சித்தர்கள் மறை பொருளில் பாடியது ஏன்?

Author: தோழி /

சித்தர்களை வகைப் படுத்த முடியுமே தவிர வரையறுக்க இயலாது.அவர்கள் தனித்துவமானவர்கள். எல்லோரும் ஆதியும் அந்தமும் ஆன சிவனில் ஒடுங்குவதையே இலக்காக கொண்டிருந்தாலும், அதை அடைய தங்களுக்கே உரித்தான வழிகளை கடைபிடித்தனர். ஆனால் அடிப்படை என்னவோ ஒன்றுதான்.

என்னுடைய வாசிப்பனுபவத்தில் சித்தர்களை இரண்டு வகையாக புரிந்து கொண்டிருக்கிறேன். முதலாமானவர்கள் சகல வாழ்வியல் இன்ப துன்பங்கள் அனைத்தும் போலியானவை என கருதி அவற்றைத் துறந்து சிவனில் ஐக்கியத்தை பெற்று பரமானந்த நிலையில் வாழ்ந்தவர்கள். இவர்கள் பிறரை பொருட்டாய் கருதியதே இல்லை.

இந்த வகைக்கு பட்டினத்தார், பத்திரகிரியார், அருணகிரி நாதர், தாயுமானவர் போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.

இரண்டாம் வகையினரோ முற்றிலும் மாறுபாடானவர்கள், பலகாலம் அழியாத உடல் வேண்டி, இரசவாதம் போலான நுட்பங்களை ஆய்ந்தறிந்து, காயசித்தி பெற்று வாழ்ந்தவர்கள்.

இந்த இரு பிரிவினருமே சித்துக்கள் பல செய்திருக்கின்றனர். இம்மாதிரியான சித்துக்களே மக்களை சித்தர்கள் பால் ஈர்த்தது எனலாம். சித்தர்கள் எவரும் மக்களை நாடிச் சென்று தாங்கள் கண்டறிந்ததை சொல்லியதாக தெரியவில்லை. பெரும்பாலும் தங்களை அண்டியிருந்த சீடர்களின் நலனுக்காகவே தங்களின் அறிதலை வெளிப் படுத்தியிருக்கின்றனர்.

மனிதர்கள் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்ந்து தங்களையொத்த மேலான நிலையினை அடைந்திட வேண்டுமென நினைத்தனர். அதன் பொருட்டே தங்களின் அரிய பெரிய கண்டு பிடிப்புகள் ஆசாபாசம் நிறைந்த மனிதர்கள் கையில் சேர்ந்திடக் கூடாது என்பதில் பிடிவாதமாயிருந்தனர் என நினைக்கிறேன்.

இதன் பொருட்டே தங்களின் உணர்தல்களையும், புரிதல்களையும் தங்களையொத்த மாந்தர் புரிந்து கொள்ளும் வண்ணம் மறை பொருளாய் பாடிவைத்தனர் என்கிற கருத்தும் உள்ளது. இந்த பாடல்கள் எளிய வார்த்தை கட்டுகளால் ஆகியிருந்தாலும் அதன் மறைபொருள் ஆழமானது. கீதையில் கூட பகவான் கிருஷ்ணர் கூறும் ஒரு பதத்தினை இதற்கு ஒப்பாய் சொல்லலாம்.

"நீ எந்த வடிவத்தில் என்னை நினைத்து வழிபடுகிறாயோ அந்த வடிவத்தில் நான் உனக்கு தோற்றம் தருவேன்"

இது மாதிரியானதே சித்தர் மொழி.இதில் அக்கறை உள்ளவர்கள் மட்டுமே ஆழ்ந்து படித்து பொருள் தெரிந்துகொண்டு பயன்படுத்த முடியும்.

சித்துக்களுடன் சேர்த்து மறை பொருளில் பாடினால் என்ன இருக்கிறது என்று அறியும் ஆவலிலாவது மக்கள் ஆழ்ந்து படிப்பார்கள் என்ற எண்ணம் சித்தர்களிடம் நிலைத்திருந்தமையும் இந்த மறை பொருளில் பாட காரணமாக அமைந்திருக்கும்.

ஆகவே ஆழ்ந்து படிப்பதன் மூலமே இவற்றை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சுரம் குணமாக...

Author: தோழி / Labels: , ,

"கண்டு பார் பித்த சுரம் பித்தவெட்டை
கலங்காதே அத்திசுரம் காணாமல் ஓடும்
கொண்டு பார் பேய்புடலும் கிராம்பு சுக்கு
கொரையான் கிழங்கு நில வேம்பு மல்லி
தண்டு மிண்டு செய்யாதே சமனாய் கொண்டு
சாதகமா நீர் வார்த்தே எட்டு ஒன்று ஆக்கி
உண்டிடவே சொன்னதொரு சுரங்கள் எல்லாம்
ஓடுமடா வான் எழிலி போலத்தானே..!"


- போகர் வைத்தியம் 700 -

பேய்புடல், கிராம்பு, சுக்கு, கோரைக் கிழங்கு, நில வேம்பு, கொத்து மல்லி ஆகியவற்றை சமனாக சேர்த்து பாத்திரத்தில் இட்டு அளவான நீரை விட்டு எட்டில் ஒன்றாக காய்ச்சி அதை அருந்தினால் பித்த சுரம், பித்த வெட்டை, அதிசுரம் ஆகிய நோய்கள் தீரும்,அத்துடன் சுரங்கள் எல்லாம் தீரும். இதற்க்கு பத்தியம் ஏதும் சொல்லப்படவில்லை அத்துடன் ஒருதடவை அருந்தினால் போதும் என்றே சொல்லப் பட்டுள்ளது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அழகிய கூந்தல் பெற...

Author: தோழி / Labels: , , ,

"அழகு நுதலின் அதிசயம் கேளாய்
களவு காயம் கலந்த அன்நீரிலே
மிளகு மஞ்சள் கடுதேல்லி வேம்பிடில்
இளகும் காயம் இறுகும் கபாலமே"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

அழகிய கூந்தலுக்கான அதிசயம் கேள், கடுக்காய் பருப்பு ,மிளகு மஞ்சள், நெல்லி முள்ளி, வேப்பங்கொட்டை ஆகிவற்றை ஒவ்வொரு களஞ்சி அளவு சேகரித்து அதில் அளவாக பசும்பால் விட்டு நன்கரைத்து, அதனை தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும் இதனால் உடல் பொலிவடையும் என்று சொல்லும் திரு மூலர் தொடர்ந்து,

"கபாலம் இறுக்கும் கண்ணும் துலக்கமாம்
அபால மந்தனி அதிவண்டு போலாகும்
விபாலத்திசை வாய்வு வேலை செய்யாது
இபாலத்தினுள்ளே எளிதாக மாத்தியே."

- திருமூலர் வைத்திய சாரம் 600 -

இம்முறையில் தொடர்ந்து தலை முழுகிவந்தால் கபாலம் உறுதி பெறுவதுடன், கரு வண்டு போல கரிய நிற கூந்தல் கிடைக்கும், அத்துடன் வாய்வு நோய்களும், தலைவலி போன்றவையும் அண்டாது என்கிறார் திருமூலர்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

எங்கும் நிறைந்தவன்.....எனக்குள்ளும்!

Author: தோழி / Labels: ,
பரம்பொருள் என்கிற ஒன்றுதான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றது, அது அனைத்து உயிர்களுக்கும் அறிவாய், ஆதாரமாய் நிற்கிறது, அசையும், அசையாத அனைத்து பொருட்களின் மூலமாய் இருக்கிறது என அனைத்து சடப் பொருட்களிலும் இறைவனை காண்பதாய் சொல்கிறார்கள் சித்தர்கள்.

பஞ்ச பூதம் என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய அய்ந்துமாகும். இந்த பஞ்ச பூதங்ககளை படைத்து அதில் நிறைந்திருப்பவன் இறைவன். பஞ்ச பூதங்களைக் கொண்டு உருவானதுதான் எங்கள் உடல்.

