அழகிய கூந்தல் பெற...

Author: தோழி / Labels: , , ,

"அழகு நுதலின் அதிசயம் கேளாய்
களவு காயம் கலந்த அன்நீரிலே
மிளகு மஞ்சள் கடுதேல்லி வேம்பிடில்
இளகும் காயம் இறுகும் கபாலமே"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

அழகிய கூந்தலுக்கான அதிசயம் கேள், கடுக்காய் பருப்பு ,மிளகு மஞ்சள், நெல்லி முள்ளி, வேப்பங்கொட்டை ஆகிவற்றை ஒவ்வொரு களஞ்சி அளவு சேகரித்து அதில் அளவாக பசும்பால் விட்டு நன்கரைத்து, அதனை தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும் இதனால் உடல் பொலிவடையும் என்று சொல்லும் திரு மூலர் தொடர்ந்து,

"கபாலம் இறுக்கும் கண்ணும் துலக்கமாம்
அபால மந்தனி அதிவண்டு போலாகும்
விபாலத்திசை வாய்வு வேலை செய்யாது
இபாலத்தினுள்ளே எளிதாக மாத்தியே."

- திருமூலர் வைத்திய சாரம் 600 -

இம்முறையில் தொடர்ந்து தலை முழுகிவந்தால் கபாலம் உறுதி பெறுவதுடன், கரு வண்டு போல கரிய நிற கூந்தல் கிடைக்கும், அத்துடன் வாய்வு நோய்களும், தலைவலி போன்றவையும் அண்டாது என்கிறார் திருமூலர்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...Post a Comment

13 comments:

jagadeesh said...

இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான குறிப்பா?

rajsteadfast said...

Nalla Thagaval...inre seithu paarkiren...

Nanri

தோழி said...

@jagadeesh

ஆமாம் அனைவருக்கும் பொருந்தும் நன்றி.

kimu said...

ஒவ்வொரு "களஞ்சி" அளவு - என்றால் என்ன?

தோழி said...

@-கிமூ-

களஞ்சி அல்லது களஞ்சு என்பது ஒரு நிறுத்தல் அளவை முறை. துல்லியமாய் இத்தனை கிராம் என சொல்ல இயலாது. நாட்டு மருந்து கடைகளில் இம்மாதிரியான அளவீட்டு முறைகள் இன்னமும் புழக்கத்தில் இருக்கிறது.நன்றி..

Unknown said...

thank u 4 ur infrmatnss....very nice

Rudras Breeders said...

what is kael? I searched google for kael but I couldn't find any thing related.... please answer

Anonymous said...

milagu manchal endral... manchal mudi udhivadarkaga podapaduvadu alava... endha manchal poda vendum... please explain

Hari Haran PS said...

மிளகு மற்றும் மஞ்சள். முடியில் மஞ்சளிட்டால் முடி உதிராது.

Finku said...

Manjal powder use panna mudiyuma? or manchal urasi eduka wenuma?

Unknown said...

anbana thoziku vanakkam,
PON PARUTHIYILAI SARU,MILAKU MANJAL,KAIYANTHAKARAI SARU,KUNRIMANIPARUPPU.
i NEED AN EXPLANATION,I AM A NEW COMER. KINDLY PROVIDE THE DETAILS

தாேழன் said...

ஒரு களஞ்சு = 5.1 கிராம்

தாேழன் said...

ஒரு களஞ்சு = 5.1 கிராம்

Post a comment