி மற்றும் அடிப்படைகளை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திர யோகம் - "பஞ்சதசாட்சரி"

Author: தோழி / Labels: ,

மந்திரயோகம் தொடரில், இதுவரை சொல்லப்பட்ட மந்திரங்களைப் போல மிக சிறப்பானதும் சித்தர்களால் தங்கள் சீடர்களுக்கு இரகசியமாக உபதேசிக்கப் பட்ட பஞ்சதசாட்சரி மந்திரம் பற்றிய தெளிவுகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

இந்த மந்திரமானது பதினைந்து அட்சரங்களை கொண்டதால், இதை பஞ்சதசாட்சரி மந்திரம் என்று அழைக்கின்றனர்.

காலங்காலமாக இந்த மந்திரமானது குருமுகமாகவே சொல்லப்பட்டு வந்துள்ளது. சித்தர்களும் தங்கள் பாடல்களில் இதை மறைத்தே பாடியுள்ளனர்.

"சுகாராதியோ ரைந்துங் கானிய பொன்மை
அகராதி யோரா றத்தமே போலும் வாக்பவம்
சகராதி யோர் நான்கும் தான் சுத்த வெண்மை
சுகாராதி மூவித்தை காவிய முத்தியே"

- திருமூலர் -

என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். இதில் வரும்,

சுகாராதி ஐந்து :- க , ஏ , ஈ , ல , ஹ்ரீம்.
அகராதி ஆறு :- ஏ , ஹ , ஸ , க , ல , ஹ்ரீம்.
சகாராதி நான்கு :- ஸ , க , ல , ஹ்ரீம்.

மூவித்தை என்பது மூன்று கூடத்தைக் குறிக்கும்

அவையாவன, வாக்பவ கூடம் , காமராஜ கூடம், சக்தி கூடம். இந்த மூன்று கூடத்திற்கும் மூன்று நிறங்கள் குறிக்கப் படுகிறது, அவை முறையே பொன்னிறம், செந்நிறம், வெண்ணிறமாகும் என்று திரு மூலர் குறிப்பிடுகிறார்.

இந்த அட்சரங்களை கொண்டு உருவாக்கப் பட்டது தான் பஞ்சதசாட்சரி மந்திரம். இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கும், இதை புவனேஸ்வரி சக்கரத்தில் அமைத்து வழிபடுபவர்களுக்கும் நினைத்ததெல்லாம் உடனடியாக ஈடேறும் என்றும், அட்டமா சித்துக்களும் கைவரப் பெரும் என்றும் அகத்தியர் சொல்கிறார். ஆனால் அவரும் இந்த மந்திரத்தை மறைத்தே பாடியுள்ளார்.

குருவருளை வேண்டி, முயற்சியுடன் கூடிய தேடல் உள்ள எவருக்கும் இந்த மந்திரம் கிடைக்கும். நான் அந்த மந்திரத்தை இங்கே பகிர்ந்து கொள்ள இயலாதவளாக இருப்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இந்த மந்திரத்தை பற்றியும், அதன் பெருமை பற்றியும் ஆனந்த லகரியும் சொல்கிறது.

இத்துடன் மந்திர யோகம் பற்றிய தொடரை நிறைவு செய்கிறேன்...பிரிதொரு சந்தர்ப்பத்தில் தொடர முயல்கிறேன்.

இனி வரும் பதிவுகளில் சித்தர்கள் அருளிய ரசவாதம் பற்றியும், அதில் எனது பரிசோதனை மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திர யோகம் - "சக்தி பீஜம்".

Author: தோழி / Labels: ,

தாய்மை வழிபாடு அல்லது சக்தி வழிபாடு என்பது தொன்மையானதும் சக்தி வாய்ந்ததும் ஆகும். இந்த சக்திக்குரிய மந்திரமாக "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை குறிப்பிடுகிறார் திருமூலர்.

பிரணவ மந்திரம் எப்படி சிறப்பாக விளங்குகிறதோ அது போலவே "ஹ்ரீம்"சிறந்து விளங்குகிறது.

"ஓங்காரி யென்பா ளவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே யினித்தி ருந்தாளே"

- திருமூலர் -

பிரணவ வடிவான, பச்சை நிறத்தையுடைய தேவி பஞ்ச கிருத்தியங்களுக்கும் படைக்க முனைந்த பொழுதில், சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய ஐவரை தனது அம்சமாக உருவாக்கிய பின்னர் "ஹ்ரீம்" என்ற பீஜத்தில் எழுந்தருளினாள் என்கிறார் திருமூலர்.

ஹ் + ர் + ஈ + ம் = "ஹ்ரீம்" என்பதாவது, சிவ பீஜம் , அக்கினி பீஜம், மகாமாயை, விந்து ஆகியவற்றைக் குறிக்கும். இது புவனங்களுக்கேல்லாம் ஈஸ்வரியான புவனேஸ்வரியின் வடிவமாகும்.

"ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி மனதை அலைபாய விடாமல் ஒருமுக படித்ததினால், முக்காலமும் உணர்ந்து, மரணத்தை வென்று என்றும் ஜீவித்திருக்கலாம் என்றும் சொல்கிறார் திருமூலர். அத்துடன்,

இந்த "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை தியானிக்கும் போது மூலாதாரத்தில் ஹ் - என்ற எழுத்தையும், இதயத்தில் ர் - என்ற எழுத்தையும்,புருவ மத்தியில் ஈ - என்ற எழுத்தையும், சிரசில் ம் - என்ற எழுத்தையும் நியாசம் (தியானம்) செய்தால் அட்டமாசித்தும் கைகூடி வரும் என்கிறார்.

அதனால் தேவி வழிபாட்டிற்கு உரிய மூலமந்திரமான "ஹ்ரீம்" சிறப்பானதும், உயர்வானதும் ஆகும். குருமுகமாக உபதேசம் பெற்று பயனடைந்திடலாம்.

அடுத்த பதிவில் சித்தர்களால் இரகசியமாக பாதுகாக்கப் பட்டதும், உயர்வானதுமான பஞ்சதசாட்சரி மந்திரம் பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திரயோகம் - “பஞ்சாட்சரம்”.

Author: தோழி / Labels: , , ,

பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துக்களால் ஆனது என்று பொருள். இவை "நமசிவய" என்பதாகும்.

இந்த எழுத்துக்களில், ந - பிருதிவியையும், ம - அப்புவையும், சி -தேயுவையும், வ- வாயுவையும், ய - ஆகாயத்தையும் குறிக்கும்.

மனித உடம்பில் சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்கின்ற ஆதாரங்கள் இந்த பஞ்சபூதங்களுக்கு உரிய இடமாகும் என்கிறார் திருமூலர்.

மேலும், மனித உடம்பில் நமசிவாய என்பது, ந - சுவாதிஷ்டானதில், ம - மணிபூரகத்தில், சி - அனாகதத்தில், வ - விசுத்தியில், ய - ஆக்ஞையில் இருப்பதாக சொல்கிறார்.

திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களுக்கும் மெய்பொருளாக விளங்குவது ”நமசிவய” என்றும் இது எல்லாவற்றிற்குமான நாதன் நாமம் என்றும் சொல்கிறார் .

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவயவே "


- திருஞான சம்பந்தர் -

"நானேயோ தவம் செய்தேன் சிவயநம எனப் பெற்றேன் " என்று பஞ்சாட்சர மகிமையை மாணிக்க வாசகரும் கூறுகிறார்.

"அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே"


- திருமூலர் -

"சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே"


- திருமூலர் -

என்று திருமூலர் பஞ்சாட்சர மகிமையை விளக்குகிறார்.

"சிவாய மென்ற அக்கரம் சிவனிருக்கும் அக்கரம்
உபாயம் என்று நம்புதற் குண்மை யான அக்கரம்
கபாடம் அற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இல்ல ழைக்கும் சிவய அஞ்செ ழுத்துமே"


- சிவவாக்கியார் -

என்று பஞ்சாட்சர மகிமையை உரைக்கிறார் சிவவாக்கியார்.

இனிஅடுத்த பதிவில் சக்தி மந்திரம் பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திரயோகம் - “பிரணவம்”...

Author: தோழி / Labels:

மந்திரங்களில் தலையாயதும் முதன்மையானதும் ஓம் என்னும் பிரணவ மந்திரம் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். மிரளும் பிரணவமாகிய ஓம் என்பதன் தத்துவத்தினை இந்த பதிவில் காண்போம்.

ஓம்என்கிற பிரணவ மந்திரத்தினை மற்ற மந்திரங்களை உச்சரிக்கும் பொது முதலில் சேர்த்து உச்சரிக்க வேண்டியது அவசியம்.