இதனையே, இந்த உலகில் பரந்து விளங்கும் பரம் பொருள் எங்கள் உடலுக்குள்ளும் நிறைந்துள்ளது. என்கிறார் குதம்பைச் சித்தர் "நிலத்திலும், அகண்ட நெற்பரப்பிலும், ஓங்கியெழும் தீயிலும், வீசுகின்ற காற்றிலும், விரிந்து பரந்த வானிலும் இறைவன் இருப்பதை காண்க" என்கிறார்.

"நீரும் நெருப்பும் நெடுங்காற்றும் வானமும்
பாருமாய் நின்றதைக்காண் குதம்பாய்
பாருமாய் நின்றதைக்காண்"

"எங்கும் வியாபகம் ஈகை விவேகங்கள்
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய்
பொங்கமாய் உள்ளானடி"


- குதம்பைச் சித்தர் -

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

பெண் சித்தர்கள்....சில கேள்விகள்...

Author: தோழி / Labels:பண்டைய இந்திய கலாச்சாரத்தில், ஞானத்தால் முதிர்ந்து, இறைவனுக்கு இணையாய் பாவிக்கப்பட்ட சித்த மகா புருஷர்கள் ரசவாதம், மருத்துவம் , சோதிடம் , மாந்திரீகம் போன்ற பல கலைகளிலும் தேர்ந்து சிறந்து விளங்கினார்கள்.

இப்படியான மேன்மையான நிலையெய்திவர்கள் பெரும்பாலும் ஆண்களாய் இருப்பது நமக்கு பல கேள்விகளை விதைக்கிறது.

சித்தர்களில் பெண்கள் பற்றி பெரிதான குறிப்புகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை... அப்படியே பெண்கள் இருந்திருந்தாலும் அக் காலத்தைய ஆணாதிக்க சமூகத்தின் தாக்கத்தினால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் எஞ்சியிருக்குமென எதிர்பார்க்கவும் இயலாது.

சமூகவியல் காரணங்களினால் பெண் சித்தர்களைப் ப்ற்றிய குறிப்புகள் கிடைகக்வில்லையா அல்லது நிதர்சனத்தில் பெண் சித்தர்கள் இல்லையா என்பதும் விவாதத்திற்குறியது.

எமக்கு கிடைத்திருக்கும் விவரங்களின் வகையில் சில பெண் சித்தர்கள் வாழ்ந்தததாக குறிப்புகள் சில கிடைத்தாலும், அவர்களின் வரலாறு மற்றும் அவர்களின் குரு யார், அவர்களுக்கு சீடர்கள் உண்டா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இவர்களின் பாடல்களோ அல்லது அவர்களின் அற்புதங்கள் பற்றிய விவரங்களும் இல்லை. அப்படியான படைப்புகள் ஏதும் இல்லையா அல்லது காலத்தால் அவை மறைக்க பட்டதா என்பதெல்லாம் ஆராச்சிக்குரியது...

மிகச் சமீபமாய் பரமாச்சாரியார். ராணி சென்னம்மாள், மாயம்மாஆகிய மூன்று பெண் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் முறையே காஞ்சிபுரம், பிதானூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில்ஜீவ சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன.

இவர்களைப் பற்றிய மேலதிக விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். போதுமான ஆதாரஙகள் மற்றும் பாடல்கள் கிடைக்கும் போது விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்..

மாயம்மா ஜீவ சமாதி கன்னியாகுமரி


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காயமே இது மெய்யடா..!

Author: தோழி / Labels: , ,

சித்தர்களை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் அவர்களின் மாறா இளமையும் நீண்ட ஆயுளும் நம் நினைவுக்கு வருவது இயற்கை.

"காணாது சித்தற்க்கு காயம் வலுநிற்க
எணாகத்தின்ன விசைந்த முறை கேளு
ஈணாக வயது இருப்பதில் மண்டலம்
பூணா வறுபதில் போல்ரெட்டித் தின்னு"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

திருமூலர் கூட இதையே, சித்தர்களின் உடல் இளமையுடன் வலுவாய் இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதில்லை எனவே சித்தர்களை போல் உடலை இளமையுடன் உறுதியுடன் வைத்திருக்க காயகட்பத்தை உண்ணுங்கள் என்கிறார்.

இருபது வயது வாலிபனாக இருந்தால் ஒரு மண்டலமும் , அறுபது வயதை கடந்துவிட்டால் இரண்டு மண்டலமும் காய கற்பத்தை உண்ண வேண்டும் என்று சொல்லும் அவர்.....

"திண்ணிடு தொண்ணூறு சேர் மூன்று மண்டலம்
பண்ணிடு தாண்டில் பலியாது கற்பம் தானே
மண்ணிடை மாந்தரே வருந்திப் பிறக்காமல்
எண்ணிடு மேனி இளந்தைப் பருவமே"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

தொண்ணுறு வயதை நெருங்கும் போது கற்பங்களை மூன்று மண்டலம் உண்ணவேண்டும், தொண்ணூறு வயதைக் கடந்து விட்டால் கற்பங்கள் பலன்தராது, உண்பதால் எந்த பயனுமில்லை, எனவே மண்ணில் பிறந்த மக்களே முதுமையில் கஷ்டமின்றி வாழ இளமையிலேயே கற்பம் உண்ணுங்கள், முதுமையில் சிக்காது என்றும் இளமையுடன் வாழுங்கள் என்று சொல்லும் திரு மூலர்...

மேலும்,

"பருவமாய்வாழ்ந்தால் பலனேதோ வெண்ணாதே
அருவமாய் ஞான வகண்ட மகா யோகம்
சுருபமாய் வாய்க்கும் சுக சித்தி ஆடலாம்
நிருபமாய் பாழு நிலையம் வெளியாமே"


- திருமூலர் வைத்திய சாரம் 600 -

இளமையுடன் வாழ்வதற்க்கு கஷ்டப்பட்டு காயகற்பம் உண்ணுவதில் பலனில்லை என்று எண்ணாதே... உடல் இளமையாக என்றும் இருந்தால் மட்டுமே ஞான யோகம் சித்தியாக இலகுவாக இருக்கும், அப்போது பல சித்துக்களை நீ செய்யலாம், அது மட்டுமல்லாமல் உன் தொடர் யோக ஞான தேடல்களுக்கு உடல் நிலை தடங்கல் இல்லாதுசிறப்பாக முப்பால் நிலையையும் உணர்ந்து பரிபூரணத்தை காணும் நிலையை எளிதாய் அடையலாம் என்கிறார் திருமூலர்.

இதன் மூலம் சித்தர்கள் காயகற்பத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் தெளிவாகிறது.

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குறி கேட்கலையோ.....குறி! - 2

Author: தோழி / Labels: , ,"தானே தான் குறி சொல்லும் விவரங் கேளு
தயவாக பச்சை என்ற
புனுகு கோஷ்டம்
மானேதான் பச்சை என்ற பூரத்தொடு
மைந்தனே சந்தனமும் சமனாய் செய்து
பானே தான் சலம் போட்டு மைபோல ஆட்டி
பண்பாக தரை தனிலே பூசி பின்னே
வீணேதான் போகமல்தி ரிகோணம் மிட்டு
விதமான ஸ்ரீங் காரம் உள்ளே நாட்டே"

"நாட்டியே மந்திரத்தை சொல்லக் கேளு
நலமாய்த்தான் ஜெபிக்க மூன்றுகாலம்
ஓட்டியே ஓம் நமோ பகவதே ஓம்
உக்கிரமா காளி சாமுண்டி யாயி
நீட்டியே வைரவி சாம் பவியோங்காரி
நிமிலிமகாசக்தி நமஹா நமஹா வென்னே
ஆட்டியே லட்சமுடன் னாயிரத்தேட்டும்
டன்பாக தான் செபிக்க சித்தியாமே"

