சித்தர்கள் மறை பொருளில் பாடியது ஏன்?

Author: தோழி /

சித்தர்களை வகைப் படுத்த முடியுமே தவிர வரையறுக்க இயலாது.அவர்கள் தனித்துவமானவர்கள். எல்லோரும் ஆதியும் அந்தமும் ஆன சிவனில் ஒடுங்குவதையே இலக்காக கொண்டிருந்தாலும், அதை அடைய தங்களுக்கே உரித்தான வழிகளை கடைபிடித்தனர். ஆனால் அடிப்படை என்னவோ ஒன்றுதான்.

என்னுடைய வாசிப்பனுபவத்தில் சித்தர்களை இரண்டு வகையாக புரிந்து கொண்டிருக்கிறேன். முதலாமானவர்கள் சகல வாழ்வியல் இன்ப துன்பங்கள் அனைத்தும் போலியானவை என கருதி அவற்றைத் துறந்து சிவனில் ஐக்கியத்தை பெற்று பரமானந்த நிலையில் வாழ்ந்தவர்கள். இவர்கள் பிறரை பொருட்டாய் கருதியதே இல்லை.

இந்த வகைக்கு பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரி நாதர், தாயுமானவர் போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.

இரண்டாம் வகையினரோ முற்றிலும் மாறுபாடானவர்கள், பலகாலம் அழியாத உடல் வேண்டி, இரசவாதம் போலான நுட்பங்களை ஆய்ந்தறிந்து, காயசித்தி பெற்று வாழ்ந்தவர்கள்.

இந்த இரு பிரிவினருமே சித்துக்கள் பல செய்திருக்கின்றனர். இம்மாதிரியான சித்துக்களே மக்களை சித்தர்கள் பால் ஈர்த்தது எனலாம். சித்தர்கள் எவரும் மக்களை நாடிச் சென்று தாங்கள் கண்டறிந்ததை சொல்லியதாக தெரியவில்லை. பெரும்பாலும் தங்களை அண்டியிருந்த சீடர்களின் நலனுக்காகவே தங்களின் அறிதலை வெளிப் படுத்தியிருக்கின்றனர்.

மனிதர்கள் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்து தங்களையொத்த மேலான நிலையினை அடைந்திட வேண்டுமென நினைத்தனர். அதன் பொருட்டே தங்களின் அரிய பெரிய கண்டு பிடிப்புகள் ஆசாபாசம் நிறைந்த மனிதர்கள் கையில் சேர்ந்திடக் கூடாது என்பதில் பிடிவாதமாயிருந்தனர் என நினைக்கிறேன்.

இதன் பொருட்டே தங்களின் உணர்தல்களையும், புரிதல்களையும் தங்களையொத்த மாந்தர் புரிந்து கொள்ளும் வண்ணம் மறை பொருளாய் பாடிவைத்தனர் என்கிற கருத்தும் உள்ளது. இந்த பாடல்கள் எளிய வார்த்தை கட்டுகளால் ஆகியிருந்தாலும் அதன் மறைபொருள் ஆழமானது. கீதையில் கூட பகவான் கிருஷ்ணர் கூறும் ஒரு பதத்தினை இதற்கு ஒப்பாய் சொல்லலாம்.

"நீ எந்த வடிவத்தில் என்னை நினைத்து வழிபடுகிறாயோ அந்த வடிவத்தில் நான் உனக்கு தோற்றம் தருவேன்"

இது மாதிரியானதே சித்தர் மொழி.இதில் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே ஆழ்ந்து படித்து பொருள் தெரிந்துகொண்டு பயன்படுத்த முடியும்.

சித்துக்களுடன் சேர்த்து மறை பொருளில் பாடினால் என்ன இருக்கிறது என்று அறியும் ஆவலிலாவது மக்கள் ஆழ்ந்து படிப்பார்கள் என்ற எண்ணம் சித்தர்களிடம் நிலைத்திருந்தமையும் இந்த மறை பொருளில் பாட காரணமாக அமைந்திருக்கும்.

ஆகவே ஆழ்ந்து படிப்பதன் மூலமே இவற்றை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

நிகழ்காலத்தில்... said...

சித்தர்கள் தாங்கள் அறிந்த சித்துகளை, நாம் உண்ர்ந்து பயிலும்போது முறையாக அதற்குரிய
மந்திரங்கள், செயல்முறைகளை செய்து சிவலயத்துக்கு தடையாய் உள்ள விசயங்களை சரி செய்து கொள்ள சொன்னார்கள்.

அதை முறையாக செய்யாவிடில், முறையற்ற, பாதகமான விளைவுகள் ஏற்படும், அது நம்மை
பாதிக்கக்கூடாது என்கிற அருள் உள்ளத்தோடு
ஆர்வமுடையோர் முயன்று உணர்ந்து பயனடையட்டும் என்ற பெருநோக்கோடுதான் மறைத்து வைத்தார்கள்.

5 கியர் உள்ள கார் நம் கட்டுப்பாட்டில் சிலசமயம் இருப்பதில்லை. 6 வது, 7 வது கியர் இருப்பது தெரிந்தால் பலனும் உண்டு, பாதகமும் உண்டு.
ஆகவே சற்று மறைத்து வைத்தனர்.

கெட்டவனும் மனிதனே, அவனும் சிவனாகலாம். ஆனால் அவனும் பாதிக்கப்படக்கூடாது என்கிற அன்பு ஊற்றின் காரணாமாகவே மறைபொருளாக்கினர்.

நன்றி தோழி

Sugumarje said...

உண்மைதான்... என் பள்ளிக்காலங்களில் திருமூலரின் திருமந்திரம் படித்து அதனுடைய உண்மை விளக்கம் பெற மிக்க கடினமாக இருந்தது. மேலோட்டமாக படித்தால் ஒரு அர்த்தமும், ஆழ்ந்து படித்தால் பிரிதொரு அர்த்தமும் தருவதே சித்தர் பாடல்களின் மற்றொரு சிறப்பு.

Unknown said...

எப்படி இத்தனை நாட்களாக உங்கள் எழுத்துக்களை கவனிக்காமல் விட்டேன்.
நீங்கள் இது வரை எழுதியவற்றை வாசிப்பதற்கே இன்னும் பல மாதங்கள் தேவை போலிருக்கிறதே.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

Malar said...

Ninaithuparkkakood mudiyatha visayam ondrai neengal Sadharanamaha Seithukondu Irukindreerkal, Enathu Sidharkal patriya Tedlkal Ingu Nilaipetullathu. Tamilnattil Irunthu Engalal Unara Mudiyatha Visayangalai Neengal todarumpothu Enudaya Aacharyatiku Ellaye Illai.
....Santhoosam...

Post a comment