பெண் சித்தர்கள்....சில கேள்விகள்...

Author: தோழி / Labels:பண்டைய இந்திய கலாச்சாரத்தில், ஞானத்தால் முதிர்ந்து, இறைவனுக்கு இணையாய் பாவிக்கப்பட்ட சித்த மகா புருஷர்கள் ரசவாதம், மருத்துவம் , சோதிடம் , மாந்திரீகம் போன்ற பல கலைகளிலும் தேர்ந்து சிறந்து விளங்கினார்கள்.

இப்படியான மேன்மையான நிலையெய்திவர்கள் பெரும்பாலும் ஆண்களாய் இருப்பது நமக்கு பல கேள்விகளை விதைக்கிறது.

சித்தர்களில் பெண்கள் பற்றி பெரிதான குறிப்புகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை... அப்படியே பெண்கள் இருந்திருந்தாலும் அக் காலத்தைய ஆணாதிக்க சமூகத்தின் தாக்கத்தினால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் எஞ்சியிருக்குமென எதிர்பார்க்கவும் இயலாது.

சமூகவியல் காரணங்களினால் பெண் சித்தர்களைப் ப்ற்றிய குறிப்புகள் கிடைகக்வில்லையா அல்லது நிதர்சனத்தில் பெண் சித்தர்கள் இல்லையா என்பதும் விவாதத்திற்குறியது.

எமக்கு கிடைத்திருக்கும் விவரங்களின் வகையில் சில பெண் சித்தர்கள் வாழ்ந்தததாக குறிப்புகள் சில கிடைத்தாலும், அவர்களின் வரலாறு மற்றும் அவர்களின் குரு யார், அவர்களுக்கு சீடர்கள் உண்டா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இவர்களின் பாடல்களோ அல்லது அவர்களின் அற்புதங்கள் பற்றிய விவரங்களும் இல்லை. அப்படியான படைப்புகள் ஏதும் இல்லையா அல்லது காலத்தால் அவை மறைக்க பட்டதா என்பதெல்லாம் ஆராச்சிக்குரியது...

மிகச் சமீபமாய் பரமாச்சாரியார். ராணி சென்னம்மாள், மாயம்மாஆகிய மூன்று பெண் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் முறையே காஞ்சிபுரம், பிதானூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில்ஜீவ சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன.

இவர்களைப் பற்றிய மேலதிக விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். போதுமான ஆதாரஙகள் மற்றும் பாடல்கள் கிடைக்கும் போது விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்..

மாயம்மா ஜீவ சமாதி கன்னியாகுமரி


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

27 comments:

மதுரை சரவணன் said...

நல்ல முயற்சி . பாராட்டுக்கள்.

jagadeesh said...

அந்த காலத்தில் பெண்களுக்கு என சில கட்டுப்பாடு இருந்தது, அவர்கள் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது, பெண்கள் என்பவர்கள் ஆணுக்கு பணிவிடை செய்பவர்களாகவே பாவிக்கப்பட்டனர், ஆகையால் மிக சில பெண்களே மோட்ச நிலையை எய்தினர். அவ்வையார்( அதுவும் அவர்கள் மணமாகததால்).

Unknown said...

supper

Unknown said...

Namaskaram sir,thanks for sharing the above..amwsome..just to check,what about Sakkarai Ammal? i've visited her Samadhi last year at Mylapur..is she considered a women siddhar as said above? just to check humberly :)

Unknown said...

தோழி,

பெண் சித்தர்கள் பற்றி படித்தான் அதில் உள்ள ஆண் பெண் ஆதிகம் பற்றி சொல்லி உள்ளீர். சித்தர்களுக்கு ஏது பாகுபாடு...?
இது எனது அய்பாடு...!

Thiru said...

in madurai also one women attained jeeva samadhi.

Santharam's said...

@jagadeesh
Not like that. Karikal ammaiyar & Aouvaiyar are like chiters only.

Regards
Santharam

Ashwin Ji said...