"சித்தியாய் வருமளவும் மூன்று காலம்
சிறப்பாக தலை மொழுகி தியானமோது
பத்தியாய் ஒருபொழுது அமுது கொள்ளு
பாங்காக முன்னெடுக்கும் கவளம் தன்னை
நத்தியாய் முன்னிட்ப பின்மேல் வைத்து
நலமாக வேஷ்டியிலே படுக்க வேணும்
வேத்தயாய் வஸ்துடனே சுற்றிவைத்து
நலமாக முதல் பூசி செய்குவாயே"

"செய்யவே மண்டலத்தில் சித்தியாச்சு
செய்தொழில்கள் இன்னதென சொல்லலாச்சு
பெய்யவே முன்நடந்த சேதியெல்லாம்
பண்பாக நினைத்ததெல்லாம் சொல்லும் பாரு
அய்யனே புகைஎதுவும் குடிக்கலாகா
தட்டைக் காயும் வெற்றிலையும் மிகுந்து போடு
கையவே கன்னத்தில் கையை வைத்து
கடந்ததொரு சேதியெலாம் சொல்லுவாயே"


- புலிப்பாணிச் சித்தர் -


குறிசொல்வதன் விபரம் சொல்கிறேன் கேள்! , பச்சை புனுகு, கோஷ்டம், பச்சக் கற்பூரம், சந்தனம் இவற்றை சம அளவில் எடுத்து நீர் விட்டு மைபோல அரைத்து அதனைக் கொண்டு நிலத்தை மெழுகி அதன் மீது ஒரு முக்கோணம் கீறி முக்கோணத்துள் 'ஸ்ரீம்' என்ற ( படம் கீழே )எழுத்தை எழுதிக் கொண்டு, அதன் முன்னாள் வஸ்த்து என்று சொல்லபடுகின்ற பழம், தாம்பூலம், பால் போன்றவற்றை வைத்து கீழே சொல்ல படும் மந்திரத்தை செபிக்க ஆரம்பிக்க வேண்டும்.

"ஓம் நமோ பகவதி ஓம் உக்கிரமாகாளி சாமுண்டி ஆயி பைரவி சாம்பவி ஓங்காரி நிமலி மகா சக்தி நமஹா நமஹா"

இந்த மந்திரத்தை தினமும் மூன்று வேளை தலை முழுகி சுத்தமாய், நாற்பத்தி எட்டு நாளைக்கு மொத்தமாக ஒருலட்சத்தி ஆயிரத்தி எட்டு தடவை செபிக்க வேண்டும். இப்படி செபிக்கும் போது ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்னர் முதல் கவளத்தை அந்த முக்கோணத்துள் வைத்து வணங்கிவிட்டு உண்ணவேண்டும். இப்படி செபிக்கும் நாளில் இரவில் உறங்கும் போது ஒரு துணியை மட்டும் விரித்து அதன் மேல் தான் உறங்க வேண்டும், அத்துடன் மது , புகைத்தல் முற்றாக விலக்கி விட்டு பாக்கு வெற்றிலை வேண்டி அளவிற்கு போட்டுக்கொள்ளலாம்.

இப்படி சுத்தமுடன் செய்து வந்தால் இந்த மந்திரம் சித்தியாகும்,அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். மேலும் தேடிவரோருக்கு குறி சொல்லும் போது இடது கையை கன்னத்தில் வைத்தபடி சொல்ல வேண்டும் என்கிறார் புலிப்பாணிச் சித்தர்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


குறி கேட்கலையோ....குறி..!

Author: தோழி / Labels:

பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று. இது குறித்து விரிவாய் பார்ப்பதற்கு முன்னர்......

பிரச்சினைகள் இல்லாத மனிதர்களே இல்லை, கூடி வாழும் குடும்பங்களும் இதற்கு விதி விலக்கில்லை. சக மனிதனாலும், சமூகத்தாலும் பிரச்சினைகள் உருவாவதும் அதனை சமாளிக்க போராடுவதுமாய் கழிந்து போகிறது மனித வாழ்வு. இந்த போராட்டத்தின் ஊடே விளைவதுதான் மன அழுத்தம் மற்றும் உளைச்சல்கள். இத்தகைய மனக் கொதிப்புகளின் காரணமாய் உடலும், மனமும் நலிவடைகிறது.

சரியான தீர்வுகளை கண்டறிபவனுக்கு இத்தகைய பாதிப்புகள் எதுவும் வருவதில்லை. ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. அதுவும் பிறந்ததில் இருந்து கட்டுப்பாடுகளின் ஊடே வளர்க்கப் படும் பெண்களுக்குத்தான் பிரச்சினைகளினால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்தகையவர்களுக்கு அந்த கால கட்டத்தில் கிடைத்த ஆறுதல்களில் ஒன்றுதான் இந்த குறி சொல்பவர்கள். உண்மையில் தீர்வுகளை சொல்பவர்களாகவே இவர்கள் பார்க்கப் பட்டனர். குறி சொல்வோரின்தீர்வுகள் பலித்ததோ இல்லையோ, அந்த இக்கட்டான சமயத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தேவையான ஆறுதலை தந்தது என்பதாகவே கருத வேண்டும்.

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.
அதை பற்றி அடுத்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...!

Author: தோழி / Labels: , , ,

ஆழந்த இறை பக்தியின் பயனைச் சொல்லும் விதத்தில் அமைந்த இடைக்காட்டுச் சித்தர் பாடலில், இறைமையிடம் அன்பு இல்லாதவர்கள் முக்தியடைய முடியாது என்கிறார். இதற்கு ஒரு அழகிய எளிமையான உவமையை சொல்கிறார் இடைக்காட்டுச் சித்தர்,

"அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே...! இறை பக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே...!"

அதாவது வேகவைத்த நெல் எப்போதும் விதைப்பதற்கு உதவாததைப் போல, இறை பக்தி இல்லாத மனிதர்கள் முக்தியடைவதில்லை என்கிறார்.

எளிமையான உதாரணத்துடன் நம்மை சிந்திக்க வைத்து, மேலும் வலுவாய் இதையே வலியுறுத்துகிறார்.

"அய்யன் திருப்பாதம் பசுவே..!
அன்புற்று நீ பணிந்தால்
வெய்ய வினைகளெல்லாம் பசுவே..!
விட்டோடும் கண்டாயே."

"எல்லாம் இருந்தாலும் பசுவே..!
இறை பக்தி இல்லையேல்
இல்லாத் தனமையேன்றே பசுவே..!
எண்ணிப் பணிவாயே."

- இடைக்காட்டுச் சித்தர் -

இறை பக்தி இல்லாத ஒருவனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும், அவையனைத்தும் பயனற்றவைகளாகவே திகழும் என்கிறார். இறைபக்தியே ஒருவனை வாழ்க்கையில் உயர்த்தும் என்கிறார் இடைக்காட்டுச் சித்தர்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கற்பம் சித்தியானதை கண்டறியும் முறை...

Author: தோழி / Labels:

காயகற்பத்தில் பல முறைகளும், வகைகளும் உள்ளன. இவற்றை மையமாய் வைத்து எழுத ஆரம்பித்தால் முடிவற்ற தொடராக போய்விடும். அதனால் முந்தைய பதிவுகளில், சில எளிய காயகற்ப முறைகளை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.

காயகற்பம் எடுத்துக் கொண்ட பின்னர் காயசித்தி ஆகிவிட்டதா, என்பதை அறிந்து கொள்ள பிரண்டைக் கொழுந்தை வாயில் போட்டு தின்றால் அது கரும்பு போல் இனிக்கும், என்று சொல்லும் சித்தர்கள்.....காய சித்தி பெற்றவர்கள் எதை சாப்பிட்டாலும் அவர்கள் உடம்பிற்கு அழிவோ தீங்கோ ஏற்படாது என்றும் சொல்கிறார்கள்.

