தேரையர்

Author: தோழி / Labels: ,


"வந்ததோர் தேரையர் தான் மகாசித்தர் நூலில் வல்லோர்
அந்த நல் அகத்தியருக்கு அருமையாய் வந்த பிள்ளை
குந்தக
மில்லா பிரம்ம குலத்தினில் வந்துதித்தார்
விந்தையாய் காய சித்தி மிகச் செய்து முடித்தார் பாரே"


- கருவூரார் வாத காவியம் -

இவரின் இயற் பெயர் இராமத்தேவன் என்றும், மருத்துவ ஆராய்ச்சிகளில் சிறந்த தேர்ச்சியுடைவர் என்பதால் தேரையர் என்று அழைக்கப் பட்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் ஆகத்தியரின் சீடர் என்றும் இவரே பின்னாளில் தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் என்கிற சுவாரசியமான தகவலும் சொல்லப்படுகிறது.

மணி வெண்பா
மருந்துப் பாதம்
ஞான போதம்
பதார்த்த குண சிந்தாமணி
நீர்க்குறிநூல்
மாணிக்க கற்பம்
நோய்க்குறி நூல்
தைல வர்க்க சுருக்கம்
வைத்திய மகா வெண்பா


ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது.பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

இதுவரையில் சித்தர்களைப் பற்றி, சிறிய அளவிலான அறிமுகத்தினை பார்த்தோம். பிரிதொரு சந்தர்ப்பத்தில் மேலும் பல சித்தர்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த பதிவில் புதியதொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

2 comments:

Unknown said...

இந்த பாடல்களை எல்லாம் பார்க்கும் போது

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி.....
என்ற பாடலும் சித்தருடைய பாடலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

மிக்க நன்றி!

RAMESH said...

Enakku sitharkalai patri therinthukolla avalaga irukirem

Post a comment