வாலைரசம் தயாரிப்பது எப்படி?

Author: தோழி / Labels: , ,

"சொன்னதொரு வாலைரசம் சொல்லக் கேளு
துடியான செந்தூரம் குளிகை பற்பம்
வன்னமொரு வாதங்கள் வயித்தியங்கள்
மற்றும் முதல் இவைகளுக்கும் மெத்த நன்று
கன்மமாம் சாதிலிங்கம் பலம் தான் ஒன்று
கண்மாய்வான் கிபலத்தின் சாற்றினாலே
கண்மவே சுயம்பு ரசம் ஆகவேண்டும்
கடையில் உள்ள ரசமேனும் சுத்திசெய்யே"

- போகர் வைத்தியம் 700 -


"செய்யவே சட்டிதனில் கொடிவே இத்தூள்
சிறப்பாக பரப்பியதன் மேலே கேளு
பெய்யவே சாதிலிங்கம் பொடித்து மேலே
பரப்பியே சட்டியில் ஊமத்தன் சாற்றை
துய்யவே மூன்றுதரம் பூசிக் கவசம்
துடியாய்செய்து அடுப்பில் ஒருவிறகுதன்னால்
அய்யாவே நாட்சாமம் எரிக்கும் போதில்
அப்பனே பதங்கித்து நிக்கும் பாரே"


- போகர் வைத்தியம் 700 -


"பதங்கித்த ரசம் எல்லாம் எடுத்துவைத்து
பரிவாய் நோயறிந்து அனுபானத்திலூட்டு
பதங்கித்த பதினெட்டு சூலை குன்ம
பறங்கிப்புண் அரையாப்பு கண்ட மாலை
பறங்கித்த வாய்வென்பது இருபத்தாறும்
பவுத்திரமும் கீழ் சூலை பிளவை புற்று
புதங்கித்த சிரங்கு சொறி கைகால் முடக்கு
பல்லூறல் மேகவெடி பறக்கும் காணே"


- போகர் வைத்தியம் 700 -


சித்தர்களால் பாதரசம் எனப்படும் ’மெர்க்குரி’ மருத்துவத்திற்கும், ரசவாதத்திட்கும் அதிகளவில் பயன்படுத்தப் பட்டது.

தங்களுக்கு தேவையான பாதரசத்திற்கு இணையான பாதரச வகை ஒன்றை தயாரித்து பயன் படுத்தியதாக சொல்லும் போகர் அதற்கு வாலை ரசம் என்று பெயர் சொல்லி, அதை தயாரிக்கும் முறையையும் சொல்கிறார்.

ஒரு பலம் ஜாதிலிங்கத்தை எடுத்து எலுமிச்சம் சாற்றால் சுத்தி செய்து பின் அதனை தூளாக்கிக் கொள்ள வேண்டும், பின் கொடி வெளித்தூளை ஒரு சட்டியில் பரப்பி முன்னர் செய்த ஜாதிலிங்க தூளையும் அதற்கு மேல் பரப்பி கொள்ள வேண்டும், பின்னர் சட்டியின் மூடிக்கு ஊமத்தை சாறு கொண்டு ஒருமுறை பூசி, அது காய்ந்தபின்னர் மறு முறை பூசி அதுவும் காய்ந்த பின் மூன்றாம் முறையாக பூசி அது காய்ந்த பின்னர், அந்த மூடியால் சட்டியை மூடி சட்டியை அடுப்பில் வைத்து ஒரே வகையான விறகைக் கொண்டு நான்கு சாமம் தொடர்ந்து எரிக்கவேண்டும், பின்னர் சூடு ஆறவிட்டு மூடியை திறந்தால் மூடியில் ரசம் பதங்கமாக படிந்திருக்கும் அதை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே வாலை ரசம் என்கிறார் போகர்.

இதை நோயின் தன்மையை நன்கு அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் உண்ணக் கொடுத்தால், பதினெட்டு வகையான சூலை நோய்கள், குன்மம், பறங்கிப் புண், அரையாப்பு, கண்ட மாலை, இருபத்தியாறு விதமான வாய்வு நோய்கள், கீழ் சூலை, பிளவை, புற்று நோய், சொறி, சிரங்கு, கைகால் முடக்கு, மேகவெடி ஆகிய நோய்கள் குணமாகும் என்கிறார் போகர் .

