சொறி சிரங்குக்கு மேல்பூச்சு

Author: தோழி / Labels: ,

"நோயது சிரங்கு சொறி கரப்பான் ஏது
நுவலவொணாது ஆறாபுண்புரைகள் ஏது
நோயேது இன்னமும் ஒரு சேதி கேளு
நுணுக்கமாம் தேங்காயை கருகச்சுட்டு
கலங்காமல் அதில் பாதி மிளகும் சேர்த்து
நோக்கமாய் அரைத்துஅதை வழித்துக் கொண்டு
நோயேது மேல் எங்கும் மூனால் பூசு பூசே
நேர்மையுடன் சாயரட்சை வெந்நீர் வாரே"


- போகர் வைத்தியம் 700 -

தேங்காயை கருகிப் போகும் அளவு சுட்டு அந்த தேங்காயின் அளவில் பாதி மிளகு சேர்த்து நன்றாக அரைத்து நோய் ஏற்பட்ட இடங்களில் பூசி பகல் முழுதும் விட்டு பின்னர் மாலையில் வெந்நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு மூன்றுநாள் தொடர்ந்து செய்தால் சொறி , சிரங்கு, கரப்பான் போன்ற நோய்களும், அதே போல ஆறாமல் இருக்கும் மற்ற புண்கள் கூட ஆறிவிடும் என்கிறார் போகர்.

இவை தவிர போகரின் இந்த ”போகர்700” நூலில் பல எண்ணை வகைகள், தைல முறைகள், சூரணம், உண்டை, மேற்பூச்சு வகைகள், செந்துரவகைகள், பற்பங்கள், மாத்திரைகள், வசிய முறைகள், அஞ்சனங்கள், மை வகைகள், கியாழங்கள் என பல அரிய தகவல்களை சொல்லியிருக்கிறார்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.....


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

பிரவின்குமார் said...

மிகவும் பயனுள்ள தகவல்கள். தொடருங்கள்.

VELU.G said...

தகவலுக்கு நன்றி

Vijaya said...

Hai
போகர் கூறிய இந்த வைத்தியத்தை முகபருக்கு பயன்படுத்தலாமா!

தோழி said...

@பிரவின்குமார்

மிக்க நன்றி...

தோழி said...

@VELU.G

மிக்க நன்றி...

தோழி said...

@Vijaya
இது முகப்பருவுக்கு பயன் தராது. தனிப்பட்ட தகவல் எதுவும் வேண்டின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

V.Radhakrishnan said...

ஆஹா அருமை.

தோழி said...

@V.Radhakrishnan

மிக்க நன்றி...

Dhana said...

good...

Dhana said...

good

Saravanan.V said...

Yes. this site library. very useful.

THIRUMAL said...

nice

Essell Power said...

Very nice & effective, I got cured.
Thanks for your service.

varatharajan ranganathan said...

with coconut shell or pulp to be heated mam please clear my doubt

Vignesh waran said...

Psoriasis Ku Treatment Sollunka.......... Pls......

Post a Comment