கற்பம் சித்தியானதை கண்டறியும் முறை...

Author: தோழி / Labels:

காயகற்பத்தில் பல முறைகளும், வகைகளும் உள்ளன. இவற்றை மையமாய் வைத்து எழுத ஆரம்பித்தால் முடிவற்ற தொடராக போய்விடும். அதனால் முந்தைய பதிவுகளில், சில எளிய காயகற்ப முறைகளை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.

காயகற்பம் எடுத்துக் கொண்ட பின்னர் காயசித்தி ஆகிவிட்டதா, என்பதை அறிந்து கொள்ள பிரண்டைக் கொழுந்தை வாயில் போட்டு தின்றால் அது கரும்பு போல் இனிக்கும், என்று சொல்லும் சித்தர்கள்.....காய சித்தி பெற்றவர்கள் எதை சாப்பிட்டாலும் அவர்கள் உடம்பிற்கு அழிவோ தீங்கோ ஏற்படாது என்றும் சொல்கிறார்கள்.

"தித்திக்கும் லட்சணம் தான் பிரண்டை முந்தி
செய்த பின்பு என் மக்காள் கேளு கேளு
மத்திக்கும் பாசணமெல்லாந் தின்னு
மலஜலமும் பொன்னாகும் வயிரதேகம்
மொத்திக்கு மூன்றுடம்பில் தேகந்தகம்
உத்தமனே செம்பாகு மோடுந்தூரம்
அத்திக்கு சூதமொடு கந்தகத்தை உண்ணு
அம்மம்மா தேகமெல்லாம் களங்குமாச்சே"


மேற்சொன்னபடி சோதித்து அறிந்த பின்னர், பாஷாணங்கள், இரசம், கந்தகம் போன்றவைகளையும் சாப்பிட்டால் உடம்பு களங்கு போல ஒளி வீசும் என்கிறார். அத்துடன் உடம்பில் வயது முதிர்வால் உண்டான சுருக்கங்கள், நரைமுடி மாறுவது, தோல் உரிந்து பொன்னிற உடல் ஆவது , கொட்டாவி, சோர்வு, தூக்கம் இவை நீங்குவது, போன்ற அறி குறிகளைக் காணலாம் என்கிறார்கள்.

இது போல, பாம்பாட்டி சித்தரும் தான் கற்பம் உண்டு பெற்ற பயனை சொல்கிறார்,

"காலனெனும் கொடிதான கடும் பகையை நாம்
கற்பமேனும் வாளினாலே கடந்து விட்டோம்
தாளமத்தில் பிறப்பினை தான் கடந்தோம்
தற்பரம் கண்டோமென்று ஆடு பாம்பே"


வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

jagadeesh said...

அருமையான இடுகை.இதனால் எங்களை மீண்டும் "காயகல்பம் செய்முறையும், அதன் பத்தியங்களையும்" அலச வைத்துவிட்டிர்கள். யோக காயகல்ப முறையும் விரைவில் பதியுங்கள் தோழி.

jagadeesh said...

அருமையான இடுகை.இதனால் எங்களை மீண்டும் "காயகல்பம் செய்முறையும், அதன் பத்தியங்களையும்" அலச வைத்துவிட்டிர்கள். யோக காயகல்ப முறையும் விரைவில் பதியுங்கள் தோழி.

Vijai said...

அருமையான படைப்புகள் ... மீண்டும் பதிப்பதர்கே பொறுமை வேண்டும் ... நன்றி ..

கவி அழகன் said...

அருமையான இடுகை

தோழி said...

தொடர்ந்து பதிவினை வாசித்து வாருங்கள், விரைவில் அவற்றையும் பதிய முயற்சிக்கிறேன். நன்றி jagadeesh,

நன்றி kalavum kattrum ara,

நன்றி யாதவன்,

Unknown said...

oru pen sitharkalai pattri ezhuthuvathu enakku
migavum magishchi. but what is your practical
knowledge about this "kaya kalpam"

Ramarajan said...

காயகற்பம் மருந்தும் இருக்கு.

காயகற்பம்னு யோகாவும் இருக்கா.?

Suren said...

kaya karpam enbathu enna? eppadi athai seivathu? matrum, eppadi athai utkolvathu endru vivaramaga pathivu seithal migavum ubayogamai irukkum.. thangalin matra idugaigalum paditthen.. mei silirthen. nandri.

AMAR said...

அம்மா.பெண்ணிலே தாங்கள் முதன்மையானவர்,இந்த கலிகாலத்தில்ॐதங்கள் செல்லும் பாதை புண்ணியபாதை,தங்களுக்கு இந்த வாழ்வில் நிம்மதியும் இறுதியில் முக்தியும் சிவனும் சித்தர்களும் நிச்சயம் தருவார்கள்.அமர்நாத்

Post a comment