இதனை தாரக மந்திரம், பிரணவம் என்பார்கள், தாரகம் என்றால் ஒன்றை தாண்டச் செய்வது என்று பொருள். கப்பலுக்கு தாரகம் என்று ஒரு காரண பெயர் உண்டு. கப்பல் எப்படி கடலைக் கடக்க மனிதர்களுக்கு உதவுகிறதோ, அது போல பிறவிக் கடலை கடப்பதற்க்கு பிரணவ மந்திரம் உதவுகிறதால் அதனை தாரக மந்திரம் என்று அழைப்பர்.

பிரணவம் என்பதற்க்கு ப்ர - பிரபஞ்சம், - என்றால் இல்லை, - உங்களுக்கு அதாவது இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு பிரபஞ்சதிற்கான பந்தம் அற்றுவிடும் என்பது பொருள்.

ஓம்என்னும் மூலத்திலிருந்தே எல்லா வேதங்களும் மந்திரங்களும் பிறந்தது. என்றும், எனவே இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு எல்லா மந்திரங்களும் ஜெபித்த பயன் கிடைக்கும் என்று சொல்லப் படுகிறது.

பிரம்மா இந்த பிரணவ ஜெபம் செய்தே பிரம்ம பட்டமடைந்ததாககாசிகாண்டம்குறிப்பிடுகிறது. பிரம்மனால் இந்த பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல முடியாததால் முருகனால் குட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கந்த புராணம் சொல்கிறது. அத்துடன் இந்த பிரணவ மந்திரத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசம் செய்த முருகன் சுவாமிநாதர் என்னும் பேர் பெற்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

உலக ஸ்ரிஷ்டிக்காகவும், நன்மைக்காகவும், சிவனின் கையில் இருக்கும் உடுக்கையும், விஷ்ணுவின் கையில் இருக்கும் பாஞ்ச சன்யம் என்கிற சங்கும் எப்போதும் ஓங்கார ஒலியை எழுப்பிக் கொண்டே இருக்கும்.

இந்த தாரக மந்திரத்தை சைவர்கள் ஆத்ம பஞ்சாட்சரம் என்றும், வைணவர்கள் சூட்சும சடாட்சரம் என்றும் சொல்வர். இந்த ஓங்காரத்தின் பெருமையை சித்தர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

"ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே!"

என்று திரு மூலரும் இந்த ஓங்காரத்தின் பெருமையை உரைக்கிறார்.

இனி, இந்த மந்திர வரிசையில் அடுத்ததாக பஞ்சாட்சரம் பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மந்திர யோகம்...

Author: தோழி / Labels:

இறைவனை வழிபட பல்வேறு முறைகளை முன்னோர் வகுத்துச் சென்றிருக்கின்றனர். பெரும்பாலாவர்கள் அறிந்ததும், பிரபலமனது ஆலயங்களில் நடைபெறும் உருவ வழிபாடு

இறைவனை அட்சர வடிவமாக அதாவது எழுத்துருவில் எழுந்தருள செய்து வழிபாடும் முறையானது சக்கர வழிபாடாகும். இது அத்தனை பிரபலம் இல்லா விட்டாலும் மிகவும் சக்தி வாய்ந்த ஒருமுறையாகும்.

இந்த சக்கர வழிபாட்டில் ஸ்ரீ சக்கரம், திருவம்பல சக்கரம், புவனாபதி சக்கரம், சாம்பவி மண்டல சக்கரம், நவாங்கரி சக்கரம், நீல கண்ட சக்கரம் போன்றவை அதி சக்தி வாய்ந்தவையாகவும், சிறப்பானதாகவும் கருதப் படுகிறது.

மற்றொரு முறையானது மந்திர யோகம் ஆகும். இதில் ஒலி வடிவாக உள்ள இறைவனை மந்திர ஜெபத்தால் வழிபடுதலாகும்.

"மந்திரம்" என்ற சொல்லுக்கு மனதில் திறம் அல்லது ஜெபிப்பவரை காக்கும் என்பதாக பொருள் கூறப்படுகிறது.

"யோகம்" என்பதற்கு ஆன்மாவை இறைவனோடு சேர்த்து வைத்தல் என்பது பொருள்.

"மந்திர யோகம்" என்றால் மனமார்ந்த அர்பணிப்புடன் மந்திரத்தை ஜெபிப்பவரை காத்து இறைவனுடன் சேர்க்கும் என்பது பொருள்.

இந்த மந்திரங்களில் தலையாயதும் முதன்மையானதும் ஓம் என்னும் பிரணவ மந்திரமாகும். மிரளும் பிரணவமாகிய ஓம் என்பது எல்லா மந்திரங்களும் உச்சரிக்கும் பொது முதலில் சேர்த்து உச்சரிக்க வேண்டிய ஆதி மந்திரமாகும்.

இதனை தாரக மந்திரம் என்பார்கள்.

ஏன்? எதற்கு?

விவரங்கள் அடுத்த பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இடை வேளை ! ......விரைவில் தொடர்வேன்...!

Author: தோழி /

நண்பர்களே....

தவிர்க்க இயலாத காரணங்களினால், அடுத்த சில நாட்களுக்கு தினசரி பதிவு இட இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். கூடிய விரைவில் புதிய பல தகவல்களுடன் சந்திக்கிறேன். தொடரும் உங்களின் ஆதரவிற்கு நன்றி.

என்றென்றும் நட்புடன்,
தோழி.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உயிரில் மறைந்து, உணர்வில் நிறைந்த...!

Author: தோழி / Labels: , ,


கண்களுக்கு புலப்படவில்லை என்பதற்காக காற்று இல்லை என்றாகி விடுமா?, உணர்கிறோம், சுவாசிக்கிறோம்.....அதனால் உயிர் வாழ்கிறோம்.

இதைப் போலவே எள்ளினுள் எண்ணை மறைந்திருப்பதைப் போல, கரும்பினில் சுவை உறைந்திருப்பதைப் போல, மலரில் மணம் நிறைந்திருப்பதைப் போல நம்மில் ஆன்மசக்தியாய் இறைவன் மிளிர்ந்திருக்கிறான்.

எள் என்பது புறப்பொருள் எண்ணெய் என்பது அகப்பொருள் கண்ணுக்கு தெரியும் எள்ளில் நிறைந்திருக்கும் எண்ணை கண்ணுக்கு தெரிவதில்லை. இப்படியே கரும்பிலும்,மலரிலும் ஏன் மனிதனிலும் அகப் பொருளாய் மறைந்திருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அகப்பொருள் என்ற ஒன்றுக்காகத்தான் புறப்பொருள் அமைகிறது. நாம் எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கும் போதும், பூவின் வாசத்தை நுகரும் போதும், அரும்பை உண்ணும் போதும் அதில் உள்ளவற்றை உணரமுடிகிறது. அவற்றை ஒப்புக்கொள்ளவும் முடியும். ஒரு முறை உணர்ந்த பின் கரும்பு இனிப்பு சுவை உள்ளது என்றும், மலர் வாசம் வீசும் என்றும் யாரும் சொன்னால் மறுப்பதில்லை.

ஆனால் மனித உடலில் ஆன்மாவாய் இறைவன் உறைந்துள்ளான் என்றால் நம்பத்தான் யாருமில்லை.இந்த உண்மையை உணர்ந்து நாங்கள் கடவுளை அறிவது என்ப்போது என்று கேட்கிறார் பத்திரகிரியார்.

"எள்ளும் கரும்பும் ஏழு மலரும் காயமும் போல்
உள்ளும் புறமும் நின்றது உற்றறிவதெக்காலம்?"

என்கிறார். இதையே சிவவாக்கியாரும்,

"எங்கும் உள்ள ஈசன் எம்மு டல்பு குந்தபின்
பங்கு கூறு பேசுவார் பாடு சென்றே அனுகிளார்"

என்று சொல்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயமே இது பொய்யடா...!

Author: தோழி / Labels: ,

பொம்மலாட்டம் தெரியும்தானே...! மறைவாய் திரைக்கு பின்னால் இருக்கும் ஒருவர் இயக்க, பாவைகள் மேடையில் ஆடுவதைப் போன்றதே மனித வாழ்க்கை. ஆட்டுவிப்பவன் நிறுத்தினால் ஆட்டம் நின்று போய்விடும் என நிலையற்ற மனித வாழ்க்கையினை பின்வரும் பாடலால் விளக்குகிறார் பாம்பாட்டிச்சித்தர்...

"மரப்பாவை போலொரு மண்ணுருச் செய்து
வளமான சீவனெனும் சூத்திரம் மாட்டி
திறக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழுமென்று தெளிந்தாடு பாம்பே"

- பாம்பாட்டிச்சித்தர் -

மேலும் மனித உடலானது நிலையில்லாதது அழிந்துவிடும் என்பதை,

"சீயும் மலமும் செந் நீரும் நிணமும்
சேர்ந்திடு துர்நாற்றமுடைக் குடமது
உடைந்தால் நாயும் நரியும் பேயும் கழுகும்
நமதென்று தின்னும் மென்றாடாய் பாம்பே"

- பாம்பாட்டிச்சித்தர் -

சீரும், சிறப்பாய் போற்றி வளர்க்கும் இந்த உடல் சீவன் தங்கி இருக்கும் வரை. உலகில் தான் பார்க்கின்ற பொருட்கள் எல்லாம் தனக்கு சொந்தமானது என்று நினைக்கும்.

