காந்தரசம் செய்து அதனை தங்கமாக்கும் வகையறிதல்...

Author: தோழி / Labels: ,

”அரியவை அறிவோம்” தொடரில் போகர் 700 என்ற நூலில் காந்தரசம் தயாரிப்பதைப் பற்றியும், அதனைக் கொண்டு தங்கம் செய்யும் முறையினை பின் வரும் பாடல்களில் போகர் கூறுகிறார்.

"ஆடவே காந்த ரசம் சொல்லக் கேளு
அரகரா ஏழு ஊசி பிடிக்கும் காந்தம்
தேடியே பலம் ஒன்று மண்கலசத்திலிட்டு
சிறப்பாக நீலிச்சார் நிறைய வார்த்து
வாடவே இரவிபடாது அறைக்குள் வைத்து
வன்மையுடன் நாள் மூன்று மூடிவை நீ
ஊடவே சாறு எல்லாம் காந்தம் உண்ணும்
உவகையுடன் அயக் குறட்டால் எடுத்திடாயே"


- போகர் வைத்தியம் 700 -

"எடுத்திட்ட அயக்குறட்டால் பிடித்துக்கொண்டே
இதமாகக் கிண்ணத்தில் தட்ட தட்ட
அடுத்திட்ட ரசமெல்லாம் சாம்பல் போலே
அப்பனே காந்த ரசம் இறங்கும் பாரே
கடுத்திட்ட காந்தம் ஒரு பலத்துக்கு அப்பா
கால்வாசி இறங்கி நிக்கும் திரட்டி வாங்கு
வெடித்திட்ட குடக் கரியில் இட்டு நீயும்
வெண்காரம் இட்டு உருக்கு கனகம் ஆமே"


- போகர் வைத்தியம் 700 -

"கனகத்தை கண்டு நீ மகிழ்ந்தி டாதே
கைசெலவு கற்பத்துக்கு இல்லாவிட்டால்
கனகமாஞ் செலவுக்கு கற்பத் துக்குக்
காணவே கொஞ்சமாய் செய்து கொண்டு
கனகமாம் அந்தி சந்தி கந்தன் பூசை
கருதி நீ செய்து கொண்டு அனுபவிப்பாய்
கனகமாம் உலகத்தில் வெளி செய்யாமல்
கண்டவர்முன் ஊமையை போல்இருந்திடாயே"


- போகர் வைத்தியம் 700 -

ஏழு வகையான இரும்புகளையும் ஈர்த்துக் கொள்ளும் அளவு காந்த சக்தியைக் கொண்ட காந்தத்தில் ஒரு பலம் எடுத்து, அதனை ஒரு மண் பாண்டத்தில் இட்டு அதை நீலிச் சாற்றால் நிரப்பி, மூடியால் மூடி சூரிய ஒளி போகாத இருட்டறையில் மூன்று நாள் வைத்திருந்து நான்காம் நாள் எடுத்து பார்த்தால், சாற்றை எல்லாம் காந்தம் உறிஞ்சி இருக்கும். இந்த காந்தத்தை அயக் குறட்டால் (இரும்புக் குறடு) எடுத்து ஒரு கிண்ணத்துக்குள் வைத்து மெதுவாக தட்டினால் சாம்பல் கொட்டுவது போல காந்தரசம் கிண்ணத்துள் விழுமாம். இதை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் இதுவே காந்த ரசம் என்று போகர் குறிப்பிடுகிறார்.

இந்த காந்த ரசத்தினை குடக் கரியில் போட்டு வேண்காரத்தொடு சேர்த்து உருக்கினால் தங்கம் ஆகிவிடுமாம். இத்தனை எளிதில் பொன் கிடைக்கிறது என்று மயங்கி விடாமல் காய கற்பம் செய்துகொள்ள தேவையான பணம் இல்லது போனால் குறைவான அளவில் செய்து கொள் என்கிறார்.

பொன் ஆசை கொள்ளாமல் காலையும் மாலையும் முருகனை கும்பிடச் சொல்லும் போகர்,
இந்த காந்த ரசத்தை செய்யும் முறையும் , அதனை தங்கமாக மற்றுவதையும் யாருக்கும் சொல்லாமல், ஒன்றுமே தெரியாத ஊமை போல இருப்பது நல்லது என்கிறார்.

அடுத்து போகர் சொல்லிய தங்க பற்பம் (பஸ்பம்) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

jagadeesh said...

இறுதியில் போகர் கூறியது, மிகவும் அருமை!

Mugilan said...

வணக்கம் தோழி! இந்த வகையான தயாரிப்புகள் எதையாவது பரிசோதனை முறையில் முயற்சித்து பார்த்தீர்களா? அல்லது முயன்றவர் யாரையாவது சந்தித்து இருகின்றீர்களா?

தோழி said...

@jagadeesh

மிக்க நன்றி

தோழி said...

@Mugilan

பலவற்றை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. எதிர்காலத்தில் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் போது அது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி..

Naveen said...

kjhjh

Naveen said...

Dear Friend,
I need the siddha Vaithiya (medical ) book for my father health regarding. Because his skin is so Whitish, therefore i need to cure him as good. Please reply me as soon as.

Regards,
S.NAVEENKUMAR.

suresh said...

நீலி சாறு மற்றும் குட கரி என்பது ?

Faiz said...

அறுமையான தகவல்

Post a comment