"தித்திக்கும் லட்சணம் தான் பிரண்டை முந்தி
செய்த பின்பு என் மக்காள் கேளு கேளு
மத்திக்கும் பாசணமெல்லாந் தின்னு
மலஜலமும் பொன்னாகும் வயிரதேகம்
மொத்திக்கு மூன்றுடம்பில் தேகந்தகம்
உத்தமனே செம்பாகு மோடுந்தூரம்
அத்திக்கு சூதமொடு கந்தகத்தை உண்ணு
அம்மம்மா தேகமெல்லாம் களங்குமாச்சே"


மேற்சொன்னபடி சோதித்து அறிந்த பின்னர், பாஷாணங்கள், இரசம், கந்தகம் போன்றவைகளையும் சாப்பிட்டால் உடம்பு களங்கு போல ஒளி வீசும் என்கிறார். அத்துடன் உடம்பில் வயது முதிர்வால் உண்டான சுருக்கங்கள், நரைமுடி மாறுவது, தோல் உரிந்து பொன்னிற உடல் ஆவது , கொட்டாவி, சோர்வு, தூக்கம் இவை நீங்குவது, போன்ற அறி குறிகளைக் காணலாம் என்கிறார்கள்.

இது போல, பாம்பாட்டி சித்தரும் தான் கற்பம் உண்டு பெற்ற பயனை சொல்கிறார்,

"காலனெனும் கொடிதான கடும் பகையை நாம்
கற்பமேனும் வாளினாலே கடந்து விட்டோம்
தாளமத்தில் பிறப்பினை தான் கடந்தோம்
தற்பரம் கண்டோமென்று ஆடு பாம்பே"


வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மனமெனும் மந்திர சாவி

Author: தோழி /

சுயநலத்துடன் கூடிய உலகப் பற்று, நிலையற்ற செல்வத்தின் மீதான பேராசை, பொய்யான புகழ்போதை ஆகியவற்றில் இருந்து விடுபடாத வரையில் மனம் அடங்காது, அப்படியான மனத்தினால் எதுவும் கைகூடாது என்கின்றனர் சித்தர்கள்

# இலட்சியம் விட்டால் யோகம் போச்சு
# குண்டலினி விட்டால் அஷ்டசித்தி போச்சு
# மனம் விட்டால் ஞானம் போச்சு
# வாசி விட்டால் தேகம் போச்சு


மானுடர் தாம் உயர்வதற்க்கும், தாழ்வதற்க்கும் அவரவர் மனமே காரணம் என்று சொல்கிறார்கள் சித்தர்கள்.இத்தனை வல்லமை வாய்ந்த் மனதினை எவ்வாறு அடக்க (கட்ட) வேண்டும் என்ற பக்குவத்தையும் நமக்குணர்த்திச் சென்றுள்ளனர்.

இதையே திரு மூலரும்,

"பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே."


- திருமந்திரம் -

நான் பெரியவன், நான் உரைப்பதே சரி, என்று எண்ணி நிறைய பேசுவதனால் என்ன பயன்? இந்த மாதிரியான பேச்சுக்கள் எத்தனை காலத்திற்கு? கால ஓட்டத்தில் இவ்வாறான பேச்சுக்கள் என்றும் நிலைப்பதில்லை, அத்துடன் கானல் நீர்போல் தோன்றி மறையும் உலகை நினைத்திருப்பதில் என்ன பயன்?

பரவலாக உலகெங்கும் விரிந்து காணப்படும் பொருட்கள் எதுவும் நிலையானது அல்ல, என்ற உண்மையை ஆராய்ந்து அறிபவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை என்ற நிலை புரியும். இந்நிலை புரியாதவரே வாய்வார்த்தை பெரிதென்று எண்ணியிருப்பார் என்று சொல்கிறார் திருமூலர்.

ஆக, மனச் சுத்தம் ஆகாதவரை யாராலும் தேகத்தை வெல்ல முடியாது , அதுவரை தேகம் அழிந்து மரணம் அடைந்தே தீரும்.

எனக்கு வந்த பல மின்னஞ்சல்களில் காயகற்பம் உண்டபின் அது சித்தியடைந்ததை எவ்வாறு அறிவது என்று வினவியிருந்தனர் அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தன்னை அறிவதே, உண்மையான அறிதல்....

Author: தோழி / Labels:

வாழ்க்கையின் நெடுகே நாம் அறிந்து கொள்வது எல்லாமே அறிதல் என்னும் வரையறைக்குள் வந்தாலும் , அறிவறிதலில் தலையாயதும், நிலையாயதும், உண்மையானதும் தன்னை அறிதலே ஆகும்.

சித்தர்களும் இதையே முதன்மை படுத்தி சொல்கிறார்கள், இவர்களே இதை முதன்மை படுத்தி சொல்லும் போது தன்னை அறிதல் என்பதைத் தவிர்த்த அறிதல்கள் எதுவும் பெரியதாகாது, இதையே திரு மூலர்,

"என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்"


என்றும்,

"தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுக்கிறான்"


என்றும்,

"தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே"


எனச் சொல்கிறார் திருமூலர்.

இதையே சிவவாக்கியார்,

"என்னிலேயிருந்த ஒன்றையறிந்த தில்லையே
என்னிலேயிருந்த ஒன்றை யறிந்து கொண்டபின்
என்னிலேயிருந்த ஒன்றை யாவர் காணவல்லரே
என்னிலேயிருந்த ருந்திருந்து யாதுணர்ந்து கொண்டேனே"


என்கிறார். ஆக , சித்தர்கள் எல்லோரும் மனிதனாய் பிறந்தவன் அறியவேண்டியதில் முதன்மையானது, தன்னை அறிவதே என்கிறார்கள். நாமும் எம்மை அறிய முயல்வோமாக.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உனக்கு உபதேசம் இது...

Author: தோழி / Labels: ,


"நாட்டம் என்றே இரு! சற்குரு
பாதத்தை நம்பு பொம்மல்
ஆட்டம் என்றே இரு! பொல்லா
உடலை: அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றிரு சுற்றத்தை
வாழ்வைக் குடம் கவிழ் நீர்
ஓட்டம் என்றே இரு நெஞ்சே
உன்னக்குபதேசம் இது."

- பட்டினத்தார் -

"உண்டென்றிரு தெய்வம் உண்டென்
றிரு உயர்செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம்
பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடுநீங்காம
லே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கு
உப தேசம் இதே"

- பட்டினத்தார் -

மேலே சொல்லப்பட்ட இரண்டு பாடலும் பட்டினத்தார் தன் மனதிற்கு தானே சொல்லிக் கொள்வது போல அமைந்துள்ளது.

உண்மையை உணர்ந்த ஒழுக்கமுள்ள குருவின் உபதேசங்களை நம்பு, அவர் திருவடிகளை தொழு, உனது உடலும், உறவுகளும், செல்வமும் நிலையானது என்று நம்பாதே ,அப்படி நம்பினால் உடலை வளர்க்கவே பாடுபடுவாய்.இந்த உடல் தோன்றி மறையும் பொம்மலாட்டம் என்று எண்ணு. குடத்தைக் கவிழ்த்ததும் ஓடி மறையும் நீர் போல நிலையற்றது செல்வம் என்று உணர்ந்துகொள். இந்த உண்மையை மறவாமல் எண்ணியிருந்தால் பாவம் செய்யாமல் நன்மை செய்து வாழ முடியும். மனமே! நான் உனக்கு செய்யும் உபதேசம் இதுவே, என்று சொல்லும் பட்டினத்தார்....தொடர்ச்சியாக

யாராக இருந்தாலும் முதலில் தன்னை ஒரு ஒழுங்கில் வைத்திருக்க வேண்டும், நேர்மையான வழியில் நடத்தல் வேண்டும், தீய வழியில் நடந்து கொண்டு, பிறருக்கு உபதேசம் செய்பவர் சொல்லும் சொல்லுக்கு மதிப்பிருக்காது, அகந்தையை விடுங்கள், பஞ்சமா பாதகரின் கூட்டுறவு வேண்டாம், பாவ செயல்களில் இருந்து விலகியிருப்போம், நல்லவர்களை குறை கூறாது அவர்தம் நட்பை நாடுவோம், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு நன்னடத்தை முதன்மையானது, எண்ணம், சொல், செயல் இந்த மூன்றும் ஒன்றாய் நன்றாய் இருப்பதே சிறந்தது.

