ஞானியர் உடலை ஏன் புதைக்கின்றனர்? ஜீவசமாதி என்றால் என்ன?

Author: தோழி / Labels:

பெருமையற்றவர் உடல் எரிக்கப்பட்டு பெருமையுள்ளவர் உடல் புதைக்கப் படவேண்டும் என்று திரு மூலர் சொல்கிறார்.

"எண்ணிலா ஞானி உடல் எரிதாவிடில்
அண்ணலதம் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில மழை விழா: வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பார் அரசுமே"


- திருமந்திரம் -


"அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே"


- திருமந்திரம் -

ஞானியர் தங்கள் உடலையே கோவிலாக கொண்டு வாழ்பவர்கள். அந்த உடலுக்கு தீவைப்பது, திருக்கோவிலுக்கே தீவைப்பதற்க்கு சமனாகும். அவ்வாறு செய்தால் மண்ணில் மழையின்றி கொடிய பஞ்சம் ஏற்படும். மன்னர் அரசாட்சியை இழக்க வேண்டி வரும். அத்துடன், ஞானியரின் உடல்கள் அடக்கம் செய்ய ஆட்கள் இல்லாது மண்ணில் கிடந்தது அழிந்தால் அந்த நாட்டின் அழகு எல்லாம் கெட்டு, நாடு வீழ்ச்சியடைந்து, பெருந்துன்பம் ஏற்படும் என்று சொல்லும் திரு மூலர்,

இவர்கள் உடல் மண்ணில் அடக்கம் செய்வதால், நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்றும் நாடுவளம் பெறுவதுடன் நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும் என்கிறார். இவாறு அடக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து வெவ்வேறு இடங்களில் நடமாடி மீண்டும் அடக்கமாகின்றார்கள். இதனால் இவர்களை அடக்கம் செய்தததாக சொல்லாமல் ஜீவ சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

VELU.G said...

உயிரோடு சமாதியாவதை ஜீவ சமாதி என்கிறனரே அது என்ன நிலை

Radhakrishnan said...

வாழ்வாங்கு வாழ்ந்தாரை, அதாவது கல்யாணம் குடும்பம் என இருந்தவர்களை, எரிப்பதும் , அப்படி கல்யாணம், குடும்பம் என இல்லாதாரை புதைப்பதும் ஐதீகம்.

திருமூலருக்கு அவர் வாழ்ந்த விதம் பெருமையுற்றதாக சொல்கிறார். ஆனால் நாம் வாழ்ந்த விதம் தான் பெருமையுடையது. இல்லையெனில் இந்த திருமூலர் கூட தோன்றி இருக்கமாட்டார். இருப்பினும்...

உயிர்கள் புதைக்கப்படுவதன் மூலம் பரிணாமம் அறிந்து கொள்ள இயலும் என்பதால் திருமூலர் இவ்வாறு கூறி இருக்கலாம்.

தோழி said...

ஜீவசமாதி என்பதை திருமூலரின் பார்வையில் மட்டுமே இங்கு பதிந்திருக்கிறேன். இது குறித்த மாற்றுக் கருத்துக்களும் உண்டு. இதைப் பற்றி பொதுவான விரிவான கட்டுரையொன்றினை வரும் நாட்களில் பதிப்பிக்கிறேன்...

நன்றி VELU.G , நன்றி V.Radhakrishnan .

Murugeswari Rajavel said...

jeeva samahi kuritha sirappana thagavalgal.

Unknown said...

intha udal irrapuku pinnal puthaigapaddum poothu athil sila puzzu poochikal undakum athu unndaga karranamka intha upayga paduvathu perriya thannam sithatharku sammam

Adhitya said...

எனக்கு தெரிந்த அகஸ்தியர் பரம்பரை சித்தரை (அவர் விரும்பியபடி) தகனம் செய்து அந்த சாம்பலை வைத்த அதன்
மேல் சமாதி வைத்துள்ளார்கள். இது ஒரு வகை சித்தர் சமாதியாகும்.

ஓம்

samson said...

@VELU.GTHE END OF THE ''SANMARGAM or MARGI'' is saga nilai or no death (jeeva samathi enter in to heaven directly).If any one got SUUDHA DHEGAM,PRANAVA DHEGAM.GANA DHEGAM NO DEATH WILL HAPPEN TO THE BODY.This kind of Dhegam will direcly changed the human body into light and entered in to God duly disappearing their body and the body will never fall on the earth.They can predict their date of demise like AP.Jothi Vallalar ,in christianity Eenock.Elliyas and later Jesus.Jesus told his demise from earth in33 years and others directly taken into heaven like Moses.Sri.Vallalar also predicted his last day in the earth on 30.01.1874 Thai poosam day.........

gnanamayan said...

samaathi endraal sama+aathi endru , aathi endraal kadavoul kadavoulukku samamaana endru porul.

gnanamayan said...

samaathi enrdaal, sama+aathi = sama,endral enaiyaana, aathi, endraal eraivan, eraivanukku samamaanavar endru porul.

Unknown said...

@VELU.Gjeevanodu samathiyathal athanaalthan jeevasamathi engiraarkal.

Unknown said...

naam irandha piragu nam uyir yenga selgiradhu adai patri edhavadhu karuthu irukiradha

Unknown said...

naam irandha piragu nam uyir yenga selgiradhu adhai patri yedhavadhu karuthu irukiradha thozhi.

Post a comment