தமிழ் கூறும் நல்லுலகைத் தாண்டி ராணி சென்னம்மாவைக(கர்நாடகம்) குறிப்பிட்டிருந்தீர்கள். அதைப் போல அக்கமஹாதேவி (கர்நாடகம்) ஒரு பெண் சித்தர் என்று படித்திருக்கிறேன். காஷ்மீர சைவத்தில் லல்லேஸ்வரி எனும் பெண் சித்தர் பெரும்பங்கு வகிக்கிறார்.

Anandan Manickam said...

Mayamma's attained Jeeva Samadhi in the year 1991 which is 10 kms from Salem Junction near Adivaram (Yercaud route) - on the opposite side Shirdi Sai Baba Temple

Dr. Sri Muralidhara Swamigal said...

siddharlakshmiamma'attained jeeva samathi(near market) last few years back which is two kms near karnool bus stand in andrapradesh the karnool people build big temple,daily 1000 of devotees come and get blessings to him

prabhu said...

thanks for information sister your name please

Unknown said...

Sorry friends tamil la type panna mudiyala.. Vaisnava devi endra pen siddhar stay at katra(jammu) nam tamilagathil irundu sendravar.. Ramanai nookki thavam iruppavar enna koora padukirathu, lakshmanan yeitha(suttiya) ambu villuntha idathil thavam purikkindral... Antha kanni pen...

Unknown said...

Nanbargale tamilil type panna mudiyatha thanathirku muthalil varunthukiren.. Vaisnav devi endra kanni sri raman poorukku sellum mun,ramanai manakka, lakshman yeitha ambu viluntha idathil thavam purikkindraal.. Antha pen tamilagathil irunthu sendraval.. Lakshmanan eitha ambu vilunthathu; jammu vil ulla katra ennum malai agum.. Vaisnu devi kooda pen siddhar thaan...

Unknown said...

Siththargalai perra thayigalum siththargale.
Ungal muyarchi an poonrorku teyiveega thuntukol neengal vazhga.

ashan said...

pengal enbavar sittargalai padaipavar... thai enbaval than pala sithargal padaithar. entha oru sitharum thai illamal pirandhadhaga oru sarithiramum varadhu.... pengal sithargalin 1st kadavul enbhadhai nam ellorum arivom..

THIRUMAL said...

uyara maha valara ethum marunthu erunthal sollungal

Unknown said...

kumaran GOOD LUCK AND ALL THE BEST

Unknown said...

hemkumar all the best GOOD LUCK continue this
GOD WILL BLESS YOU

Unknown said...

ஔவ்வையாரைப்பற்றி எழுதலைன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள் .இதுபோல் நாயன்மார்களை பற்றி எழுதுங்கள் தோழி

Anonymous said...

kudambai siddhar is a female siddhar........many says like tht........whn it comes to siddha..dere is no gender and all.....when we go temple of shiva..we dont cary the ego of male or female..we are one to shiva...livin with nature is shaivam !!

முருகன் said...

Mayamma was actually shifted to Salem By Mr.Illayaraja & co. due to some reason known to him. Contact Mastro Illaya Raja for more details. When She was shifted,She was not in a good condition and no one was taking responsibility to take care of her. Then this matter was known to our great and lucky Mastro, who took charge of her.

முருகன் said...

Mayamma was actually shifted to Salem By Mr.Illayaraja & co. due to some reason known to him. Contact Mastro Illaya Raja for more details. When She was shifted,She was not in a good condition and no one was taking responsibility to take care of her. Then this matter was known to our great and lucky Mastro, who took charge of her.

Senthilkumar Muruganandam said...

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். திருச்சி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் பல் அற்புதங்கள் நிகழ்த்தியவர். அவரை பற்றிய தகவல்கள் www.kulumiananthswamy,in என்ற தள்த்தில் காணலாம். தங்கள் தள்த்தில் மகானை பற்றி கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.

jaichand said...

Oe more pen Siddhar, her name is Andal Pitchai, she attained Samadhi near Chengalpet. according to Muralidhara guruji of Maharanyam if she sings Gods used descent to Earth.

bharatheeyan-santhosham said...

I read an article which described "Lalleswari"; it is wonderful and lead people into right directions. I applaud very much that article. I wish I will be benefited joining your website.

"bharatheeyan"

Unknown said...

did u people get any other informations?

Post a comment