இந்த உண்மைகள் பட்டினத்தார் பாடல்கள் எங்களுக்கு விளக்குகின்றன. இதுவே பண்டைத்தமிழர் பின்பற்றிய ஒழுக்க நெறி.

புதிய மனிதனாய் எழுந்து பாருங்கள்.....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


ஞானியர் உடலை ஏன் புதைக்கின்றனர்? ஜீவசமாதி என்றால் என்ன?

Author: தோழி / Labels:

பெருமையற்றவர் உடல் எரிக்கப்பட்டு பெருமையுள்ளவர் உடல் புதைக்கப் படவேண்டும் என்று திரு மூலர் சொல்கிறார்.

"எண்ணிலா ஞானி உடல் எரிதாவிடில்
அண்ணலதம் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில மழை விழா: வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பார் அரசுமே"


- திருமந்திரம் -


"அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே"


- திருமந்திரம் -

ஞானியர் தங்கள் உடலையே கோவிலாக கொண்டு வாழ்பவர்கள். அந்த உடலுக்கு தீவைப்பது, திருக்கோவிலுக்கே தீவைப்பதற்க்கு சமனாகும். அவ்வாறு செய்தால் மண்ணில் மழையின்றி கொடிய பஞ்சம் ஏற்படும். மன்னர் அரசாட்சியை இழக்க வேண்டி வரும். அத்துடன், ஞானியரின் உடல்கள் அடக்கம் செய்ய ஆட்கள் இல்லாது மண்ணில் கிடந்தது அழிந்தால் அந்த நாட்டின் அழகு எல்லாம் கெட்டு, நாடு வீழ்ச்சியடைந்து, பெருந்துன்பம் ஏற்படும் என்று சொல்லும் திரு மூலர்,

இவர்கள் உடல் மண்ணில் அடக்கம் செய்வதால், நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிட்டும் என்றும் நாடுவளம் பெறுவதுடன் நாட்டு மக்களுக்கும் நல்லருள் கிடைக்கும் என்கிறார். இவாறு அடக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வெளியே வந்து வெவ்வேறு இடங்களில் நடமாடி மீண்டும் அடக்கமாகின்றார்கள். இதனால் இவர்களை அடக்கம் செய்தததாக சொல்லாமல் ஜீவ சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சொறி சிரங்குக்கு மேல்பூச்சு

Author: தோழி / Labels: ,

"நோயது சிரங்கு சொறி கரப்பான் ஏது
நுவலவொணாது ஆறாபுண்புரைகள் ஏது
நோயேது இன்னமும் ஒரு சேதி கேளு
நுணுக்கமாம் தேங்காயை கருகச்சுட்டு
கலங்காமல் அதில் பாதி மிளகும் சேர்த்து
நோக்கமாய் அரைத்துஅதை வழித்துக் கொண்டு
நோயேது மேல் எங்கும் மூனால் பூசு பூசே
நேர்மையுடன் சாயரட்சை வெந்நீர் வாரே"


- போகர் வைத்தியம் 700 -

தேங்காயை கருகிப் போகும் அளவு சுட்டு அந்த தேங்காயின் அளவில் பாதி மிளகு சேர்த்து நன்றாக அரைத்து நோய் ஏற்பட்ட இடங்களில் பூசி பகல் முழுதும் விட்டு பின்னர் மாலையில் வெந்நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு மூன்றுநாள் தொடர்ந்து செய்தால் சொறி , சிரங்கு, கரப்பான் போன்ற நோய்களும், அதே போல ஆறாமல் இருக்கும் மற்ற புண்கள் கூட ஆறிவிடும் என்கிறார் போகர்.

இவை தவிர போகரின் இந்த ”போகர்700” நூலில் பல எண்ணை வகைகள், தைல முறைகள், சூரணம், உண்டை, மேற்பூச்சு வகைகள், செந்துரவகைகள், பற்பங்கள், மாத்திரைகள், வசிய முறைகள், அஞ்சனங்கள், மை வகைகள், கியாழங்கள் என பல அரிய தகவல்களை சொல்லியிருக்கிறார்.

அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.....


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தரமான தங்கபற்பம்(பஸ்பம்) தயாரிக்கும் உத்தி...

Author: தோழி / Labels: ,


"பேசுகிறேன் தங்கம் ஒரு பலம் தான் வாங்கி
பெலக்கவே தகடு செய்து வில்லையாக
வீசுகிறேன் நறுக்கி அதன் மேலே கேளு
விருந்தான விலையரைத்து பொதிந்து நன்றாய்
தேசியுடன் கட்டி நூறு எருவில் போட்டால்
செப்பரிய தங்க புடம் உருகி நீறும்
ஆசியம் வியாதிகளுக்காக சொன்னேன்
அதில் முக்கால் புடம் போடா பதமாம் நீறே"


- போகர் வைத்தியம் 700 -

"பதமான நீறாலே ரோகம் எல்லாம்
பறக்குமே
பருதிகண்டபனியைப் போல
பதமாக நாள் ஒன்றுக்கு அந்தி சந்தி
பணவெடை தான் மாறாமல் உண்டு தேறு
இதமாம் பால் நே தென் சக்கரை ஒன்றில்
இதமாக மண்டலம் தான் கொண்டு தேறு
கதமான சருவ நோய் எல்லாம் தீரும்
கனகம் போல் ஆகுமட தேகம் பாரே"


- போகர் வைத்தியம் 700 -

ஒரு பலம் தங்கத்தை கெட்டியான தகடாக மாற்றி, பின்னர் அதை வில்லை வில்லையாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அந்த வில்லைகளின் மேல் கருந்துளசி இல்லையை அரைத்து பொதிய வைத்து, பொதிய வைத்த வில்லைகளை நூறு எருவில் புடம் போட்டால் பற்பமாகும், அதனையே (முக்கால் புடம்) எழுபத்தியைந்து எருவில் புடம் போட்டால் நல்ல பதமான பற்பம் கிடைக்கும். இதுவே தங்க பற்பம் (பஸ்பம்) செய்யும் முறை ஆகும்.

பல கொடிய நோய்களுக்கு மருந்தாக நூறு எரு புட பற்பமும் , தங்க பற்பத்துக்கு எழுபத்தியைந்து எரு புடமும் பயன்படும்.

இரண்டாவதாக குறிப்பிட பட்ட அதாவது முக்கால் புட தங்க பற்பத்தை பால், நெய், தேன், சர்க்கரை ஆகிய ஏதாவது ஒன்றுடன் ஒரு பணம் அளவு தங்க பற்பம் குழைத்து காலையும் மாலையுமாக தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் எல்லா தேக நோய்களும் நீங்குவதுடன், உடலும் பொன்போல பிரகாசிக்கும் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


காந்தரசம் செய்து அதனை தங்கமாக்கும் வகையறிதல்...

Author: தோழி / Labels: ,

”அரியவை அறிவோம்” தொடரில் போகர் 700 என்ற நூலில் காந்தரசம் தயாரிப்பதைப் பற்றியும், அதனைக் கொண்டு தங்கம் செய்யும் முறையினை பின் வரும் பாடல்களில் போகர் கூறுகிறார்.

