அழுகணிச் சித்தர்

Author: தோழி / Labels: ,

"வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ!"

- அழுகணிச் சித்தர் -

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது.

இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள்.

இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மை.

பொதுவாக இவர் தனது பாடல்களில் "உன்னை அறியாமல் உலகத்தில் உள்ளவைகளை அறிவதால் எந்தவிதப் பயனுமில்லை" என்னும் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

இவர்,

அழுகணி சித்தர் பாடல் 200
ஞான சூத்திரம் 23
அழுகண் வைத்தியம்
அழுகண் யோகம்
அழுகண் ஞானம்

ஆகிய நூல்களை இயற்றியதாக சொல்லப் படுகிறது.

நாகப் பட்டினத்தில் உள்ள நீலாய‌தாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இவர் சமாதி இன்றும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அழுகணிச் சித்தர் ஜீவசமாதி......


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

Sivaji Sankar said...

அருமை... உங்கள் பனி சிறக்க வாழ்த்துகிறேன்........

Sabarinathan Arthanari said...

புதிய தகவல்
நன்றி

vijaya shankar said...

அழுகணி சித்தர் பாடல்கள் 200ஒலி குறுந்தகடுகள் எனக்கு வேண்டும். (vijshank@gmail.com)

ஆன்மீக உலகம் said...

உன்னை அறியாமல் உலகத்தில் உள்ளவைகளை அறிவதால் எந்த விதப் பயனுமில்லை... மிக அருமையானதொரு வாசகம்... நம்மை அறிய தியானம் தான் சிறந்ததொரு வழியா? இல்லை ஆதமாக்களின் ஆய்வா? தங்களின் பதிலை எதிர்பார்க்கும் சகோ!

Anonymous said...

@ஆன்மீக உலகம்தியானத்தில் தான் அறிவை அறிவே அறிகிறது, அறிவை அறிவு வெல்லும் போது தான் நமக்கு பிரம்ம ஞானம் தோன்றி ஆன்மாவை உணர்கிறோம். ஆகவே தியானம் தான் பிரம்ம ஞானம் என்று சொல்லும் ஆத்மா தரிசனத்திற்கு திறவுகோல்

pk mariyappan said...

சூப்பர்

pk mariyappan said...

சூப்பார்

Ragu Isha said...

தியானம் பற்றிய தகவல்கள் தேவை!!...

ParasumannaSokkaiyer Kannan said...

good contribution

Post a Comment