புலிப்பாணி ஜாலம்...

Author: தோழி / Labels:

போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல்தான் புலிப்பாணி ஜாலம்325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதனை இனி வரும் பதிவுகளில் காண்போம்.


நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்...

"பாடினேன் அக்கினியு மில்லாமற் றான்
பண்பான அன்னமது சமைக்கக் கேளு
ஆடினேன் கானகத்தில் வேண துண்டு
அடைவாக சதுர கள்ளி பாற் கரந்து
சாடி நீ பாண்டத்தி லரிசி போட்டு
சரியாக பால்தன்னை சுருக்காய் வாரு
நாடிப்பார் சோறதுவும் வெந்திருக்கும்
நலமாக ஜாலம்போல் லாடிப் பாரே"


- புலிப்பாணி ஜாலம் 325 -

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் காட்டிலிருந்து கறந்தெடுத்து வந்த சதுரக் கள்ளியின் பாலை விட்டு கால் நாழிகை மூடி வைதிருந்து திறந்து பார்க்க சாதம் நன்றாக வெந்திருக்கும்.. ஆனால் அந்த சாதத்தை யாரும் புசித்தலாகாது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

க.பாலாசி said...

அசத்தல் பாடலும் விளக்கமும்... நன்றி பகிர்தலுக்கு...

VELU.G said...

புலிப்பாணி ஜோதிடம் என்கிறார்களே அவரா இவர்

தோழி said...

@க.பாலாசி

மிக்க நன்றி...

தோழி said...

@VELU.G

ஆமாம் புலிப்பாணி ஜோதிடம் 300 என்ற நூல் இவர் எழுதியது தான்.. நன்றி...

Mugilan said...

அட! சித்தர்கள் அறிந்திருந்த வித்தைகளுக்கு கணக்கே கிடையாது போலிருக்கே!

Post a comment