
"சொல்லவே சுந்தரானந்த ரப்பா
தொல்லுலகில் கேசரியாம் வித்தை தன்னை
புல்லவே அதீதமென்ற மாண்பருக்கு
புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்"
- போகர் -
இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.
இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு.
இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.
இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது.
இவர் சுந்தரானந்தர் சோதிட காவியம் என்னும் பெரும் நூலையும்,
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் தாண்டகம்
சுந்தரானந்தர் முப்பு
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்
சுந்தரானந்தர் அதிசய காராணம்
சுந்தரானந்தர் பூஜா விதி
சுந்தரானந்தர் தீட்சாவிதி
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் விஷ நிவாரணி
ஆகிய நூல்களையும் எழுதியுள்ளதாக தெரிகிறது.
இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
19 comments:
Á¡¢Â¡¨¾Ì ¯¡¢Â §¾¡Æ¢ «Å÷¸§Ç ! ¾÷§À¡Ð ¾¡ý ¾í¸û Å¨Ä À¾¢ô¨À ¸¡Ûõ Å¡öôÒ ¸¢¨¼¾Ð.º¢ò¾÷¸û ¾¸Åø¸¨Ç «¾¢¸ º¢Ã¨¾Ô¼ý ÅÆí¸¢ÔÇ£÷.Å¡úò Ðì¸û.þý¨È ¿Å£É Ô¸¾¢ø þ¨Å ¦ÂøÄõ ÅÃÄ¡üÚ «¾¢ºÂí¸Ç¡¸§Å ¯ûÇÐ.¾÷§À¡¨¾Â ¸Ä¢Ô¸¾¢ø þ¾Û¨¼Â ¿¨¼Ó¨È ÀÄý / º¡ò¾¢ÂÜÚ¸û ±ýÉ ?.. ¾÷§À¡¨¾Â ¯Ä¸¢ø ´Õ º¡¾¡Ã½ (¿øÄ ̽Ө¼Â) ÁÉ¢¾ÛÌ ±ùŨ¸Â¢ø ¯¾×õ / º¡ò¾¢Âõ ?... ¾í¸Ù¨¼Â Å¡ú¨¸Â¢ø ²§¾Ûõ «ÛÀÅõ ¯ñ¼¡ ?.... ¾÷§À¡¨¾Â ¸Ä¢Ô¸ò¨¾ ¾£Â ±ñ½í¸û / Ýúº¢¸§Ç ¬ðº¢ ¦ºö¸¢ÈÐ( ¯¾¡ : ¾Á¢Æ¸ & ¯Ä¸ «Ãº¢Âø )... þíÌ ¿£¾¢¸û / ¸ðÎÀ¡Î¸û / ¦À¡Ð¿Äõ ±ýÀ¨Å ¦ÀÂÃÅ¢ø ¾¡ý ¯ûÇÐ.¸¼×Ùõ ¦ºÂÄüÚ ¯ûÇ¡÷.þ󿢨Ä¢ø º¢ò¾÷¸û §¸¡ðÀ¡ð¨¼ º¡¾¡Ã½ ÁÉ¢¾Û¨¼Â ÐýÀ¨¾ §À¡ì¸ - ¾£ÂÅ÷¸¨Ç ¸ðÎÀξ .. ÀÂýÀξ ÓÊÔÁ¡ ?.....
@drgeethan
உங்கள் எழுத்துரு என்னால் படிக்க இயலவில்லை..
மரியாதைக்கு உரிய தோழி அவர்களே !
தற்போது தான் தங்கள் வலை பதிப்பை காணும் வாய்ப்பு கிடைத்தது ...
சித்தர்கள் தகவல்களை மிக அதிக சிரத்தையுடன் வழங்கி உள்ளீர். வாழ்த்துக்கள் !!!
இன்றைய நவீன உகத்தில் இவை எல்லாம் வரலாற்று அதிசயங்களாகவே உள்ளது...
தற்போதைய கலியுகத்தில் இதனுடைய நடைமுறை பலன் / சாத்தியகூறுகள் என்ன ? ...
இன்றைய உலகில் ஒரு சாதாரண ( நல்ல குணமுடைய ) மனிதனுக்கு எவ்வகையில் சாத்தியம் / உதவும் ?...
தங்களுடைய வாழ்கையில் ஏதேனும் அனுபவம் உண்டா ? ...
தற்போதைய கலியுகத்தில் தீயவைகள் / சூள்சிகளே ஆட்சி செய்கிறது (உதா : தமிழக & உலக அரசியல் ) .இங்கு நீதிகள் / கட்டுபாடுகள் / பொதுநலம் என்பவை பெயரளவில் தான் உள்ளது.
கடவுளும் செயலற்று உள்ளார் ....
இந்நிலையில் சித்தர்கள் கோட்பாடுகள் சாதாரண மனிதனின் துன்பத்தை போக்க - தீயவர்களை கட்டுபடுத்த எவ்வகைளாவது பயன்படுமா ?....
உங்கள்
வசந்தகீதன் ..
மரியாதைக்கு உரிய தோழி அவர்களே !
தற்போது தான் தங்கள் வலை பதிப்பை காணும் வாய்ப்பு கிடைத்தது ...
சித்தர்கள் தகவல்களை மிக அதிக சிரத்தையுடன் வழங்கி உள்ளீர். வாழ்த்துக்கள் !!!
