இறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...!

Author: தோழி / Labels: , , ,

ஆழந்த இறை பக்தியின் பயனைச் சொல்லும் விதத்தில் அமைந்த இடைக்காட்டுச் சித்தர் பாடலில், இறைமையிடம் அன்பு இல்லாதவர்கள் முக்தியடைய முடியாது என்கிறார். இதற்கு ஒரு அழகிய எளிமையான உவமையை சொல்கிறார் இடைக்காட்டுச் சித்தர்,

"அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே...! இறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...!"

அதாவது வேகவைத்த நெல் எப்போதும் விதைப்பதற்கு உதவாததைப் போல, இறை பக்தி இல்லாத மனிதர்கள் முக்தியடைவதில்லை என்கிறார்.

எளிமையான உதாரணத்துடன் நம்மை சிந்திக்க வைத்து, மேலும் வலுவாய் இதையே வலியுறுத்துகிறார்.

"அய்யன் திருப்பாதம் பசுவே..!
அன்புற்று நீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே..!
விட்டோடும் கண்டாயே."

"எல்லாம் இருந்தாலும் பசுவே..!
இறை பக்தி இல்லையேல்
இல்லாத் தனமையேன்றே பசுவே..!
எண்ணிப் பணிவாயே."

- இடைக்காட்டுச் சித்தர் -

இறை பக்தி இல்லாத ஒருவனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும், அவையனைத்தும் பயனற்றவைகளாகவே திகழும் என்கிறார். இறைபக்தியே ஒருவனை வாழ்க்கையில் உயர்த்தும் என்கிறார் இடைக்காட்டுச் சித்தர்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Mugilan said...

//"அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே...! இறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...!"//

சத்தியமான வார்த்தைகள் தோழி!

தோழி said...

@Mugilan

மிக்க நன்றி...

BALAS said...

இறை பக்தி இன்றும் இளையவர்களிடம் மேலோங்கி இருப்பது மிகவும் இனிமையானது ,
இவ்வாறு ஒரு இனிமை தளம் அறிந்தது மிகபெரிய இறையருள் .
நலம் வாழ்க ! பாலா எஸ்

Hari Haran PS said...

madam,

do you please explain "irai bhakthi" ? going to temples and making pooja is not a irai bhakthi..! Please explain!

hari

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Post a comment