தன்னை அறிவதே, உண்மையான அறிதல்....

Author: தோழி / Labels:

வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும் , அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே ஆகும்.

சித்தர்களும் இதையே முதன்மை படுத்தி சொல்கிறார்கள், இவர்களே இதை முதன்மை படுத்தி சொல்லும் போது தன்னை அறிதல் என்பதைத் தவிர்த்த அறிதல்கள் எதுவும் பெரியதாகாது, இதையே திரு மூலர்,

"என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்"


என்றும்,

"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுக்கிறான்"


என்றும்,

"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே"


எனச் சொல்கிறார் திருமூலர்.

இதையே சிவவாக்கியார்,

"என்னிலேயிருந்த ஒன்றையறிந்த தில்லையே
என்னிலேயிருந்த ஒன்றை யறிந்து கொண்டபின்
என்னிலேயிருந்த ஒன்றை யாவர் காணவல்லரே
என்னிலேயிருந்த ருந்திருந்து யாதுணர்ந்து கொண்டேனே"


என்கிறார். ஆக , சித்தர்கள் எல்லோரும் மனிதனாய் பிறந்தவன் அறியவேண்டியதில் முதன்மையானது, தன்னை அறிவதே என்கிறார்கள். நாமும் எம்மை அறிய முயல்வோமாக.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

jagadeesh said...

மிகவும் சரி. வெறும் விஞ்ஞானம் மட்டும் போதாது, மெய்ஞானம் தான் முக்கியம்.

ATOMYOGI said...

விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டுமே முக்கியம்.

அதுல்லாம் இருக்கட்டும் தன்னை அறிதல் தன்னை அறிதல் அப்படிங்கிறிங்களே அப்படின்னா என்ன? அத எப்படி அறியறது?

Vijai said...
This comment has been removed by the author.
Vijai said...

Very nice work.... really encouragable .. wishing this continues throughout..

Vijai said...

very nice...

தோழி said...

@மாயாவி

தன்னை அறிதல் என்பது உங்களை நீங்களே சுய பரி சோதனை செய்வது போல, முதலில் படிப்படியாக உங்களை சுற்றியிருக்கும் நிரந்தராமில்லாத போலிகளை அகற்றிக் கொண்டே போங்கள்.... அப்போது கொஞ்சம் கொஞ்சமாக உங்களை சூழ்ந்துள்ள நிலையில்லா தன்மையுள்ளவைகள் நீங்கிடத் துவங்க, உங்களின் உள்ளே உள்ள இறைவனை காணலாம் , இதையே தன்னை அறிதல் எனப்படும். நன்றி.

தோழி said...

@kalavum kattrum ara (

எதை சொல்கிறீர்கள்... எனக்கு புரியவில்லை....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

Murugeswari Rajavel said...

NICE COLLECTON.

Balaji Palamadai said...

ur blog is really nice..can u plz suggest me some books where siddhargal speaks about practical self realization..

தோழி said...

@balaji

திருமூலர் அருளிய திருமந்திரம் தங்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்... நன்றி..

Anonymous said...

மிகவும் அற்புதம் , தங்களுக்கு இந்த செய்தியெல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது . மிகவும் அருமை

iyarkaya said...

கடவுளை காணும் வழி

உற்று உற்று பார்க்க ஒளிவிடும் மந்திரம்

பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்த இடம்

சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே

- திருமந்திரம்


http://www.vallalarfiles.com/file/z99u/none/katavuLaik39880000.mp3
http://www.vallalarfiles.com/file/uba/none/SuddhaSanm8600000.mp3
http://www.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam/AudioByCategory/219

Anonymous said...

இந்தப் பதிவை மெய்ஞ்ஞான உலகின் திறவுகோல் என்றே கூறலாம். இதைப் பதிப்பித்தமைக்கு நன்றி.

தன்னை அறிய விரும்புபவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம் அருணை மகான் ரமண மகரிஷி அருளிய "நான் யார்?".

நன்றி.

Sankarraman said...

To know oneself is to be oneself, for the Knower there is nothing to know outside himself. Were it otherwise, it would be one of the bondage of the relative knowledge.

Post a comment