ஆனல் சீழும், குருதியும், நிணமும், மலமும் சேர்ந்த நாற்றக் குடமான உடலில் இருந்து சீவன் பிரிந்து விட்டால் நாயும் , நரியும், பேயும், கழுகும் தமக்கு சொந்தமானது என அந்த உடல் என்று பங்கு போட்டு சாப்பிட தொடங்கிவிடும்,

இப்போது கூறுங்கள்..., இந்த உடல் உங்களுக்கு சொந்தமானதா? இல்லை நாய்களுக்கும், நரிகளுக்கும் சொந்தமானதா? என்று முகத்தில் அடித்தார் போல கேட்கிறார் பாம்பாட்டி சித்தர்...

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திருநீற்றின் மகிமை...!

Author: தோழி / Labels: ,

சைவ நெறியினை பின்பற்றுவோரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றுதான் இந்த திருநீறு. சிவச் சின்னங்களில் ஒன்றாக வைத்தும் போற்றப்படுகிறது.
இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகக்கும், கிரமததுவங்களுக்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது.

மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகள் சிந்தனை , சொல், செயல் என்ற திரி சத்தியங்களை உணர்த்த்வதாக அமைகிறது. வாழ்வின் முடிவில் யாவரும் சாம்பல் ஆவர் என்ற நிலையான உண்மையையும் திருநீறு உணர்த்துகின்றது.

திருநீறு பூசிய அடியாரை சிவனாகவே கருதுவது சைவர்கள் இயல்பு, உடம்பெல்லாம் உடம்பெல்லாம் உவர் மண்ணாகிவரும் வண்ணாரை சிவனடியாராக பாவித்து தரையில் விழுந்து வணங்கியர் சேர வேந்தரும், நாயன் மாரில் ஒருவராக போற்றப்படும் சேரமான் பெருமாள் நாயனார்.

மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் புற வேதமாகிய திருநீற்றுக்காகவே உயிரைக் கொடுத்தவர்கள்.

மதுரையின் கூன் பாண்டியனின் வெப்பு நோயை தீர்க்க திருநீற்றின் பெருமையை விளக்கி திருஞான சம்பந்தரும் திருநீற்றின் பெருமையை விளக்கி பதிகம் பாடியுள்ளார்.

இந்த வகையில்,

"கங்காளன் பூசும் கவசத்திரு நீற்றை
ங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்க வினைகளும் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே"

என்று தெய்வத் திருமூலரும் திரு நீற்றின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

உணர்வுடையார் உணர்க...

"ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு "

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜோதிடம் 300 - பாகம் 5.

Author: தோழி / Labels: ,

புலிப்பாணி முனிவர் இந்த நூலினை ஒரு புதிர் விளையாட்டினைப் போல அமைத்திருக்கிறார். எந்த ஒரு மனிதரின் பலனையும் துல்லியமாய் அறிந்து கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்ட இந்த நூலின் கட்டமைப்பு அசாத்தியமானது.

ஒன்றைத் தொட்டு ஒன்றாய் தொடந்து செல்வதாக வடிவமைத்திருக்கும் புலிப்பாணி முனிவரின் அறிவுத்திறம் போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.

நூலின் துவக்கத்தில் லக்னங்களைப் பற்றி விவரித்து விட்டு, தொடர்ச்சியாக கிரகங்களின் தன்மையினை விளக்குகிறார். பின்னர் லக்னத்தை கொண்டு குறிக்கப்படும் ஒவ்வொரு பாவங்களின் பலன்களை விவரிக்கிறார். அதைத் தொடர்ந்து என்ன லக்னத்திற்கு என்ன பலன் என்று விளக்கி விட்டு. ஒவ்வொரு கிரகமும் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதை விவரித்துக் கொண்டு சொல்கிறார்.

கிரகங்களின் பார்வைகளும் அதன் பலன்களையும் சொல்லும் வேளையில், ஒருவரது ஜாதகத்தில் உள்ள யோகங்களைப் பற்றி விளக்கும் அவர், தோஷங்களைப் பற்றியும் அதற்க்குரிய பரிகாரங்களையும் சொல்கிறார்.

உதாரணத்திற்கு பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க என்ன பரிகாரம், நாகதோஷம், செவ்வாய் தோஷம், காரியத்தடை எதனால் ஏற்படுகிறது அதை நிவர்த்திசெய்வது எப்படி? எந்த கிரகநிலை உள்ளவர் என்ன தொழில் செய்தால் அதிக லாபமீட்டலாம் என்பதையும், அத்துடன் என்ன கிரக நிலை உள்ள ஜாதகர் என்ன கற்பார் என்றும் , சில கிரகங்களின் அமைவிடத்தை வைத்து அந்த ஜாதகருக்கு புதையல் கிடைக்கும் என்பதையும் வரையறுக்கும் முறையும் சொல்லியுள்ளார்.

இந்த கிரகங்களின் மகா திசையில் இந்த புத்தி நடைபெற்றால் இன்ன பலன் என்பதையும் வரையறுத்து தெளிவாக சொல்கிறார். இவை எல்லாம் விளக்கமாக சொல்லும் அவர் இடைக்கிடையே தன்னுடைய குரு போகரின் அருளால் பக்குவமாக சொல்கிறேன் புலிப்பாணி என்று கூறிச் செல்கிறார்.

"பாரே நீ போகருட கடாட்சத்தாலே
பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே"

இந்த நூலின் அமைப்பினையும், தன்மையும் நானறிந்த வகையில் விளக்கியிருக்கிறேன். இதை பயன் படுத்தும் முறையினை பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழுக்கும், சோதிட கலைக்கும் கிடைத்த அரும்பெரும் கொடை இந்த நூல் என்றால் மிகையில்லை. இந்த நூலை முறையாக பயன் படுத்தினால் எவரும் தங்களின் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜோதிடம் 300 - பாகம் 4.

Author: தோழி / Labels: ,

புலிப்பாணி சித்தரின் சோதிட நூலினைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர், இதுவரையில் நாம் பார்த்த சோதிட அடிப்படைகள் சிலவற்றை நினைவு படுத்திட விரும்புகிறேன்.

ஒருவரின் ஜாதக பலனை கணிப்பதற்க்கு, அவரின் பிறந்த நேரம் வைத்து ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை வரையறுக்கப் படுகிறது.

இராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். இராசி என்பது பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அது தான் ராசி. அந்த ராசியை கொண்டு தான் கிரகங்களின் சஞ்சாரங்களை கணித்து பலன் கூற வேண்டும். இதையே கோசார பலன் என்று அழைப்பர்.

லக்னம் என்பது குறிப்பிட்ட ஜாதகருக்கு என்ன திசை நடக்கிறது எபதையும், எந்த கிரகம் எத்தனையாவது வீட்டில் உள்ளது என்பதையும், அதன் அதிபதி யார்?, அவர் என்ன நிலையில் இருக்கிறார்? அவர் ஆட்சி பெற்றிருக்கிறாரா?, அல்லது உச்சம் பெற்றிருக்கிறாரா?, அல்லது நீசம் அடைந்திருக்கிறாரா?, என்பதை அறிய உதவும்.

இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்ட எவரும் "புலிப்பாணி ஜோதிடம் 300 " என்ற நூலை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

"புலிப்பாணி ஜோதிடம் 300 " என்ற நூலில் காப்பு அடங்கலாக மொத்தமாக 309 பாடல்கள் உள்ளன. அந்த பாடல்கள் அனைத்திற்கும் தெளிவான பொருள் கூற தெரிந்தவர்கள் உலகிலுள்ள எந்த ஒரு மனிதரின் ஜாதக பலன்களையும் துல்லியமாகக் கணிக்க முடியும். நான் அறிந்த வரையில் மிகச் சிலரே இதில் விற்பன்னராய் இருக்கின்றனர். அவர்களை தேடியறிந்து பலன் கேட்பதே சிறப்பு.

இந்த நூலில்,

"ஆதியெனும் பராபரத்தின் கிருபை காப்பு
அன்பான மனோன்மணியாள் பாதங் காப்பு
சோதி எனும் பஞ்ச கர்த்தாள் பாதங் காப்பு
சொற்பெரிய கரிமுகனுங் கந்தன் காப்பு
தீதி எனும் மூல குரு முதலாயுள்ள
நிகழ்ச்சித்தார் போகருட பாதங் காப்பு
வாதிஎனும் பெரியோர்கள் பாதங் காப்பு
வாழ்த்துகிறேன் ஜோசியத்தின் வண்மை கேளே"


ஆதிக்கும் ஆதியாய் விளங்கும் பரம்பொருளுக்கும், அன்பான மனோன்மணி அம்மனின் பாதத்திற்கும், ஜோதிவடிவான பஞ்ச பூதங்களின் பாதத்திற்கும், முதற் கடவுளான ஆனைமுகனுக்கும், கந்தனுக்கும், என்றும் வாழும் சித்தராகிய போகருக்கும், எனக்கு வழிகாட்டியாக இருக்கும் சான்றோர்களையும் வணங்கி நல்வாழ்த்துக்களுடன் ஜோதிடத்தின் சிறப்பை சொல்கிறேன் கேள் என்பதாக ஆரம்பிக்கிறார்.

