"தானே தான் குறி சொல்லும் விவரங் கேளு
தயவாக பச்சை என்ற புனுகு கோஷ்டம்
மானேதான் பச்சை என்ற பூரத்தொடு
மைந்தனே சந்தனமும் சமனாய் செய்து
பானே தான் சலம் போட்டு மைபோல ஆட்டி
பண்பாக தரை தனிலே பூசி பின்னே
வீணேதான் போகமல்தி ரிகோணம் மிட்டு
விதமான ஸ்ரீங் காரம் உள்ளே நாட்டே"
"நாட்டியே மந்திரத்தை சொல்லக் கேளு
நலமாய்த்தான் ஜெபிக்க மூன்றுகாலம்
ஓட்டியே ஓம் நமோ பகவதே ஓம்
உக்கிரமா காளி சாமுண்டி யாயி
நீட்டியே வைரவி சாம் பவியோங்காரி
நிமிலிமகாசக்தி நமஹா நமஹா வென்னே
ஆட்டியே லட்சமுடன் னாயிரத்தேட்டும்
டன்பாக தான் செபிக்க சித்தியாமே"
"சித்தியாய் வருமளவும் மூன்று காலம்
சிறப்பாக தலை மொழுகி தியானமோது
பத்தியாய் ஒருபொழுது அமுது கொள்ளு
பாங்காக முன்னெடுக்கும் கவளம் தன்னை
நத்தியாய் முன்னிட்ப பின்மேல் வைத்து
நலமாக வேஷ்டியிலே படுக்க வேணும்
வேத்தயாய் வஸ்துடனே சுற்றிவைத்து
நலமாக முதல் பூசி செய்குவாயே"
"செய்யவே மண்டலத்தில் சித்தியாச்சு
செய்தொழில்கள் இன்னதென சொல்லலாச்சு
பெய்யவே முன்நடந்த சேதியெல்லாம்
பண்பாக நினைத்ததெல்லாம் சொல்லும் பாரு
அய்யனே புகைஎதுவும் குடிக்கலாகா
தட்டைக் காயும் வெற்றிலையும் மிகுந்து போடு
கையவே கன்னத்தில் கையை வைத்து
கடந்ததொரு சேதியெலாம் சொல்லுவாயே"
- புலிப்பாணிச் சித்தர் -
குறிசொல்வதன் விபரம் சொல்கிறேன் கேள்! , பச்சை புனுகு, கோஷ்டம், பச்சக் கற்பூரம், சந்தனம் இவற்றை சம அளவில் எடுத்து நீர் விட்டு மைபோல அரைத்து அதனைக் கொண்டு நிலத்தை மெழுகி அதன் மீது ஒரு முக்கோணம் கீறி முக்கோணத்துள் 'ஸ்ரீம்' என்ற ( படம் கீழே )எழுத்தை எழுதிக் கொண்டு, அதன் முன்னாள் வஸ்த்து என்று சொல்லபடுகின்ற பழம், தாம்பூலம், பால் போன்றவற்றை வைத்து கீழே சொல்ல படும் மந்திரத்தை செபிக்க ஆரம்பிக்க வேண்டும்.
"ஓம் நமோ பகவதி ஓம் உக்கிரமாகாளி சாமுண்டி ஆயி பைரவி சாம்பவி ஓங்காரி நிமலி மகா சக்தி நமஹா நமஹா"
இந்த மந்திரத்தை தினமும் மூன்று வேளை தலை முழுகி சுத்தமாய், நாற்பத்தி எட்டு நாளைக்கு மொத்தமாக ஒருலட்சத்தி ஆயிரத்தி எட்டு தடவை செபிக்க வேண்டும். இப்படி செபிக்கும் போது ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்னர் முதல் கவளத்தை அந்த முக்கோணத்துள் வைத்து வணங்கிவிட்டு உண்ணவேண்டும். இப்படி செபிக்கும் நாளில் இரவில் உறங்கும் போது ஒரு துணியை மட்டும் விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும், அத்துடன் மது , புகைத்தல் முற்றாக விலக்கி விட்டு பாக்கு வெற்றிலை வேண்டி அளவிற்கு போட்டுக்கொள்ளலாம்.
இப்படி சுத்தமுடன் செய்து வந்தால் இந்த மந்திரம் சித்தியாகும்,அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். மேலும் தேடிவரோருக்கு குறி சொல்லும் போது இடது கையை கன்னத்தில் வைத்தபடி சொல்ல வேண்டும் என்கிறார் புலிப்பாணிச் சித்தர்.அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...
Post a Comment



13 comments:
அருமை! //பச்சை புனுகு, கோஷ்டம்// என்றால் யாவை?
இந்த மந்திரத்தை தினமும் மூன்று வேளை தலை முழுகி சுத்தமாய், நாற்பத்தி எட்டு நாளைக்கு மொத்தமாக ஒருலட்சத்தி ஆயிரத்தி எட்டு தடவை செபிக்க வேண்டும்::)))
it means 1 day - apx 2104 times
so totally 101008 in 48 days
@jagadeesh
கோஷ்டம் , புனுகு இவை வாசனைத்திரவியங்கள் வகையில் வருபவை நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் நன்றி.
@Vijaya u r right....go ahead
THANK U FOR UR INFORMATION FROM SIDDHARKAL RAAJYAM.
பாட்டு சூப்பர்....
very useful and great job you are doing thozhi
very useful and divine full work you are doing thank you
FOR TAMILIANS, GOOD EFFORTS. THANKS
palaya ragachiyagal anivarin parvaigu thriyavaithamaiku nanri iyya
nellaimurthy
kpfr;rpwe;j Kaw;rp ed;wp. ghuhl;Lf;fs;.
kpfr;rpwe;j Kaw;rp ed;wp. ghuhl;Lf;fs;.
it is a very useful all astrologers.request furdher clarifications. thanks.
Post a Comment