குறி கேட்கலையோ....குறி..!

Author: தோழி / Labels:

பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று. இது குறித்து விரிவாய் பார்ப்பதற்கு முன்னர்......

பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இல்லை, கூடி வாழும் குடும்பங்களும் இதற்கு விதி விலக்கில்லை. சக மனிதனாலும், சமூகத்தாலும் பிரச்சினைகள் உருவாவதும் அதனை சமாளிக்க போராடுவதுமாய் கழிந்து போகிறது மனித வாழ்வு. இந்த போராட்டத்தின் ஊடே விளைவதுதான் மன அழுத்தம் மற்றும் உளைச்சல்கள். இத்தகைய மனக் கொதிப்புகளின் காரணமாய் உடலும், மனமும் நலிவடைகிறது.

சரியான தீர்வுகளை கண்டறிபவனுக்கு இத்தகைய பாதிப்புகள் எதுவும் வருவதில்லை. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அதுவும் பிறந்ததில் இருந்து கட்டுப்பாடுகளின் ஊடே வளர்க்கப் படும் பெண்களுக்குத்தான் பிரச்சினைகளினால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்தகையவர்களுக்கு அந்த கால கட்டத்தில் கிடைத்த ஆறுதல்களில் ஒன்றுதான் இந்த குறி சொல்பவர்கள். உண்மையில் தீர்வுகளை சொல்பவர்களாகவே இவர்கள் பார்க்கப் பட்டனர். குறி சொல்வோரின்தீர்வுகள் பலித்ததோ இல்லையோ, அந்த இக்கட்டான சமயத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தேவையான ஆறுதலை தந்தது என்பதாகவே கருத வேண்டும்.

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.
அதை பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

puduvaisiva said...

தமிழகத்தில் குறளி வசியம் அதுவே கேரளாவில் சாத்தான் வசியம் என்ற முறையில் குறி சொல்வார்கள்.

இதுவே குடுகுடுப்பை நபர்கள் ஜக்கம்மா என்ற தேவதையின் வசியத்துக்காக இரவில் ஈடுகாட்டில் பூஜைகள் செய்வார்கள் பின்பு அவர்கள் நெற்றில் வைக்கும் மையிலேயே மர்மம் இருக்கும்.

இங்கு வடலூரில் சில நபர்கள் இரவில் முகம்பார்க்கும் கண்ணாடியில் தெரியும் நமது உருவத்தை கொண்டே குறி சொல்வதாக கேள்விப்பட்டுள்ளேன்.

VELU.G said...

//அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்....
//

பார்க்கலாங்க

தோழி said...

@♠புதுவை சிவா♠

ஏவல், மோடி வித்தை, குறளி வசியம் , சாத்தான் வசியம், மை ஜாலம், ஜட்சினி மந்திரம் இப்படி பல சொல்லலாம்... நன்றி

தோழி said...

@VELU.G

மிக்க நன்றி..

VG said...

தோழி! தங்களின் ஈடு இணையற்ற சேவைக்கு மனமார்ந்த நன்றி.

Unknown said...

migavum nalla sevai I ant to get machamuni arudam can you provide the same

rajaraajan
thanjavur

Unknown said...

very good work and you are doing a wonderful
service to tamil language and community
I am really proud of you.

May I request to publish one article on pulipani arudam


rajaraajan
thanjavur

Unknown said...

nice collection thozhi

Kamal said...

Thozhi, this is good. However only if these siththar methods are put into practical use, they become real. Otherwise they will treated as some myths.

Kamal

Unknown said...

@தோழி

Post a comment