வீர ரசம் தயாரிப்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

"காணவே வீரரசம் சொல்லக் கேளு
கடியதொரு சவ்வீரம் பலம் தான் ஒன்று
பூணவே சுத்தி செய்து பொடிதான் செய்து
புகழான பீங்கானிலிட்டு பனியில் வைக்க
காணவே மணிமணியாய் இறங்கி நிக்கும்
கண்டு ரசம் வாங்கியே பதனம் பண்ணு
கானுவெனச் சருவநோய் எல்லாம் தீரும்
சகல சித்தும் இதனாலே ஆடலாமே"


- போகர் வைத்தியம் 700 -

ஒருபலம் சவ்வீரத்தை எடுத்து சுத்தம் செய்து நன்றாக தூளாக்கி, அதை ஒரு பீங்கான் கோப்பையில் இட்டு பனியில் வைத்தால், சவ்வீரத்திலிருந்து ரசம் இறங்கி இருக்கும், இதை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே வீர ரசம் என்று சொல்லும் போகர், இதனைக் கொண்டு எல்லாவிதமான சரும நோய்களையும் குணப்படுத்துவதுடன், வேறு பல சித்துக்களையும் செய்யலாம் என்றும் சொல்கிறார்.

இனி காந்தரசம் செய்யும் முறையையும், அதை இரசவாதத்தால் தங்கமாக்குவது எப்படி என்றும் அடுத்த பதிவில் பார்க்கலாம். .

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

Kousikan said...

சவ்வீரம் ??

தோழி said...

@Kousikan

சவ்வீரம். - compound, medicine, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

Praveenkumar said...

பயனுள்ள மருத்துவ தகவல்கள். பகிர்வுக்கு நன்றி..!

rajsteadfast said...

Ariya Thagaval. Nanri.

AND KRISHNAMOORTHY said...

பயனுள்ள மருத்துவ குறிப்பு. மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் தோழி!!!
எல்லாவித சரும நோய்களுக்கும் என்று பொதுவாகவே கூறப்பட்டுள்ளது. உபயோகிக்கும் முறைகள் வகைப்படுத்தப் பட்டிரிப்பின் மிக்க நலமாயிருக்குமே தோழி!!!!
மேலும் சித்து ஆடலுக்கும் பயன்படும் என்று ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளீர்கள்!!!

thavasi said...

payanulla thakavalkalai paruku alikum unthan muyarchiku entha tholanin manamarntha nanrikal...

Post a comment