இனி இந்த நூலைக் கொண்டு ஒருவரின் பலன்களை எவ்வாறு அறிவது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜோதிடம் 300 - பாகம் 3.

Author: தோழி / Labels: ,ஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள்....இவை பன்னிரெண்டு கட்டங்களில் அமைக்கப் பட்டிருப்பது அதன் விவரங்கள் என்னவென்பதை கடந்த இரு பதிவுகளில் பார்த்தோம்.

ஒருவர் பிறந்த நேரத்தினை வைத்து லக்கினம் கணிப்பதும், ராசியினை நிர்ணயித்து அவருக்கான ஜாதக கட்டங்கள் அமைப்பதன் அடிப்படைகளையும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

இனி இந்த பதிவில் கிரகங்களின் குணாம்சங்களை கவனிப்போம்....

கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை, இவை மற்ற கிரகங்களோடும், ராசிகளோடும் எத்தகைய அணுகு முறையினை வைத்திருக்கிறது என்பதும் மிக முக்கியமானது. இதை நட்பு நிலை, பகை நிலை, வலுவடைந்த நிலை, வலுக் குறைந்த நிலை, வலு இழந்த நிலை என்பதாக பிரித்திருக்கின்றனர்.

முதலில் ராசிகளோடு நட்பு நிலை பாராட்டும் கிரகங்களைப் பார்ப்போம்....

சூரியன் - விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
சந்திரன் - மிதுனம், சிம்மம், கன்னி.
செவ்வாய் - சிம்மம், தனுசு, மீனம்.
புதன் - ரிஷபம், சிம்மம், துலாம்.
குரு - மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்.
சுக்கிரன் - மிதுனம், தனுசு, மகரம், கும்பம்.
சனி - ரிஷபம், மிதுனம்.
ராகு, கேது - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.

ராசிகளோடு பகை நிலை பாராட்டும் கிரகங்களைப் பார்ப்போம்...

சூரியன் -
ரிஷபம், மகரம், கும்பம்.
செவ்வாய் - மிதுனம், கன்னி.
புதன் - கடகம், விருச்சிகம்.
குரு - ரிஷபம், மிதுனம், துலாம்.
சுக்கிரன் - கடகம், சிம்மம், தனுசு.
சனி - கடகம், சிம்மம், விருச்சிகம்.
ராகு, கேது - கடகம், சிம்மம்.
சந்திரன் - எல்லா வீடுகளுமே நட்பு தான் பகை வீடு என்று கிடையாது.

கிரகங்களின் ஆட்சி, உச்ச, நீச, திரிகோண நிலையங்கள்...கிரகங்களின் பார்வைகள்....

எல்லா கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து 7 வது வீட்டை அதாவது ஏழாவது கட்டத்தினை பார்ப்பார்கள்.

செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4, 7 , 8 வீடுகளை பார்க்கும் தன்மை உண்டு. { 4ம், 8 ம் பார்வை விசேட பார்வை}.

குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 வீடுகளை பார்ப்பார். { 5ம், 9 ம் பார்வை விசேட பார்வை}.

சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். { 3ம், 10ம் பார்வை விசேட பார்வை}.

இத்துடன் சோதிடம் குறித்த அடிப்படைகளை நிறைவு செய்கிறேன். அடுத்த பதிவில் இவற்றை அடிப்படை மூலங்களாக கொண்டு புலிப்பாணி ஜோதிடம் எவ்வாறு கணிக்கப் பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜோதிடம் 300 - பாகம் 2.

Author: தோழி / Labels: ,

முந்திய பதிவில் சோதிடக் கலையில் கிரகங்களின் அமைப்பு மற்றும் அதன் வகைகளை பார்த்தோம். அந்த வரிசையில், இன்று ஒருவருக்கான ஜாதகம் எவ்வாறு அமைக்கப் படுகிறது என்பதை மேலோட்டமாக பார்ப்போம்.

பன்னிரண்டு ராசிகளும் பன்னிரண்டு கட்டங்களில் குறிக்கப் படுகிறது. இந்த கட்டங்களை அந்த அந்த ராசிகளின் வீடுகள் என்று குறிப்பிடுவர். இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் இந்த பன்னிரண்டு ராசிகளுக்குள் பிரிக்கப் பட்டிருக்கும். அதாவது ஒரு கட்டத்திற்கு ஒரு ராசியும் அதற்குண்டான நட்சத்திரங்களும் பிரிக்கப் பட்டிருக்கும். அந்த கட்டத்திற்குறிய ராசியினை, ராசி நாதன் அல்லது ராசி அதிபதி என அழைப்பர்.

பன்னிரண்டு ராசி அதிபதிகளும் அதற்க்கு உரிய நட்சத்திரங்களின் விவரம் வருமாறு....

மேஷம் - செவ்வாய் - அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம்.

ரிஷபம்- சுக்கிரன் - கிருத்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருகசிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம்.

மிதுனம் - புதன் - மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம்.

கடகம் - சந்திரன் - புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

சிம்மம் - சூரியன் - மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் .

கன்னி - புதன் - உத்திரம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் .

துலாம் - சுக்கிரன் - சித்திரை 3ஆம், 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் .

விருச்சிகம் - செவ்வாய் - விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

தனுசு - குரு - முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம்.

மகரம் - சனி - உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம்.

கும்பம் - சனி - அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம்.

மீனம் - குரு - பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி.


ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம் எந்த வீட்டில் குறிக்கிறதோ அதை முதலாவதாக கொண்டு எண்ணுதல் வேண்டும்.

முதலில் ராசி வேறு லக்னம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும், பிறந்த வேளையில் சந்திரன் எங்கு இருக்கிறதோ அதுவே ராசி ஆகும்.

இந்த கிரகங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான குணாம்சங்களை கொண்டவை. இவை ஒவ்வொன்றும் பிற கிரகஙக்ளோட நட்பு, பகை அமைப்புகள் கொண்டவை. இதனை வைத்து ராசி கட்டங்களில் நட்பு வீடுகள், பகை வீடுகள், ஆட்சி , உச்ச , நீச வீடுகள் குறிப்பிடப்படுகின்றன.

சோதிடத்தின் அடிப்படை அமைப்புகளை ஓரளவிற்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என கருதுகிறேன். அடுத்த பதிவில் இவை குறித்த மேலதிக விவரங்களோடு புலிப்பாணி ஜோதிட நூலின் அமைப்பு மற்றும் விவரங்களைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜோதிடம் 300 - ஓரு அறிமுகம்...

Author: தோழி / Labels: ,


சித்தர்களில் பலர் மக்களின் நலன்களை கருதியும், தங்களின் சீடர்களின் துயரங்களைப் போக்கிடும் வகையில் சோதிட ஆய்வுகளின் தெளிவுகளை நூலாக்கி தந்திருக்கின்றனர்.இவை எல்லாமே வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர்.

இத்தகைய நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் ”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இந்த நூலில் பல அரிய விபரங்களை விளக்கியுள்ளார். இதிலிருந்து ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.

வான் மண்டலத்தில் நீள் வட்ட பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை சுற்றிவரும் பாதையில் தான் இருபத்தியேழு நட்சத்திரங்களும் உள்ளன. இந்த இருபத்தியேழு நட்சத்திரங்களின்ன் பாதைகளை பன்னிரண்டு ராசிகளாக பிரித்து, அவற்றை நூற்றி இருபது அம்சங்களாக பகுத்திருக்கின்றனர்.

சந்திரன் இரண்டேகால் நாள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். பிறந்த நேரத்தினைக் கொண்டு சூரியனின் அமைப்பைக் கொண்டு ஒருவரின் லக்னத்தையும், சந்திரனை வைத்து ராசியும் கண்டுபிடிக்கபடுகிறது.

ஜோதிட விதிகளின் படி நாழிகை கணக்கே வழக்கத்தில் உள்ளது. ஒருநாள் என்பது அறுபது நாழிகை ஆகும். அதாவது இருபத்தி நாலு மணி நேரம் அறுபது நாழிகை என்று கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நாள் என்று எழு நாட்கள் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் ராகு , கேது கிரகங்களுக்கு தனியே நாட்கள் வழங்கப்பட வில்லை. இப்படி கிரகங்கள் சஞ்சரிக்கும் கால அளவுகளை ஒட்டியே கிழமைகள், திதிகள், வாரம், வருஷம், எல்லாம் குறிக்கப்படுகின்றன.

