உனக்கு உபதேசம் இது...

Author: தோழி / Labels: ,


"நாட்டம் என்றே இரு! சற்குரு
பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டம் என்றே இரு! பொல்லா
உடலை: அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றிரு சுற்றத்தை
வாழ்வைக் குடம் கவிழ் நீர்
ஓட்டம் என்றே இரு நெஞ்சே
உன்னக்குபதேசம் இது."

- பட்டினத்தார் -

"உண்டென்றிரு தெய்வம் உண்டென்
றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்
பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காம
லே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு
உப தேசம் இதே"

- பட்டினத்தார் -

மேலே சொல்லப்பட்ட இரண்டு பாடலும் பட்டினத்தார் தன் மனதிற்கு தானே சொல்லிக் கொள்வது போல அமைந்துள்ளது.

உண்மையை உணர்ந்த ஒழுக்கமுள்ள குருவின் உபதேசங்களை நம்பு, அவர் திருவடிகளை தொழு, உனது உடலும், உறவுகளும், செல்வமும் நிலையானது என்று நம்பாதே ,அப்படி நம்பினால் உடலை வளர்க்கவே பாடுபடுவாய்.இந்த உடல் தோன்றி மறையும் பொம்மலாட்டம் என்று எண்ணு. குடத்தைக் கவிழ்த்ததும் ஓடி மறையும் நீர் போல நிலையற்றது செல்வம் என்று உணர்ந்துகொள். இந்த உண்மையை மறவாமல் எண்ணியிருந்தால் பாவம் செய்யாமல் நன்மை செய்து வாழ முடியும். மனமே! நான் உனக்கு செய்யும் உபதேசம் இதுவே, என்று சொல்லும் பட்டினத்தார்....தொடர்ச்சியாக

யாராக இருந்தாலும் முதலில் தன்னை ஒரு ஒழுங்கில் வைத்திருக்க வேண்டும், நேர்மையான வழியில் நடத்தல் வேண்டும், தீய வழியில் நடந்து கொண்டு, பிறருக்கு உபதேசம் செய்பவர் சொல்லும் சொல்லுக்கு மதிப்பிருக்காது, அகந்தையை விடுங்கள், பஞ்சமா பாதகரின் கூட்டுறவு வேண்டாம், பாவ செயல்களில் இருந்து விலகியிருப்போம், நல்லவர்களை குறை கூறாது அவர்தம் நட்பை நாடுவோம், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு நன்னடத்தை முதன்மையானது, எண்ணம், சொல், செயல் இந்த மூன்றும் ஒன்றாய் நன்றாய் இருப்பதே சிறந்தது.

இந்த உண்மைகள் பட்டினத்தார் பாடல்கள் எங்களுக்கு விளக்குகின்றன. இதுவே பண்டைத்தமிழர் பின்பற்றிய ஒழுக்க நெறி.

புதிய மனிதனாய் எழுந்து பாருங்கள்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

பாலா said...

நல்ல விளக்கமும் சிலருடைய கேள்விக்கு பதிலையும் பட்டினத்தார் மூலமா சொல்லி இருக்கீங்க
எளிய தமிழ் நடை கலக்குங்க .....

அ.முத்து பிரகாஷ் said...

" எண்ணம், சொல், செயல் இந்த மூன்றும் ஒன்றாய் நன்றாய் இருப்பதே சிறந்தது...."
மூன்றும் நன்றாய் தானிரிருக்கிறது ...
ஒன்றாகத் தானில்லை ...
வருகிறேன் தோழி ...
புதிய மனிதனாய் எழுந்து பார்க்கிறேன் .....

rajsteadfast said...

Nalla thagaval. Nanri.

Praveenkumar said...

உங்க எளிமையான எழுத்துநடையில் பதிவுகள் நல்லாயிருக்கு தோழி..! பட்டினத்தார் வழி நாமும் பின்பற்றுவோமாக..!

Anonymous said...

தன்னை அறிந்தவன் மட்டுமே மற்றவருக்கு உபதேசம் செய்ய முடியும் . வாழ்க பட்டினத்தார்

Unknown said...

I want one thing... pattinathar kaya siddhi seivathai patri ethum sollala? kaya siddhi pannamal ashtanga yogam seya mudiyatha? apadi seithal enna nadakum? Ghanam enral enna? sama aathiyudan kalanthu vitaal epadi satharana manithargal pol udalai iyaka mudiyum.. udal valarchithai matrangal nadakuma ? nadakatha?

Anonymous said...

இரண்டாவது படலை நான் பட்டினத்தார் என்ற படத்தில் கேட்டுள்ளேன்

Unknown said...

எனக்கு இரண்டே வரம் வேண்டும்...!

தான் என்ற சிறையில் இருந்து விடுபட்ட தத்துவ அறிவன் கடவுள்ளை பற்றி.... 
1 . எல்லரிடதில்லும் அன்பு, நல்ல நட்பு...

2 . இனி அடுத்த பிறவி வேண்டா வரம்...

பட்டினத்தார் கூறியது போல...!

Post a comment