"ஆடவே காந்த ரசம் சொல்லக் கேளு
அரகரா ஏழு ஊசி பிடிக்கும் காந்தம்
தேடியே பலம் ஒன்று மண்கலசத்திலிட்டு
சிறப்பாக நீலிச்சார் நிறைய வார்த்து
வாடவே இரவிபடாது அறைக்குள் வைத்து
வன்மையுடன் நாள் மூன்று மூடிவை நீ
ஊடவே சாறு எல்லாம் காந்தம் உண்ணும்
உவகையுடன் அயக் குறட்டால் எடுத்திடாயே"


- போகர் வைத்தியம் 700 -

"எடுத்திட்ட அயக்குறட்டால் பிடித்துக்கொண்டே
இதமாகக் கிண்ணத்தில் தட்ட தட்ட
அடுத்திட்ட ரசமெல்லாம் சாம்பல் போலே
அப்பனே காந்த ரசம் இறங்கும் பாரே
கடுத்திட்ட காந்தம் ஒரு பலத்துக்கு அப்பா
கால்வாசி இறங்கி நிக்கும் திரட்டி வாங்கு
வெடித்திட்ட குடக் கரியில் இட்டு நீயும்
வெண்காரம் இட்டு உருக்கு கனகம் ஆமே"


- போகர் வைத்தியம் 700 -

"கனகத்தை கண்டு நீ மகிழ்ந்தி டாதே
கைசெலவு கற்பத்துக்கு இல்லாவிட்டால்
கனகமாஞ் செலவுக்கு கற்பத் துக்குக்
காணவே கொஞ்சமாய் செய்து கொண்டு
கனகமாம் அந்தி சந்தி கந்தன் பூசை
கருதி நீ செய்து கொண்டு அனுபவிப்பாய்
கனகமாம் உலகத்தில் வெளி செய்யாமல்
கண்டவர்முன் ஊமையை போல்இருந்திடாயே"


- போகர் வைத்தியம் 700 -

ஏழு வகையான இரும்புகளையும் ஈர்த்துக் கொள்ளும் அளவு காந்த சக்தியைக் கொண்ட காந்தத்தில் ஒரு பலம் எடுத்து, அதனை ஒரு மண் பாண்டத்தில் இட்டு அதை நீலிச் சாற்றால் நிரப்பி, மூடியால் மூடி சூரிய ஒளி போகாத இருட்டறையில் மூன்று நாள் வைத்திருந்து நான்காம் நாள் எடுத்து பார்த்தால், சாற்றை எல்லாம் காந்தம் உறிஞ்சி இருக்கும். இந்த காந்தத்தை அயக் குறட்டால் (இரும்புக் குறடு) எடுத்து ஒரு கிண்ணத்துக்குள் வைத்து மெதுவாக தட்டினால் சாம்பல் கொட்டுவது போல காந்தரசம் கிண்ணத்துள் விழுமாம். இதை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள் இதுவே காந்த ரசம் என்று போகர் குறிப்பிடுகிறார்.

இந்த காந்த ரசத்தினை குடக் கரியில் போட்டு வேண்காரத்தொடு சேர்த்து உருக்கினால் தங்கம் ஆகிவிடுமாம். இத்தனை எளிதில் பொன் கிடைக்கிறது என்று மயங்கி விடாமல் காய கற்பம் செய்துகொள்ள தேவையான பணம் இல்லது போனால் குறைவான அளவில் செய்து கொள் என்கிறார்.

பொன் ஆசை கொள்ளாமல் காலையும் மாலையும் முருகனை கும்பிடச் சொல்லும் போகர்,
இந்த காந்த ரசத்தை செய்யும் முறையும் , அதனை தங்கமாக மற்றுவதையும் யாருக்கும் சொல்லாமல், ஒன்றுமே தெரியாத ஊமை போல இருப்பது நல்லது என்கிறார்.

அடுத்து போகர் சொல்லிய தங்க பற்பம் (பஸ்பம்) செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வீர ரசம் தயாரிப்பது எப்படி?

Author: தோழி / Labels: ,

"காணவே வீரரசம் சொல்லக் கேளு
கடியதொரு சவ்வீரம் பலம் தான் ஒன்று
பூணவே சுத்தி செய்து பொடிதான் செய்து
புகழான பீங்கானிலிட்டு பனியில் வைக்க
காணவே மணிமணியாய் இறங்கி நிக்கும்
கண்டு ரசம் வாங்கியே பதனம் பண்ணு
கானுவெனச் சருவநோய் எல்லாம் தீரும்
சகல சித்தும் இதனாலே ஆடலாமே"


- போகர் வைத்தியம் 700 -

ஒருபலம் சவ்வீரத்தை எடுத்து சுத்தம் செய்து நன்றாக தூளாக்கி, அதை ஒரு பீங்கான் கோப்பையில் இட்டு பனியில் வைத்தால், சவ்வீரத்திலிருந்து ரசம் இறங்கி இருக்கும், இதை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே வீர ரசம் என்று சொல்லும் போகர், இதனைக் கொண்டு எல்லாவிதமான சரும நோய்களையும் குணப்படுத்துவதுடன், வேறு பல சித்துக்களையும் செய்யலாம் என்றும் சொல்கிறார்.

இனி காந்தரசம் செய்யும் முறையையும், அதை இரசவாதத்தால் தங்கமாக்குவது எப்படி என்றும் அடுத்த பதிவில் பார்க்கலாம். .

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


வாலைரசம் தயாரிப்பது எப்படி?

Author: தோழி / Labels: , ,

"சொன்னதொரு வாலைரசம் சொல்லக் கேளு
துடியான செந்தூரம் குளிகை பற்பம்
வன்னமொரு வாதங்கள் வயித்தியங்கள்
மற்றும் முதல் இவைகளுக்கும் மெத்த நன்று
கன்மமாம் சாதிலிங்கம் பலம் தான் ஒன்று
கண்மாய்வான் கிபலத்தின் சாற்றினாலே
கண்மவே சுயம்பு ரசம் ஆகவேண்டும்
கடையில் உள்ள ரசமேனும் சுத்திசெய்யே"

- போகர் வைத்தியம் 700 -


"செய்யவே சட்டிதனில் கொடிவே இத்தூள்
சிறப்பாக பரப்பியதன் மேலே கேளு
பெய்யவே சாதிலிங்கம் பொடித்து மேலே
பரப்பியே சட்டியில் ஊமத்தன் சாற்றை
துய்யவே மூன்றுதரம் பூசிக் கவசம்
துடியாய்செய்து அடுப்பில் ஒருவிறகுதன்னால்
அய்யாவே நாட்சாமம் எரிக்கும் போதில்
அப்பனே பதங்கித்து நிக்கும் பாரே"


- போகர் வைத்தியம் 700 -


"பதங்கித்த ரசம் எல்லாம் எடுத்துவைத்து
பரிவாய் நோயறிந்து அனுபானத்திலூட்டு
பதங்கித்த பதினெட்டு சூலை குன்ம
பறங்கிப்புண் அரையாப்பு கண்ட மாலை
பறங்கித்த வாய்வென்பது இருபத்தாறும்
பவுத்திரமும் கீழ் சூலை பிளவை புற்று
புதங்கித்த சிரங்கு சொறி கைகால் முடக்கு
பல்லூறல் மேகவெடி பறக்கும் காணே"


- போகர் வைத்தியம் 700 -


சித்தர்களால் பாதரசம் எனப்படும் ’மெர்க்குரி’ மருத்துவத்திற்கும், ரசவாதத்திட்கும் அதிகளவில் பயன்படுத்தப் பட்டது.

தங்களுக்கு தேவையான பாதரசத்திற்கு இணையான பாதரச வகை ஒன்றை தயாரித்து பயன் படுத்தியதாக சொல்லும் போகர் அதற்கு வாலை ரசம் என்று பெயர் சொல்லி, அதை தயாரிக்கும் முறையையும் சொல்கிறார்.

ஒரு பலம் ஜாதிலிங்கத்தை எடுத்து எலுமிச்சம் சாற்றால் சுத்தி செய்து பின் அதனை தூளாக்கிக் கொள்ள வேண்டும், பின் கொடி வெளித்தூளை ஒரு சட்டியில் பரப்பி முன்னர் செய்த ஜாதிலிங்க தூளையும் அதற்கு மேல் பரப்பி கொள்ள வேண்டும், பின்னர் சட்டியின் மூடிக்கு ஊமத்தை சாறு கொண்டு ஒருமுறை பூசி, அது காய்ந்தபின்னர் மறு முறை பூசி அதுவும் காய்ந்த பின் மூன்றாம் முறையாக பூசி அது காய்ந்த பின்னர், அந்த மூடியால் சட்டியை மூடி சட்டியை அடுப்பில் வைத்து ஒரே வகையான விறகைக் கொண்டு நான்கு சாமம் தொடர்ந்து எரிக்கவேண்டும், பின்னர் சூடு ஆறவிட்டு மூடியை திறந்தால் மூடியில் ரசம் பதங்கமாக படிந்திருக்கும் அதை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே வாலை ரசம் என்கிறார் போகர்.