இன்றைய நவீன உகத்தில் இவை எல்லாம் வரலாற்று அதிசயங்களாகவே உள்ளது...
தற்போதைய கலியுகத்தில் இதனுடைய நடைமுறை பலன் / சாத்தியகூறுகள் என்ன ? ...
இன்றைய உலகில் ஒரு சாதாரண ( நல்ல குணமுடைய ) மனிதனுக்கு எவ்வகையில் சாத்தியம் / உதவும் ?...
தங்களுடைய வாழ்கையில் ஏதேனும் அனுபவம் உண்டா ? ...
தற்போதைய கலியுகத்தில் தீயவைகள் / சூள்சிகளே ஆட்சி செய்கிறது (உதா : தமிழக & உலக அரசியல் ) .இங்கு நீதிகள் / கட்டுபாடுகள் / பொதுநலம் என்பவை பெயரளவில் தான் உள்ளது.
கடவுளும் செயலற்று உள்ளார் ....
இந்நிலையில் சித்தர்கள் கோட்பாடுகள் சாதாரண மனிதனின் துன்பத்தை போக்க - தீயவர்களை கட்டுபடுத்த எவ்வகைளாவது பயன்படுமா ?....
உங்கள்
வசந்தகீதன் ..
@drgeethan
ஐயா,
அழிந்து கொண்டிருக்கின்ற சித்தர் இலக்கியத் தகவல்களை மின் ஊடகத்தில் பதியும் முயற்சியாகவே தற்போது இதை ஆரம்பித்து செய்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் காரண காரியங்களைப் பற்றி கருத்துக் கூறிடும் அளவிற்கு நான் பெரியவள் இல்லை.
எனினும் முயற்சிகள் ஏதும் செய்யாமல் குறை கூறிக் கொண்டிருப்பதை விட இம்மாதிரியான சிறிய முயற்சிகள் ஒருவரையேனும் நல்வழிப் படுத்துமெனில் அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாக கருதுவேன்.
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
தோழிக்கு நன்றி
சித்தர்கள் பற்றிய குறிப்புகளுக்கு.
வல்ல(ப) சித்தர் சன்னதி,மதுரை மீனாட்சியம்மன்
கோவில் உள்பிரகாரத்தில் உள்ளது.
வல்லசித்தருக்கு பூ க்கூடு சாற்றுவது வழக்கம்.
அம்மன் சன்னதி முன்பு உள்ள பூக்கடையில்
சித்த்ருக்கு பூக்கூடு என்று சொன்னால் தயார் செய்து
கொடுப்பார்கள்.
தோழிக்கு நன்றி
சித்த்ர்கள் பற்றிய குறிப்புகளுக்கு.
வல்ல(ப) சித்தர் சன்னதி,மதுரை மீனாட்சியம்மன்
கோவில் உள்பிரகாரத்தில் உள்ளது.
வல்லசித்தருக்கு பூ க்கூடு சாற்றுவது வழக்கம்.
அம்மன் சன்னதி முன்பு உள்ள பூக்கடையில்
சித்த்ருக்கு பூக்கூடு என்று சொன்னால் தயார் செய்து
கொடுப்பார்கள்.
@Annamalai
// வல்லசித்தருக்கு பூ க்கூடு சாற்றுவது வழக்கம்.
அம்மன் சன்னதி முன்பு உள்ள பூக்கடையில் சித்த்ருக்கு பூக்கூடு என்று சொன்னால் தயார் செய்து
கொடுப்பார்கள்.///
இது என்னக்கு புதிய தகவல் மிக்க நன்றி..
தங்கள் முயற்ச்சிக்கு என் வாழ்த்துக்கள். சித்தர்கள் பற்றிய விவரங்களை இன்னும் விரிவாகத் தரலாம் என்பது என் கருத்து. முயற்சி செய்யவும். நல்லதே விளையும்.
சித்தருக்கு மதுரையில் பூக்கூடு அல்ல பூக்கூடாரம் அமைப்பார்கள். வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் செய்வதுண்டு.
@சிறியவன்
சித்தர்களைப் பற்றிய சிறிய அறிமுகமே தற்போதைய பதிவுகள், வரும் நாட்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாய் எழுதிட திட்டமிட்டிருக்கிறேன். தங்களின் ஆலோசனைக்கு நன்றி.
சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்
http://cyber-mvk.blogspot.com/2010/05/blog-post.html
சித்தர்கள் புகழ் பரப்பும் சகோதரிக்குப் பராட்டுக்கள். வளர்க நின் பணி. தங்கள் ஆக்கத்தை என் 'blog'ல் பிரதி பண்ண அனுமதிதர தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி!
@சூர்யா
பதிவினை தனி நூலாக தொகுக்கும் எண்ணமிருப்பதால் தங்களின் கோரிக்கையினை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கிறேன். தங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
@drgeethanதீயவர்கள் எக்காலத்தில் தான் இல்லை மகாபாரதத்திலும் உள்ளனர், ராமாயனத்திலும் உள்ளனர்..., முக்காலம் உணர்ந்தவர் சித்தர்கள் இக்காலத்தை உணர்திர்க்க மாட்டாரோ...!
உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி
Superb...
May the almighty bless you with all the shakthi to continue this holy work!
@தோழிungaludaya muyarchi parata thakathu thozhi avargale... en manamarntha paratukal...
Post a Comment