அடுத்த பதிவில் வீர ரசம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்...

எனது மின்னூலுக்கு கிடைத்த வரவேற்பு நான் சற்றும் எதிர்பாராதது....நன்றி நண்பர்களே, இந்த மின்னூலுக்கு கட்டணம் ஏதுமில்லை....அன்பளிப்பாகவே பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் ஆர்வமுள்ள நண்பர்களிடம் இந்த நூலை பகிர்ந்து கொண்டால் அதுவே எனது முயற்சிக்கான பலனாய் அமையும்.

விருப்பமுள்ளோர் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

rajsteadfast said...

வணக்கம் தோழியே,
தங்களின் வலைப்பதிவுகளை சில மாதங்களாக படித்துவருகிறேன்.
மிகவும் அரிய தகவல்களை, மிகவும் எளிய தமிழில், அனைவரும்
எளிதில் புரியும்படி தருகிறீர்கள். தங்களின் பணி உண்மையில்
மேன்மையானது. போற்றுதலுக்குரியது. எங்களுக்கு ஏற்படும்
ஐயங்களுக்கு பின்னுட்டங்களின் மூலம் தாங்கள் உடனுக்குடன்
பதில் தருவது அருமை.
தங்களின் போகர் 300 மின்புத்தகம் கிடைக்கப்பெற்றேன். மிக்க நன்றி.
செய்யுள் வடிவத்தில் அமைந்துள்ளது, என்னைப் போன்றோருக்கு
புரிவதில்லை. மின்புத்தகங்களையும் தங்களுடைய விளக்கங்களுடன்
தருதல், என்னைப் போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக
இருக்கும். இப்போதுதான் தங்களின் வலைபதிவின் அருமையும்,
தங்களின் மேன்மையான பணியும் புரிகிறது.
தங்களின் தமிழ் அறிவையும், ஈடுபாட்டையும் கண்டு வியக்கிறேன்.
தங்களின் பணி மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

நட்புடன்
ராஜேஸ்வரன்

தோழி said...

@rajsteadfast

தங்களின் மேலான ஆலோசனைகளை கருத்தில் கொள்கிறேன்... மிக்க நன்றி...

Rudras Breeders said...

Please do post such an ebook with meaning... Am reading your blog daily for hours.... it is such a rare blog on sidhars.... very few people are doing such a work... thank you for your kind heart and hard work...

sotheswaran said...

அன்பான தோழிக்கு வணக்கம்,

எதிர்பாராதவிதமாக தங்களின் வலைப்பதிவை பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது போற்றுதலுக் குரிய சேவை இப்பணிதொடர இறைவன் அருள்புரிவாராக,தங்களிடம் உள்ள மின்னூல்களை
முடிந்தால் எனக்கும் அனுப்பிவைகவும்.தங்களின் பதிவுகளை காண்பதற்கு காத்திருக்கின்றேன்,நன்றி
தங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்..

shunmuganathan said...

போகர் 700 மின்னூல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்

aj said...

அன்பான தோழி
உங்கள் பதிப்புகள் மிகவும் அருமையானவைகள். போகர் 700 இமெயில் மூலமாக அனுப்ப முடியுமா?

ajfrancis@yahoo.com

நன்றியுடன்

aj francis

ARULTRAVELS said...

VERY GREAT

ARULTRAVELS said...

VEERY THANGS

Unknown said...

send me boghar 700 , thozhi

Ramkumar said...

"ஒரு பலம் ஜாதிலிங்கத்தை எடுத்து எலுமிச்சம் சாற்றால் சுத்தி செய்து பின் அதனை தூளாக்கிக் கொள்ள வேண்டும்"
எவ்வாறு ஜாதி லிங்கத்தை எலுமிச்சம் சாற்றால் சுத்தி செய்வது . அதன் அளவு எவ்வளவு. கொடி வெளி தூள் என்றல் என்ன.அதன் அளவு எவ்வளவு.
எனது மின்னஞ்சல் srkprinter@gmail.com
நன்றி

Post a comment