இதை நோயின் தன்மையை நன்கு அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் உண்ணக் கொடுத்தால், பதினெட்டு வகையான சூலை நோய்கள், குன்மம், பறங்கிப் புண், அரையாப்பு, கண்ட மாலை, இருபத்தியாறு விதமான வாய்வு நோய்கள், கீழ் சூலை, பிளவை, புற்று நோய், சொறி, சிரங்கு, கைகால் முடக்கு, மேகவெடி ஆகிய நோய்கள் குணமாகும் என்கிறார் போகர் .

அடுத்த பதிவில் வீர ரசம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்...

எனது மின்னூலுக்கு கிடைத்த வரவேற்பு நான் சற்றும் எதிர்பாராதது....நன்றி நண்பர்களே, இந்த மின்னூலுக்கு கட்டணம் ஏதுமில்லை....அன்பளிப்பாகவே பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் ஆர்வமுள்ள நண்பர்களிடம் இந்த நூலை பகிர்ந்து கொண்டால் அதுவே எனது முயற்சிக்கான பலனாய் அமையும்.

விருப்பமுள்ளோர் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


முதல் முயற்சி...

Author: தோழி / Labels:

வணக்கம் நண்பர்களே. . .

இந்த வருடத்தின் துவக்கம் வரையில் வலை பதிவுகள் பற்றிய அறிமுகம் ஏதும் இல்லாமல், ஒரு வலைதள குழுமத்தில் சிறிய அளவில் இயங்கி வந்திருந்ததேன்.வலையுலகில் புதியவளான எனது பதிவுகளுக்கு கிடைத்த வரவேற்பும், உற்சாகமும் நான் சற்றும் எதிர்பாராதது. இன்றைக்கு இந்த பதிவுக்கு கிடைத்திருக்கும் பெயருக்கும், வளர்ச்சிக்கும் பின்னால் பல இனிய நண்பர்களின் ஆலோசனைகளும், உதவிகளும், ஊக்கமும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்த நேரத்தில் அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பதிப்பகத்தினை அணுகி என்னிடம் இருக்கும் அரிய நூல்களை தொகுத்து நூலாக வெளியிட்டால் பலருக்கும் போய்ச் சேருமென ஒரு நண்பர் அறிவுறுத்தினார். இலங்கையில் வசிக்கும் பல்கலைக் கழக மாணவியான எனக்கு அதன் வழி வகை ஏதும் தெரியாத காரணத்தினால் என்னளவில் இவற்றை மின்னூலாகவே வெளியிட உத்தேசித்தேன். அந்த முயற்சியின் முதல் படிதான் இந்த மின்னூல்.

முதல் முயற்சியாக, போகர் அருளிய ”போகர் கற்பம் 300” என்னும் நூலை மின் நூல் ஆக்கியிருக்கிறேன். இதில் காப்பு உட்பட முன்னூற்றி நாற்பத்தி ரெண்டு பாடல்கள் இருக்கின்றன.எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நூலினை பெற்றுக் கொள்ளலாம். நூலில் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக் காட்டிடுங்கள். உங்களின் மேலான ஆலோசனைகளும், ஊக்கமும், உற்சாகமுமே, என்னை வழி நடத்தும் என உறுதியாக நம்புகிறேன்.

இந்த மின்னூலை எனது குருநாதரின் பாதகமலங்களை பணிந்து வணங்கி, உங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

என்றென்றும் நட்புடன்,
தோழி

siththarkal[AT]yahoo[dot]com
siththarkal[AT]gmail[dot]com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


போகர் வைத்தியம் 700...

Author: தோழி / Labels:

அரியவை அறிவோம் தொடரில் இரண்டாவதாக போகர் அருளிய, “போகர் வைத்தியம் 700” என்ற நூலினைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம். இந்த நூலில் பெரும்பாலும் மருத்துவம் தொடர்பான செய்திகளே இடம் பெற்றிருக்கின்றன. இவை தவிர இரசவாதம், மாந்திரீகம் போன்றவைகளைப் பற்றிய சில குறிப்புக்களும் காணப் படுகின்றன.

காப்புச் செய்யுள் ஒன்றுடன் சேர்த்து மொத்தம் 721 பாடல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.

இந்நூலை எழுத தொடங்கும் போது,

" திருவளர்மூ லாதார முன்னோன் பாதம்
செப்பு சுவாதிஷ்டான வேதன் பாதம்
மருவுமணி பூருகஞ் சேர் மாயன் பாதம்
மன்னும் அநாகத உருத்திர வண்ணன் பாதம்
உருவளர் விசுத்தி மகேஸ்வரன் பாதம்
உண்மையோடு ஆக்கினையின் சதாசிவன் பாதம்
குருவளரும் நாதர்கள் பாதம் போற்றிக்
கூறுகிறேன் வைத்திய சூட்சந்தானே"


யோகத்தின் ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் நிலைகளின் அதி தேவதைகளாக விளங்குபவர்கள் முறையே விநாயகர், பிரமன், திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகியோரையும், குருவாக இருக்கும் சித்தர்களையும் வணங்கி மருத்துவத்தின் சிறந்த நுட்பங்களை சொல்கிறேன் என்று நூலை துவங்குகிறார் போகர்.

இந்நூலில் சொல்லப்பட்ட சில மருத்துவ முறைகளை எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்...

போகர் கற்பம் 300” என்கிற அரிய நூலினை, மின்னூலாய் தொகுக்கும் பணி முடிவடைந்து விட்டது. மேலதிக விவரங்கள் அடுத்த பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜாலம் - 05

Author: தோழி / Labels:

மணலைக் கண்ணில் கொட்டிக்கொள்ளும் ஜாலம்...

புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 273 வது பாடலான.....

"பாடினேன் இன்னுமொரு ஜால வித்தை
பண்பான பேர்விளங்க சொல்வேன் கேளு
நாடியே நத்தை சூரி வேரைக் கண்டு
நவிலாமல் தாடையிலே மடக்கிக் கொண்டு
கூடியே கூச்சமென திருந்திடாமல்
குணமான கண்ணதனில் மணலைப் போட்டு
ஆடியே இரு கண்ணும் விரலால் தேய்க்க
அன்பான கண்ணும் அருகாது பாரே"

நத்தை சூரியின் வேரைக் கொணர்ந்து, சிறு சிறு துண்டு துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் மென்று தாடையில் அதக்கிக் கொண்டு, இரு கண்ணிலும் மணலைப் போட்டுக் கொண்டு கையால் தேய்த்தால் கண்களுக்கு எதுவும் ஆகாது என்கிறார் புலிப்பாணி சித்தர். இத்துடன், இந்த நூலில் நத்தை வேரைக் கொண்டு செய்யும் வேறு சில ஜாலங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தவிர பச்சை பாம்பு ஜாலம், மாடன் மந்திரம், இந்திர ஜாலம், எக்ஷனி ஜாலம், வாத்தியஜாலம் போன்ற சில ஜால முறைகளையும், சில யந்திர ஜாலங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இவைகளைப் பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

அடுத்ததாக போகர் வைத்தியம் 700 என்னும் நூலினைப் பற்றியும், அதில் சொல்லப் பட்ட சில வைத்திய முறைகளைப் பற்றியும் பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜாலம் - 04

Author: தோழி / Labels:

தீயில் குதிக்கும் ஜாலம்...

புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 163 வது பாடலான.....