புலிப்பாணி ஜோதிட முறை குறித்த மேலதிக விரிவான விவரங்கள் அடுத்த பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கண்நோய் காரணிகளும், மருந்தும்...

Author: தோழி / Labels: , , ,


"பாரே பொடிக்கடல் பருவ வெயில் மேற்படல்

வாறே கொங்கையாள் மாயை மிகச்செயல்

சாயே முளுக்கறல் கண்ணால் அனல்பார்த்தால்

சீரேறு பாஷாணம் தின்றதால் கண்நோய்"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

கடுமையான வெய்யில் உடம்பில் படும் படியாக இருப்பவர்களுக்கும், பெண் மோகம் அதிகமாக கொண்டவர்களுக்கும், மிக அதிக வெளிச்சத்தை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கும், மிக வெப்பமான பொருள்களை உற்று பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்யாத பாசாண வகைகளை உண்பவர்களுக்கும் கண்நோய் வரும் என்று சொல்லும் திரு மூலர் மேலும்,

"கண்நோய் வரும் காரணம் இன்னும் கேள்
புண்ணான மேகத்தால் பருவேட்டை வாயுவால்
தன்னாம் மலக்கட்டால் தன்சலக் கட்டினால்
புண்ணாம் இரணத்தில் போடும் காரத்தாலே"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

கண் நோய் வருவதற்கான காரணங்களையும் சொல்கிறார். மேகத்தாலும், வாயுவாலும், மலச்சிக்கல் வருவதாலும், சிறு நீரை அளவுக்கதிகமாக அடக்குவதாலும், புண்ணான காயங்களுக்கு போடும் கார மருந்துகளாலும் கண் நோய் வரும் என்று சொல்வதோடு,

"காரச்சுருக்கால் கடும் ராசா தூமத்தால்
நேரொத்த சாரம் நிறை மூக்கின் வாசத்தால்
பாரொத்த பேதியால் பலப்பல தண்ணீரால்
சீரொத்த கண்ணில் பிறக்கும் வியாதியே"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

கண்நோய் வருகிற வேறு சில காரணங்களும் உள்ளது, பாத ரசத்தின் புகை படுவதாலும், நவச்சாரம் போன்ற மருந்துகளுன் வாசனையை நுகர்வதாலும், அதிகமாக பேதியாவதாலும், பலவகையான நீரைப் பருகுவதாலும் கண்களில் நோய் ஏற்படுகிறது என்கிறார்.

அத்துடன் அதுக்கு அவரே மருந்தும் சொல்கிறார்,

"இந்துப்பு திப்பிலி இயல்பீத ரோகிணி
நந்திப்பூச்சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக் கருந்ததி தோன்றிடும்
நந்திக்கு நாதன் நயந்து உரைத்ததே"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

கண் நோய் ஏதும் உண்டானால், இந்துப்பு, திப்பிலி, பீத ரோகிணி ஆகியவற்றை எடுத்து நந்திய வட்டை பூவின் சாற்றுடன் சேர்த்து மிருதுவாக அரைத்து கண்ணில் பூசிவந்தால் கண்நோய் குணமாகும், அத்துடன் குருடனுக்கும் பார்வை கிட்டும் இதை நந்திக்கு சிவன் சொன்னது என்கிறார் திருமூலர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...யோகத்தின் உச்ச நிலை...

Author: தோழி / Labels:


"மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முத்தி
வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக்கோனே"
"சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே"
"ஆசையெனும் பசுமாளின் தாண்டவக்கோனே - இந்த
அண்டமெல்லாம் கண்டறிவாய் தாண்டவக்கோனே"


- இடைக்காட்டு சித்தர் -

நமது ஐம்புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும் ஒரு முகமாக்கி, அதனால் மனம் தெளிவதன் விளைவாய் சலனமற்றா அமைதி நிலை உருவாகும். இந்த நிலையில்தான் யோகம் பயில்பவர் இறைவன் தன்னிலும், ஆன்மாவிலும் நிறைந்து உறைந்திருப்பதை உணரத் தலைப்படுவார். இதுவே விவரிக்க இயலாத பேரின்ப நிலையாகும்.

இந்த நிலையைத்தான் யோகத்தின் அதி உயர் நிலையாக குறிப்பிடுகின்றனர். இந்த நிலையினை எய்தும் பயிற்சியினை குருமுகமாக மட்டுமே பயில இயலும்...அதுவே சிறப்பும் கூட

யோகம் பற்றிய தொடர் முற்றிற்று....அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோகம் பயில்வோர் சந்திக்கும் தடைகள்...

Author: தோழி / Labels:

முழுமையான தன்முனைப்போ அல்லது, கவன குவிப்போ இல்லாது யோகம் பயிலும் போது, பயிற்சி செய்பவருக்கு தடைகள் பல வரும் என்று சொல்லும் பதஞ்சலி முனிவர், அத்தகைய தடைகளை பின்வருமாறு விளக்குகிறார்.

எண்ணங்களைக் குழப்பும் சிந்தனைகள் உருவாகும், இதை "சித்த விகஷோப" என்கிறார்.

உடலை வருத்தும் நோய்களும் அதனால் உருவாகும் தடையினை "ஸ்தியானா"என்கிறார்.

தான் பயிலும் யோகம் கைகூடுமா என்கிற சந்தேகம் உருவாகும் மனத் தடையினை "சம்சயா" என்கிறார்.

அலட்சியத்தன்மையையினால் உருவாகும் கவனச் சிதறலை "பிரமாதா" என்கிறார்.

தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் கைவரப் பெற்ற மன ஒருமைப் பாட்டை தக்க வைத்துக்கொள்ள இயலாமல் அதை இழக்கும் தன்மையை "அனாவஸ்த்திதத்வா" என்றும் குறிப்பிடுகிறார்.

எனவே, ஒருவர் யோகப் பயிற்சி செய்யும் போது இது போன்ற தடைகளை எதிர் கொள்ள உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். இவை முறையான குருவின் மேற்பார்வையில் பயிலும் போது தவிர்க்கப் படும்.

தடைகள் எது வந்த போதிலும் அதை தாண்டி தன் இலக்கை அடையும் மன உறுதியும், தீர்க்கமான சிந்தனையும் உள்ளவருக்கே யோகம் சித்திக்கும்.

அடுத்த பதிவில் யோகத்தின் உச்ச நிலை பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோகத்தின் நிலைகள்....

Author: தோழி / Labels:

யோகம் எட்டு நிலைகளைக் கொண்டது. இதனை ”எட்டு படிகள்” என்கிறார், யோகத்தின் பிதாமகரான பதஞ்சலி முனிவர். இந்த எட்டு நிலைகளும் மனிதனின் வாழ்க்கையின் நெடுகில் ஆத்மாவுக்கு உறுதுணையாக இருப்பவை..

இந்த எட்டு நிலைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பானவை.ஒரு நிலை முடியும் தருணத்தில் அடுத்த நிலை துவங்கும். எனவே ஒவ்வொரு நிலையாகவே பயில வேண்டும். ஒரு நிலையில் தேர்ச்சி பெறாமல் அடுத்தடுத்த நிலைகளை பழக முடியாது.எனவே தொடர் பயிற்ச்சிகளின் மூலமும், மனிதனை சூழ்ந்திருக்கும் எல்லா விதமான ஆசைகளில் இருந்தும் மனதை விடுவித்து வைப்பதன் மூலமும் இது சாத்தியமாகும்.

யோகத்தின் எட்டு நிலைகளையும் திரு மூலரும் தனது திருமந்திரத்தில் விரிவாக குறிப்பிடுகிறார்.

"அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே"


- திருமூலர் -

"இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே"


- திருமூலர் -

இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. ஆகியவையே யோகத்தின் எட்டு நிலைகளாக கொள்ளப் படுகின்றன.

இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தையும், நியமம் என்பது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தையும், ஆசனம் என்பது உடற்பயிற்சி நிலைகளையும், பிரணாயாமம் மூச்சு கட்டுக்குள் கொணரும் பயிற்சி முறைகளையும், பிரத்தியாகாரம் என்பது புலனடக்கத்தையும், தாரணை என்பது மன ஒருமைப்பாட்டையும், தியானம் என்பது பரமாத்மாவை உணரும் நிலையையும், சமாதி பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை அடவைவதையும் குறிக்கும்.

உணபது,உறங்குவது,உழைப்பது என வாழ்வின் அனைத்து கூறுகளையும் அளவுடனும், நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்.. இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக வெற்றியடையலாம்.

வாழ்க வளமுடன்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோகத்தில் வெற்றியடைந்திட....

