சுரம் குணமாக...

Author: தோழி / Labels: , ,

"கண்டு பார் பித்த சுரம் பித்தவெட்டை
கலங்காதே அத்திசுரம் காணாமல் ஓடும்
கொண்டு பார் பேய்புடலும் கிராம்பு சுக்கு
கொரையான் கிழங்கு நில வேம்பு மல்லி
தண்டு மிண்டு செய்யாதே சமனாய் கொண்டு
சாதகமா நீர் வார்த்தே எட்டு ஒன்று ஆக்கி
உண்டிடவே சொன்னதொரு சுரங்கள் எல்லாம்
ஓடுமடா வான் எழிலி போலத்தானே..!"


- போகர் வைத்தியம் 700 -

பேய்புடல், கிராம்பு, சுக்கு, கோரைக் கிழங்கு, நில வேம்பு, கொத்து மல்லி ஆகியவற்றை சமனாக சேர்த்து பாத்திரத்தில் இட்டு அளவான நீரை விட்டு எட்டில் ஒன்றாக காய்ச்சி அதை அருந்தினால் பித்த சுரம், பித்த வெட்டை, அதிசுரம் ஆகிய நோய்கள் தீரும்,அத்துடன் சுரங்கள் எல்லாம் தீரும். இதற்க்கு பத்தியம் ஏதும் சொல்லப்படவில்லை அத்துடன் ஒருதடவை அருந்தினால் போதும் என்றே சொல்லப் பட்டுள்ளது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

அ.முத்து பிரகாஷ் said...

நாளை வீட்டிற்கு போய் அருந்தி பார்க்கிறேன் ...
நன்றி தோழி ....

.........

உயிரோடு விளையாடும் dash களின் கல்லூரி...
http://neo-periyarist.blogspot.com/2010/05/dash.html

தோழி said...

@நியோ

நண்பரே!, தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பொருட்டே இந்த பதிவுகளை இடுகிறேன்....எனவே தயவு செய்து நல்ல சித்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை பெற்ற பின்னர் இம் மருந்துகளை முயற்சியுங்கள். நன்றி.

rajsteadfast said...

Nalla Thagaval.

keep it up.

Nanri

தமிழ் மதுரம் said...

தோழி.. எல்லாமே பயனுள்ள தகவல்கள்.. அதுவும் பண்டைத் தமிழ் மொழிக்கு விளக்கவுரையுடன் பகிர்கிறீர்கள்.. தொடரட்டும் உங்கள் பணி...

தோழி said...

@rajsteadfast

மிக்க நன்றி...

தோழி said...

@கமல்

மிக்க நன்றி...

SivaSubramanian said...

காய கற்பம் நீங்கள் சொன்ன முறையில் தயார் செய்து சாப்பிடலாமா தோழி................

Post a comment