
யோக மார்க்கமும், ஞானத் தேடலும் உள்ளவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது, திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருமூலர் பற்றி பல கதைகள் வழக்கத்திலுள்ளன. அதில் எதை நம்புவது என்பதில் ஐயம் எழுவது இயற்கையே. ஆகவே அது பற்றிய தேடல்களை விட்டு விடலாம். திருமூலர் என்ற ஒரு சித்தர் வாழ்ந்தது உண்மை, அது போதும்..
இவர் நந்தீசரின் சீடராவார்.
இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை "மந்திர மாலை" என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர்.
திருமந்திரம் என்று அழைக்கப்படும் அந்த நூலில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார்.
தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.
"யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே"
- திருமந்திரம் -
இவர் திரு மந்திரம் மட்டு மல்லாது,
திருமூலர் காவியம் 8000
திருமூலர் சிற்ப நூல்100
திருமூலர் சோதிடம் 300
திருமூலர் மாந்திரீகம் 600
திருமூலர் சல்லியம் 1000
திருமூலர் வைத்திய சாரம் 600
திருமூலர் வைத்திய காவியம் 1000
திருமூலர் வைத்தியக் கருக்கிடை 600
திருமூலர் வைத்தியச் சுருக்கம் 200
திருமூலர் சூக்கும ஞானம் 100
திருமூலர் பெருங்காவியம் 1500
திருமூலர் தீட்சை விதி 100
திருமூலர் தீட்சை விதி 8
திருமூலர் தீட்சை விதி18
திருமூலர் யோகா ஞானம்16
திருமூலர் கோர்வை விதி 16
திருமூலர் விதி நூல் 24
திருமூலர் ஆறாதாரம் 64
திருமூலர் பச்சை நூல் 24
திருமூலர் ஞானம் 84
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் நடுவணை ஞானம் 30
திருமூலர் ஞானக் குறி 30
திருமூலர் சோடச ஞானம் 16
திருமூலர் ஞானம் 11
திருமூலர் குளிகை 11
திருமூலர் பூஜாவிதி 41
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 200... என்ற நூல்களும் இயற்றியதாக சொல்லப் படுகிறாது.
இவர் மேலை சிதம்பரம் என்னும் இடத்தில் சமாதி அடைந்ததாக சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
6 comments:
திருமந்திரம் தவிர்த்து திருமூலர் எழுதிய நூல்களின் பட்டியல் அருமை...
very useful information. thank u
அருமையான தகவல்... இந்த நூல்கள் கிடைக்குமிடத்தைச் சொன்னால் என்னுடைய நூலகத்திற்கு அனைத்தையும் வாங்க விரும்புகின்றேன்...
arumaiyana vilakkam
நல்ல தகவல்
http://www.tamilkadal.com/?p=1250
சமரச ஞானம் என்ற புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் ?
Post a Comment