Author: தோழி / Labels:

உணவு உட் கொள்வதில் நிதானம் கடைப்பிடிக்க வேண்டும். அருஞ்சுவை உணவாய் இருந்தாலும் அரை வயிறே உண்ணுதல் வேண்டும்.வட மொழியில் இதனை "மிதாகார" என்பர். அதாவது கூடுதலாய் இல்லாமலும், குறைவாக இல்லாமலும் மிதமாக உண்பதாகும்.

"பசித்த பின் புசி" இது சான்றோர் வாக்கு.பசியின் அளவிற்கு ஏற்றவாறு அல்லாமல் மிகுதியாக உண்டால் நோய் ஏற்படும். யோகம் பயில்பவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு முக்கிய காரணியாகிறது.

அளவுக்கு அதிகமாய் உண்பவனும், மிகுந்த பட்டினியால் வாடுபவனும் யோகத்தில் வெற்றி பெறமுடியாது.

இது போலவே, நாள் முழுவதும் குறட்டை விட்டு தூங்குபவர்களுக்கும், எப்பொழுதும் தூங்காமல் விழித்துக் கொண்டே செயலாற்றுபவர்களுக்கும் யோகம் வெற்றியளிப்பதில்லை.

இந்த பொல்லாத தூக்கத்தினால். தான் பல விசயங்களை இழந்து விட்டதாக கண்ணதாசன் தான் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

கடுமையான உடல் உழைப்பும் கூடாது, சோம்பேறித் தனமாகவும் உட்கார்ந்திருக்க கூடாது, அதிகமாக உணவு உண்டு ருசிக்கு அடிமை ஆகவும் கூடாது, அதற்க்காக பட்டினி கிடந்தது உடலை வருத்தவும் கூடாது.

உண்பது,உறங்குவது, உழைப்பது என எல்லாவற்றிலும் அளவுடனும், நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்.. இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக வெற்றியடையலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


யோகம் - சில தெளிவுகள்

Author: தோழி / Labels:

ஆசையெனும் பெருங்கடலில் சிக்கித் தவிப்பதுதான் மனித வாழ்வென ஆகிவிட்ட சூழ்நிலையில், அத்தகைய மனிதர்களை மீட்டெடுக்க மனித குலத்திற்கு கிடைத்த அரும்பெரும் கொடைதான் யோகம்.

"யோகா" என்கிற வடமொழிச் சொல்லுக்கு, ஒருவரின் எண்ணங்களையும் , சிந்தனைகளையும் ஒருமுகப் படுத்தி அதனை செயல்படுத்துவது என்பதாக பொருள் சொல்லப் படுகிறது. இதனையே மனிதனாகிய ஜீவாத்மா, இறை நிலையான பரமாத்மாவோடு இணையும் செயல் என ஆன்மீக விளக்கமாகவும் கூறுகின்றனர்.

யோகத்தில் என்னதான் நடக்கிறது?

தூய்மையான எண்ணம், செயல், சிந்தனையுடன் உயர்வான இறை நிலையினை தியானித்து எமது உடம்பிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மனதை ஒருமுகமாக்கி, அதன் ஆற்றலை உயர்வான இறை நிலையோடு இனைத்துக் கொள்வதுதான் யோகாமுலம் நிறைவேறுகிறது.

யோக மார்க்கத்தில் ஈடுபடுவோரை யோகி என்கின்றனர். யோகி எனப் படுபவர் இனப துன்பங்களுக்கும், பந்த பாசங்களுக்கும், புகழ்ச்சிகளுக்கும், தூற்றுதல்களுக்கும் அப்பாற்பட்டவராக இருப்பர்.

எல்லா வினைகளுக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. இது மனிதனுக்கும் பொருந்தும், தான் செய்யும் ஒவ்வொரு செயலின் எதிர்வினையை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாத போது, நிலை தடுமாறி சீர்குலைந்து துன்ப சகதியில் வீழ்ந்து அல்லல் படுகிறான்.

இத்தகைய துன்பங்களில் இருந்து தன்னை விடுவித்து பற்றற்ற நிலையை உருவாக்கி தருவதே யோகம் ஆகும். இப்படி விடுபட்டோரே யோகியாவர்.

ஆறறிவு படைத்த மனிதர்கள் அனைவரும் யோகமார்க்கத்தில் ஈடு பட்டு இறை நிலையினை அடையலாம். இதற்கு சாதி, மத, சமுதாய தடைகள் என எதுவும் கிடையாது. எனினும், யோகமார்க்கத்தில் வெற்றி அடைய சில நியதிகள் உள்ளன அவற்றை முறையாக கடைப்பிடிப்பவர்கள் குறுகிய காலத்திலேயே யோக மார்க்கத்தில் வெற்றியடையலாம்.

அதென்ன நியதிகள்? அடுத்த பதிவில் பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஆணென்ன...பெண்னென்ன....?

Author: தோழி / Labels: , ,

ஆனாதிக்கமும், பெண்ணடிமைத் தனமும் ஓங்கியிருந்த அந்த கால கட்டத்தில் பெண்ணடிமைதனம் அல்லது ஆண், பெண் பாகுபாட்டினை எதிர்த்து கலகக் குரல் கொடுத்திருக்கிறார் சிவவாக்கியர்.

"அண்ண லேஅ னாதியே அநாதி முன்அ னாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றல்லோ பிறப்பதற்க்கு முன்னெலாம்
கண்ணிலானின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்த வாறு எங்கனே?"


- சிவவாக்கியர் -

கருவில் உயிர் நிலையில் ஆண் என்றோ பெண் என்றோ வேற்றுமை இல்லை. உயர்வான அந்த நிலையில் வேற்றுமை காணாதவர்கள், மனிதனாய் பிறந்த பின்னர் வேற்றுமை பாராட்டுவது ஏன்?

தன் சமகால சமூகத்திற்கெதிரான சிவவாக்கியரின் இந்த கருத்தினை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதுகிறேன். பாலின பாகுபாடு அல்லது பெண்ணடிமைத் தனத்தினை அவர் முற்றாக நிராகரித்தார் என்பதற்கு இந்த பாடல் மிக முக்கியமானதொரு ஆதாரம்.

ஆக உலகிலுள்ளவர்கள் சிந்தனையை சித்தர்கள் அறியாமல் இருக்கவில்லை. என்பதையே இது வலியுறுத்துகிறது..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உணவே உயிர்..!

Author: தோழி /

மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழும் ரகசியமே அவனது உணவு பழக்க வழங்களில்தான் ஒளிந்திருக்கிறது. இதை நம்மில் பலரும் புரிந்து கொள்ளாமல் ருசிக்கு அடிமையாகி உடலை கெடுத்துக் கொள்கிறோம். நமது உணவுகள் அனைத்திலும் அமிலத்தன்மையும் காரத்தன்மையும் அடங்கியிருக்கிறது. இது உணவுப் பொருட்களின் தன்மையைப் பொறுத்து அளவில் வேறுபடும்.


ஆரோக்கியமான உடலமைப்பிட்கு எண்பது சதவிதமான காரத்தன்மையும், இருபது சதா வீதமான அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் இருந்தால் நிறைந்த சக்தியும் நீடித்த ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும் கிடைக்கும்.

சித்தர்கள் உணவை மூன்று கூறுகளாய் பிரித்து உணர்த்தி வைத்துள்ளனர். அவையாவன சாத்வீக உணவு, ராஜோ உணவு, தாமச உணவு என்பனவை ஆகும். சாத்வீக உணவு தூய்மையை தருபவையாகவும், ராஜோ உணவு உணர்ச்சிகளை தூண்டுபவையாகவும், தாமச உணவு ஆரோக்கியமற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.சித்தர்கள் பெரும்பாலும் சாத்வீக உணவையே உண்டு வாழ்ந்ததாக குறிப்புகள் கிடைக்கின்றன.

பால், வெண்ணை, தேன், பழவகைகள், காய்கறிகள், தானியங்கள் ஆகியவை சாத்வீக உணவிலும், மாமிசம், மீன் , பருப்பு வகைகள் மற்றும் சூடாக உண்ணப்படும் உணவு வகைகள் ராஜோ உணவிலும், கருவாட்டு மாமிசங்கள், மது , லாகிரி, அதிகம் புளித்த உணவுகள் தாமச உணவிலும் அடங்குகிறது.

இதன் அடிப்படைகளை எங்கள் உடல் நலத்துக்கு ஏற்ற உணவை தெரிவுசெய்து ஆரோக்கியமாக வாழ் வோமாக...

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திப்போம்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகத்தியர் அருளிய விகுர்தரச் சித்து...

