புலஸ்தியர்

Author: தோழி / Labels: ,
"உருவான புலஸ்தியரின் மார்க்கம் கேளு
ஓகோகோ நாதர்கள் அறிந்ததில்லை
கருவான தேவரிஷி தன் வரத்தால்
கமலமுனி தன் வயிற்றில் பிறந்த பேரன்
திருவான அகத்தியருக் உகந்த சீடன்
தீர்க்கமுள்ள சிவராஜ புனித யோகன்
பருவான திருமந்திர உபதேசந்தான்
பாருலகில் புலஸ்தியர் என்றறைய லாமே".

- போகர் 7000 -

கமலமுனியின் பேரன்தான் புலஸ்தியர் என்றும், அகத்தியருக்கு பிரியமான சீடன் என்றும், சிவராஜ யோகியான இவர் திருமந்திர உபதேசம் பெற்றவர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் சொல்லியிருக்கிறார்.

திரணபிந்துவின் மகள் ஆவிருப்பு என்பவளை இவர் மணந்ததாகவும், இவருக்கு விசித்திர வாசு என்று ஒருமகன் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவர்,

புலஸ்தியர் வைத்தியவாதம்
புலஸ்தியர் வாத சூத்திரம்
புலஸ்தியர் வழலைச் சுருக்கம்
புலஸ்தியர் ஞான வாத சூத்திரம்
புலஸ்தியர் வைத்தியம்
புலஸ்தியர் கற்ப சூத்திரம்

ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது.

பொதிகை மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் இடத்தில் சமாதியடைந்த இவர், தேரையாருக்கு உபதேசம் செய்ய வெளியே வந்து, அவருக்கு போதித்து விட்டு இரண்டாவது முறையாக ஆவுடையார் கோவிலில் சமாதியாடைந்தார் என்று சொல்லப்படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

2 comments:

தமிழ் அமுதன் said...

''ஆவுடையார் கோவில்''

இந்த இடம் பற்றி விரைவில் நான் ஒரு பதிவு எழுதுகிறேன் ..!

அண்ணாமலை..!! said...

ஓகோ ! அகத்தியர் கூறும்
புலத்தியர் இவர்தானோ..!!

அன்னையர்தின நல்வாழ்த்துகள் தோழி!

Post a comment