சுயநலத்துடன் கூடிய உலகப் பற்று, நிலையற்ற செல்வத்தின் மீதான பேராசை, பொய்யான புகழ்போதை ஆகியவற்றில் இருந்து விடுபடாத வரையில் மனம் அடங்காது, அப்படியான மனத்தினால் எதுவும் கைகூடாது என்கின்றனர் சித்தர்கள்
# இலட்சியம் விட்டால் யோகம் போச்சு
# குண்டலினி விட்டால் அஷ்டசித்தி போச்சு
# மனம் விட்டால் ஞானம் போச்சு
# வாசி விட்டால் தேகம் போச்சு
மானுடர் தாம் உயர்வதற்க்கும், தாழ்வதற்க்கும் அவரவர் மனமே காரணம் என்று சொல்கிறார்கள் சித்தர்கள்.இத்தனை வல்லமை வாய்ந்த் மனதினை எவ்வாறு அடக்க (கட்ட) வேண்டும் என்ற பக்குவத்தையும் நமக்குணர்த்திச் சென்றுள்ளனர்.
இதையே திரு மூலரும்,
"பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே."
- திருமந்திரம் -
நான் பெரியவன், நான் உரைப்பதே சரி, என்று எண்ணி நிறைய பேசுவதனால் என்ன பயன்? இந்த மாதிரியான பேச்சுக்கள் எத்தனை காலத்திற்கு? கால ஓட்டத்தில் இவ்வாறான பேச்சுக்கள் என்றும் நிலைப்பதில்லை, அத்துடன் கானல் நீர்போல் தோன்றி மறையும் உலகை நினைத்திருப்பதில் என்ன பயன்?
பரவலாக உலகெங்கும் விரிந்து காணப்படும் பொருட்கள் எதுவும் நிலையானது அல்ல, என்ற உண்மையை ஆராய்ந்து அறிபவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை என்ற நிலை புரியும். இந்நிலை புரியாதவரே வாய்வார்த்தை பெரிதென்று எண்ணியிருப்பார் என்று சொல்கிறார் திருமூலர்.
ஆக, மனச் சுத்தம் ஆகாதவரை யாராலும் தேகத்தை வெல்ல முடியாது , அதுவரை தேகம் அழிந்து மரணம் அடைந்தே தீரும்.
எனக்கு வந்த பல மின்னஞ்சல்களில் காயகற்பம் உண்டபின் அது சித்தியடைந்ததை எவ்வாறு அறிவது என்று வினவியிருந்தனர் அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
5 comments:
Nalla Thagaval. Nanri.
//கானல் நீர்போல் தோன்றி மறையும் உலகை நினைத்திருப்பதில் என்ன பயன்?...
....பரவலாக உலகெங்கும் விரிந்து காணப்படும் பொருட்கள் எதுவும் நிலையானது அல்ல, என்ற உண்மையை ஆராய்ந்து அறிபவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை என்ற நிலை புரியும்//
எல்லைகள் கடந்து ஒருவிதமான மாயையில் சிக்கி தவிக்க பழக்கப் பட்ட மணம்...எதுவும் நிரந்தரமில்லை என்கிற உண்மை புரியும் போது அமைதி பெறும் ம்ம்ம்...
ஒவ்வொறு நிகழ்வும், அனுபவமும் எனக்கு இதை கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது..
நேற்றும் இன்றும் அருமையான பாடல்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் இது சாட்டையை கொண்டு அடித்தாற்போல் உள்ளது , இதற்குமேல் வேறெந்த உபதேசமும் தேவையில்லை , இதை அனைவரும் தங்கள் கடைசி முச்சி உள்ளவரை நினைவில் வைத்திருக்க வேண்டும்
திருமூலரின் திருமந்திரத்திற்க்கு, நெல்லை சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் விரிவுரை புத்தகம் அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டிய பெட்டகம்.
Thiruvaluvar and Avvaithai miga sirantha sithargal..iyamillai
Post a Comment