Author: தோழி / Labels: , , ,

"காணவே விரோதமாய சித்து சொன்னேன்
கருவான விகுர் தரச் சித்துக் கேளு
பேணவே சிவன் வேம்பு சமூலம் கொண்டு
பிரளவே நொறுக்கி அதில் வகையைக் கேளு
தோணவே அண்டமோடு பிண்டம் கூட்டி
காருக்காக பாண்டமது விட்டுக் கொண்டு
நாணவே குளித் தைலம் வாங்கு வாங்கு
நன்மையுள்ள தைலமத்தில் வகையை கேளு"

- அகத்தியர் -

"வகையென்ன கற்பூர சுண்ணம் போட்டு
மத்தித்து ரவிமுகத்தில் வைத்துப் போற்றி
திகையாதே தைலமத்தை நாவில் தீத்தி
செப்பக் கேள் தின்பண்டமேல்லாம் தின்க
நகையாதே தின்றதேல்லாம் இனிக்கும்பாரே
நன்மையுள்ள செலங்கலேல்லாம்அமிர்தமாகும்
பகையான பகைகலேல்லாம் தன்மையாகும்
பக்குவமாய் இக்கருவை பகர வொண்ணாதே"


- அகத்தியர் -

சிவனார் வேம்பு சமூலம் கொண்டு வந்து நறுக்கிக் கொண்டு அதில் குழித்தைலம் எடுத்து, அந்தக் குளித்தைலத்துடன் கற்பூரச்சுண்ணம் போட்டு நன்கு கலக்கி சூரிய ஒளியில் வைத்து பின்னர் சூரியனை வணங்கி எடுக்கவும்.

இதை நாக்கில் தடவிக்கொண்டு எதை தின்றாலும் இனிக்குமாம். நஞ்சும் அமிர்தமாகும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சனி நீராடு? ஏன்?, எதற்கு?

Author: தோழி / Labels: , ,

சனி நீராடு!, தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் தொட்டுத் தொடரும் ஒரு வாசகம். நம்மைப் போல உஷ்ணமான சீதோஷ்ன நிலை பகுதியில் வாழ்வோருக்கு தலைக்கு எண்ணை வைத்துக் குளிப்பது உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள் சொல்வதை, என்றைக்கோ நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கின்றனர். இதன் பின்னால் இருக்கும் அநேக விஷயங்கள் இன்னமும் ஆய்வு செய்யப் படாமல் இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த வகையில் குறிப்பாக "புதன், சனி நீராடு" என்பது பிரபலமான சொல்லாடல், ஏன் புதன் சனி நீராடு என்கிறார்கள்?

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

"கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்
கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்
பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்
பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்
தாளு வியாழன் பலன் தான் கருத்தை போக்கும்
தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்
நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க
நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."


- தேரையர் -

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

இவற்றை அனுபவமோ அல்லது ஆராய்வோ இல்லாமல் எழுதியிருக்க முடியாது. இவற்றின் பின்னால் இருக்கும் சூட்சுமங்களும், அறிவியல் நுட்பங்கள் இன்னமும் ஆராயப் பட வேண்டியுள்ளது...

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இரசமணி - சில தகவல்கள்...

Author: தோழி / Labels:

பாதரசம் எனப்படும் தாதுவே இரசம் எனப்படுகிறது. இதை சிவனின் சொத்து என்கின்றனர். திரவ நிலையில் இருக்கும் அத்தகைய உயரிய இரசத்தை முறையாக கட்டி மணியாக்கி, சித்தர்கள் பயன்படுத்தினர்.

இரசமணி கட்டுவது என்பதுதான் ரசவாதத்தின் முதல் படி, இரசத்தை கட்டும் முறை தெரிந்தவன் தெய்வ அனுக்கிரகத்தை பெற்றவன், நவக்கிரகங்களின் ஆசி பெற்றிருப்பவன். அவனே ரசவாதியாகும் முழு தகுதியும் கொண்டவனாவான். அவனை மற்றவர்கள் தேவர்களுக்கு சமமாக மதிக்க வேண்டும் என்கிறார் கருவூரார்.

"இருந்து பார் சூதத்தை எவ்வண்ணத்தாலும்
இருக்கினவன் தேவனடா இடுக்கமில்லை
"

- கருவூரார் -

"ஆண்டகை தன மோதிரம் அடுத்த பொருளெல்லாம்
தீண்டளவில் வேதிகைசெய் தெய்வ மணி கொல்லோ"


- கம்பர் -

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... இத்தனை மகத்துவம் பொருந்திய இரச மணியால் கிடைக்கும் பயன்கள் அநேகம். அந்த பயன்களை இரண்டு பகுதிகளாக வகுக்கலாம்.

ஒன்று ஞான நிலை அடைய விரும்புபவர்களுக்கு பயன்படும் விதம், மற்றயது உலக இன்பங்களில் வாழ்பவர்களுக்கு பயன் படும் முறை.

முதலில் உலக இன்பங்களில் வாழ்பவர்களுக்கான பயன்கள் பற்றி பார்க்கலாம்...

இந்த இரசமணியைக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால், உடலிலுள்ள முப்பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகியவை சமப்பட்டு தமது நிலைகளில் சீராக இயங்க வைக்கும். இதனால் இவை தொடர்பான எந்த நோயும் உடலைத்தாக்காது பாதுகாக்கும்.

மேலும் நவக்கிரக கோசார பதிப்புக்கள் , பில்லி , சூனியம், செய் வினை போன்றவை அண்டாது பாதுக்காக்கும்.

இடி மின்னல் பருவ மாற்றங்கள் பாதிக்காது மற்றும் விலங்குகள் விஷ பிராணிகள் போன்றவை இம் மணி வைத்திருப்பவர்களை அண்டாது.

இனி ஞான நிலை பெற விரும்பியவர்களுக்கு இம்மணி செய்யும் பலன் பற்றி பார்க்கலாம்.

இராசமனிக்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் தன்மை இயற்கையிலேயே அமைந்திருப்பதால் எந்த பொருளின் சத்தை அதற்க்கு கொடுத்தால் என்ன பலன் தரும் என்பதை அறிந்து செயல்பட வைக்கும் திறமை ஞான நிலை பெற விரும்பியவர்களுக்கு உண்டு.

நவ லோகம் , நவமணி, நவ பாஷாணம் ஆகியவற்றின் சத்துக்களை இதற்க்கு சாரணை முறை மூலம் ஊட்டி அதை வாயில் அடக்கிக் கொண்டு யோகம் பயின்று ஞான நிலை பெறுவார்.

அத்துடன் உடலோடு உயர எழும்பி ஆகாய மார்க்கமாக செல்லும் கேகன குளிகையாகவும் செயல்பட வைப்பார்.

இது போன்று பல சிறப்புக்களைக் கொண்ட இந்த ரசமணியை நாம் உபயோகிக்கும் முறையை பொறுத்து அது பலன் தரும். இதை கட்டும் வழிமுறைகள் பலவற்றை சித்தர்கள் ஒளிவு மறைவின்றி அனைவரும் பயன்பட பாடி வைத்துள்ளனர்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஈழத்து சித்தர்கள் - ஓர் அறிமுகம்...

Author: தோழி / Labels:

சித்தர் மரபியலில் அட்டமா சித்திகளையும் அடைந்த பதினெண் சித்தர்கள் மேலானவர்களாக போற்றி வணங்கிடப் படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இந்திய துனைக் கண்டத்தினை சேர்ந்தவர்கள். காலத்தால் மிகவும் முந்தியவர்கள்.

பலரும் அறிந்திடாத தகவல் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் சித்தர்களைப் போலவே ஈழத்து சித்த பரம்பரை என ஒன்று இருந்திருக்கிறது. இவர்கள் காலத்தால் பிந்தியவர்கள். சமூக அமைப்பில் இருந்து விலகியவர்களாய் இருந்ததால், இவர்கள் குறித்த பெரிதான குறிப்புகள் ஏதும் நமக்கு கிடைக்க வில்லை.

நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களை பார்க்கும் வேளையில் இவர்களைப் பற்றிய விவரங்கள் ஆச்சர்யம் தருபனவாய் இருக்கிறது. சில பெண் சித்தர்களைப் பற்றிய குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன.தமிழகத்தில் இருந்து வந்து போன சித்தர்களைப் பற்றிய குறிப்புகள், ஈழத்துச் சித்தர்கள் ஜீவசமாதியடைந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள் என பகிர சுவாரசியமான தகவல்கள் அவை!

இந்த குறிப்புகளின் அடிப்படையில், ஈழத்தின் நாக்கு திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருப்பதாக தெரிகிறது.
அவையாவன, வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிட் சுவாமிகள் சமாதியும், கிழக்கே காரை தீவில் சித்தனைக் குட்டி சுவாமிகள் சமாதியும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் சமாதியும், தெற்கே நாவலப் பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் விளங்குகின்றன.

ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்...

கடையிற்சுவாமிகள்.
பரம குரு சுவாமிகள்
குழந்தை வேற் சுவாமிகள்.
அருளம்பல சுவாமிகள்.
யோகர் சுவாமிகள்
நவநாத சுவாமிகள்
பெரியானைக் குட்டி சுவாமிகள்
சித்தானைக் குட்டி சுவாமிகள்
சடைவரத சுவாமிகள்
ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
செல்லாச்சி அம்மையார்
தாளையான் சுவாமிகள்
மகாதேவ சுவாமிகள்
சடையம்மா
நாகநாத சித்தர்
நயினாதீவு சுவாமிகள்
பேப்பர் சுவாமிகள்
செல்லப்பா சுவாமிகள்.


அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சித்தர்கள் கணித்த சோதிடம்...

Author: தோழி / Labels: ,

"இதென்ன கிரகச்சாரம் " இது பேச்சு வழக்கில் நாம் அடிகக்டி கேள்விப்படும் வார்த்தையாடல்,இந்த கிரகசாரம் என்பது கிரகங்களின் போக்கில் விளையும் அல்லது சஞ்சரிப்பதால் ஏற்படும் சார பலன் அல்லது கோசார பலன் என்று சொல்வர்.

குறிப்பிட்ட சமயந்தில் கிரகங்கள், நட்சத்திரம், ராசி போன்றவைகள் இருக்கும் நிலையை அனுமானித்து அதன் மூலம் நடந்ததை நடப்பதை நடக்க போவதை சொல்லும் முறையினைத்தான் சித்தர்கள் உருவாக்கிய ஜோதிட முறை என்கிறோம்.

ஜாதகங்கள் கணிப்பதில் தவறு இருக்கலாமே தவிர ஜோதிடம் தவறல்ல என்பது என் கருத்து. ஒருவரின் பிறந்த நேரம் சரியாக இருந்து அதன் படி சரியாக கணித்து விட்டால் ஜோதிடம் ஒருபோதும் தவறாகாது.

சித்தர்கள் ஜோதிடம் கணிக்க மூலமாக கொண்ட சில காரணிகள் மற்றும் கூறுகளை பின் வருமாறு பட்டியலிடலாம்....

நட்சத்திரங்கள்.
அயனங்கள்.
ராசிகள்.
ருதுக்கள்.
நட்சத்திராதிபதி.
லக்னாதிபதி.
கிரகங்கள்.
கிரகங்களின் பார்வைகள்.
கிரகங்களின் ஆட்சி வீடுகள்.
கிரகங்களின் உச்ச நீச இஸ்தானங்கள்.
கிரகங்கள் ராசியில் இருக்கும் கால அளவு.

இவற்றைக் கொண்டு கணிப்பதன் மூலம் நடந்த, நடக்கும், நடக்க போகிற பலன்களை சரியாக சொல்லும் முறையே சித்தர்களால் சொல்லப்பட்ட சோதிடம் ஆகும்.

இதற்க்கு உதாரணமாக ஒரு சில அகத்தியர் பாடல்களை கீழே தந்துள்ளேன்...

"ஞாயிறு திங்கள் செவ்வாய் நற்குரு வெள்ளி கூடிற்
காயுரு பிதிர் துவேஷி காரிரா கூவும் காணே"

- அகத்தியர் -

"இனியதொரு மிதுன பலன் கேளு கேளு
..................................................................
தனிமையா லிருபத்தேட்டில் கண்டால்
தரும் சுபகிரகமே பார்த்தால் மைந்தா
தக்கதோர் வருஷம் அறுபத்து மைந்தும்
தரையினில் லிருப்பார் என்று ராயப்பா"


- அகத்தியர் -


அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


நாடி சோதிடம்... சில நெருடல்கள்...

Author: தோழி / Labels:நாடி சோதிடம் நம்மில் பலர் ஆச்சர்யத்துடன் மலைக்கவைக்கும் அதிசயம். சித்தர்களால் உலகிற்கு அளிக்கப் பட்ட கொடை, இதுவரை பிறந்த அல்லது இனி பிறக்கப் போகிற ஒவ்வொரு மனிதன் குறித்து என்றைக்கோ எழுதி வைத்துவிட்டுப் போனா விலைமதிப்பில்லா பொக்கிஷம்...இப்படியெல்லாம்தான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.

இதைக் குறித்து விரிவாய் பார்ப்பதற்கு முன்னர், இம்முறை குறித்த ஓர் அறிமுகம். அதாவது ஒருவரின் கை ரேகையினை மட்டுமே வைத்து அவருக்கான ஏடை தேடியெடுத்து அவரின் பலன் சொல்வதுதான் இந்த முறை. ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையும் தேவைப் படும்.இதில் இன்னொரு நிபந்தனை கூட உண்டு. உங்களுக்கு விதிக்கப் பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் நாடி சோதிடம் பார்க்க முடியும்.

உங்களுக்கான ஏடுகள் என சிலவற்றை எடுத்து வந்து உங்களிடம் வாசித்துக் காட்டுவர். அதில் எது உங்களின் விவரங்களோடு பொருந்தி வருகிறதோ, அதுவே உங்களுக்கான ஏடு. அதில் உங்களுக்கு கூறப்பட்டிருக்கும் பலன்களை சோதிடர் வாசித்துக் காட்டுவார். நீங்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.

இனி இது தொடர்பாக என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சித்தர்களின் பெயரில் சொல்லப்படும் மூட நம்பிக்கைக்களையோ மலிவான வியாபார உத்திகளையோ நான் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அதன் பொருட்டே எனக்கான தேடலை தொடங்கி நான் அறிந்த மற்றும் உணர்ந்த தகவல்களை பதிவும் செய்கிறேன்.

இதனை சொல்வதால் நான் சித்தர்களின் பாடல்களையோ, அவர்கள் சொன்ன செய்திகளையோ சந்தேகிக்கிறேன் என்று அர்த்தமில்லை, பலரும் நம்பாத சித்தர்களின் ரசவாதம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை மற்றும், ஆர்வத்துடனும் தொடர்ந்து தேடுதல் செய்து வருகிறேன்.

நான் புரிந்து கொண்ட வகையில் சித்தர்கள் நாடி என்பது ஒரு குறிப்பிட்ட தனி மனிதர்களை சார்ந்ததாக இல்லை. மேலும் அவர்கள் தனிமனிதர்கள் குறித்து பெரிதாக எதுவும் எழுதியதும் இல்லை. தனது குரு, அல்லது சீடர் பற்றிய குறிப்புகளைத் தவிர வேறு எதுவும் குறிப்பிட்டு சொல்ல கூடியாதாக இல்லை.

நிதர்சனம் இப்படி இருக்க உலகில் பிறந்த, வாழ்கிற, பிறக்கவிருக்கின்ற மனிதர்கள் எல்லோருக்கும் தனிதனி ஏடுகள் எழுதிவைத்தார்கள் என்றால் அதன் உண்மை தன்மை குறித்த ஐயப்பாடுகள் ஏற்படுவது இயற்கையே.

மேலும் அவர்கள் பாடல்கள் எல்லாம் மறை பொருளில் பாடப்பட்டவைகளே, அப்படி இருக்க, இந்த நாடி ஜோதிடத்தில் மட்டும் தெளிவாக எழுதியிருப்பதன் மர்மம் என்ன? என்பதுதான் என்னுடைய தேடலின் துவக்க புள்ளி.

சித்தர்கள் சோதிடம் பற்றி எதுவும் சொல்ல வில்லை என்று அர்த்த மல்ல, சித்தர்கள் சோதிடத்திலும் வல்லவர்களே, அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ரேகைகளை கொண்டு எழுதியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தான் சொல்கிறேன்.

அப்படியானால் சித்தர்கள் சொன்ன நாடி என்பது என்ன?

சித்தர்கள் சொன்ன நாடி என்பது நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட, கையைப் பிடித்து நெட்டை வாக்கில் பெருவிரலுக்கு மேலே இருக்கும் ஆரை எலும்பின் மேலே ஓடும் நாடியை மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலாக மூன்று விரல்களால் சமமாக மெதுவாய்த் தொட்டு நாடியைக் கண்டு கொண்ட பின் விரல்களை மாற்றி மாற்றிப் பார்த்தால் நாடி நடையைத் தெரிந்து கொள்ளும் முறை மட்டுமே...

இதற்க்கு உதாரணமாக அகத்தியர் நாடியின் ஒரு சில பாடல்களை கீழே தந்துள்ளேன்...

"கரிமுகனடியை வாழ்த்தி கைதனில் நாடிபார்க்கில்
பெருவிரலங்குலத்தில் பிடித்த நடுவே தொட்டால்
ஒருவிரலோடில் வாதம் முயர்நடுவில் பித்தம்
திருவிரல் மூன்று லோடிற் செத்தும நாடியாமே."


- அகத்தியர் நாடி -

"ஆகிய நாடி மூன்றும் படபடவேன்றோடிற் சென்னி
வாக்கினிலன்னம் கோழி மயிலென் நடக்கும் வாதம்
எகியவா மையட்டை இவையென நடக்கும் பித்தம்
போகியே தவளை பாம்பு போல்வான் சேத்துமம் தானே"


- அகத்தியர் நாடி -

அப்படியானால் சித்தர்கள் ஜோதிடம் கணித்த முறை என்ன? அடுத்த பதிவில் பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...