"எமனுட அக்கினியை மதியா வித்தை
இயம்புகிறேன் எல்லோரும் ஆச்சரிக்க
நாமனவே சனகனிட புதரு தன்னில்
நலமாக பூத்திருக்கும் காளான் தன்னை
சொமனவே கொண்டுவந்து புது பாண்டத்தில்
சுருக்குடனே போட்டு நீ கதிரில் வைக்க
ஆமனவே தைலமாதா உருகும் பாரே
அதையெடுத்து பூசி தீயில் குதி"


எல்லோரும் ஆச்சர்ய பட தக்கவிதமாக நெருப்பு சுடாமளிருக்கும் வித்தையைக் கூறுகிறேன் கேள், சங்கன் செடியின் புதர்களில் பூத்திருக்கும் காளானைக் கொண்டுவந்து புது மண் பாண்டத்தில் போட்டு சூரிய ஒளியில் வைக்க உருகி வரும் அதை உடம்பில் பூசிக் கொண்டு எவ்வளவு தீயில் வேண்டுமானாலும் குதிக்கலாம் சுடாது என்கிறார் புலிப்பாணி சித்தர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜாலம் - 03

Author: தோழி / Labels:

கையால் தென்னை மரத்தைக் குத்தினால் தேங்காய் விழும் ஜாலம்...

புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 141 வது பாடலான.....

"உண்ணவே இன்னுமொரு ஜாலங் கேளு
இங்குரைப்பேன் விண்ணோரும் வெருண்டு நிக்க
என்னவே இரங்கழிச்சில் விதை வாங்கி
அதை குழித்தைலம் வாங்கிக் கொண்டு
துன்னவே தைலமதை கையிற் தேய்த்து
துலக்கமாதாம் தென்னைமரம் தன்னை நோக்கி
கன்னவே மரத்தடியில் கைதால் குத்த
கங்குமற்று காயதுவும் விழுகும் பாரே"


உலகத்தோர் வியக்கும் ஜாலம் சொல்கிறேன் கேள்! , இரங்கழிச்சில் விதையை எடுத்துக் அதில் குழித்தைலம் செய்து, அத் தைலத்தை கொஞ்சமாய் எடுத்து, கையில் தேய்த்துக் கொண்டு காய்கள் காய்த்திருக்கும் தென்னை மரத்தில் ஒரு குத்து குத்த ஒருகாய் மரத்திலிருந்து விழுமாம்.

அடுத்த பதிவில் தீயில் குதிக்கும் ஜாலம் பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜாலம் - 02

Author: தோழி / Labels:

தீவட்டியை கொளுத்தி வாயில் வைக்கும் ஜாலம்...

புலிப்பாணி ஜாலம் 325 நூலில் 137 வது பாடலான.....

"பாரப்பா பாருலகில் பிரமிக்க சொல்வேன்
பதிவாக மனத்தினிடம் நிறுத்திவை நீ
காரப்பா கால் பலமே கற்பூரம் வாங்கி
கடிதாக வாயில் போட்டு மென்று துப்பி
சாரப்பா
அவை தனிலே பந்தத்தை சுற்றி
சரியாக கொளுத்தி
அவையோருக்கு காட்டி
நேரப்பா வாயிலிட்டு எக்ஷினியை என்று
நிசிவாக நில்லேடி என் பாக்கள் என்னே"


கால் பலம் கற்பூரம் வாங்கி வாயில் போட்டு நன்றாக மென்று உமிழ்ந்து விட்டு மக்கள் கூடிய அவையில் போய் நின்று, பந்தத்தைக் கொளுத்தி அவையோருக்குக் காட்டி "எக்ஷினி நீ என்பக்கம் வந்து நில்லடி"என்று சொல்லி பந்தத்தை வாய்க்குள் வைத்து மூடி திறந்து காட்டலாம் ஒன்றும் ஆகாது.

அடுத்த பதிவில் கையால் தென்னை மரத்தை குத்தினால் தேங்காய் விழும் ஜாலம் பற்றி பார்க்கலாம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணி ஜாலம்...

Author: தோழி / Labels:

போகரின் சீடரான புலிப்பாணி இயற்றிய நூல்கள் மற்ற சித்தர்களின் நூல்களைப் போல எளிதில் காணக் கிடைக்காதவை. அப்படியான ஒரு நூல்தான் புலிப்பாணி ஜாலம்325. இதில் பல சித்து வகைகளைப் பற்றி விளக்கியிருக்கிறார். அதனை இனி வரும் பதிவுகளில் காண்போம்.


நெருப்பில்லாமல் சோறாக்கும் ஜாலம்...

"பாடினேன் அக்கினியு மில்லாமற் றான்
பண்பான அன்னமது சமைக்கக் கேளு
ஆடினேன் கானகத்தில் வேண துண்டு
அடைவாக சதுர கள்ளி பாற் கரந்து
சாடி நீ பாண்டத்தி லரிசி போட்டு
சரியாக பால்தன்னை சுருக்காய் வாரு
நாடிப்பார் சோறதுவும் வெந்திருக்கும்
நலமாக ஜாலம்போல் லாடிப் பாரே"


- புலிப்பாணி ஜாலம் 325 -

ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடித்துவிட்டு, அதில் காட்டிலிருந்து கறந்தெடுத்து வந்த சதுரக் கள்ளியின் பாலை விட்டு கால் நாழிகை மூடி வைதிருந்து திறந்து பார்க்க சாதம் நன்றாக வெந்திருக்கும்.. ஆனால் அந்த சாதத்தை யாரும் புசித்தலாகாது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அரியவை அறிவோம்...

Author: தோழி / Labels:

கடந்த இருபது பதிவுகளில் சித்தர்களைப் பற்றி சிறிய அளவில் அறிமுகம் கொடுத்திருந்தாலும், முடிந்த வரையில் அவர்கள் இயற்றிய அல்லது இயற்றியதாக கருதப் படும் நூல்களின் பட்டியலை முழுமையாக இட்டிருந்ததை அவதானித்திருப்பீர்கள்.

அக்காலத்தில் இந்த நூல்கள் குரு முகமாய் மட்டுமே அடுத்தடுத்த தலை முறைகளுக்கு தரப்பட்டன. இத்தகைய பகிர்வுகளினால் பல அரிய நூல்கள் இன்று நம்மிடம் இல்லை. நமக்கு கிடைத்திருக்கும் நூல்களில் கூட சிலவற்றின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகங்களும் இருக்கின்றன. அதையெல்லாம் விவாதிக்கும் அளவிற்கு நான் பெரியவள் இல்லை.

என்னிடம் இருக்கும் குடும்பவழிச் சொத்தான சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக மாற்றிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். பல்கலைக் கழக மாணவியான என்னால் இதற்கென நேரம் ஒதுக்கி செயல்படுத்துவதில் சிரமங்கள் இருந்தாலும் மிகுந்த ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்கிறேன். விரைவில் முதல் மின் நூலினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

இனி வரும் பதிவுகளில் அம்மாதிரியான பழமையான நூல்களை பதிவுகளில் அறிமுகம் செய்யவிருக்கிறேன்.அந்த வரிசையில் முதலாவதாக புலிப்பாணி சித்தரால் இயற்றப் பட்ட ”புலிப்பாணி ஜாலம் 325” என்கிற நூலினைப் பற்றியும், அதிலிருக்கும் ஆச்சர்யங்களையும் அடுத்த அடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


தேரையர்

Author: தோழி / Labels: ,


"வந்ததோர் தேரையர் தான் மகாசித்தர் நூலில் வல்லோர்
அந்த நல் அகத்தியருக்கு அருமையாய் வந்த பிள்ளை
குந்தக
மில்லா பிரம்ம குலத்தினில் வந்துதித்தார்
விந்தையாய் காய சித்தி மிகச் செய்து முடித்தார் பாரே"


- கருவூரார் வாத காவியம் -

இவரின் இயற் பெயர் இராமத்தேவன் என்றும், மருத்துவ ஆராய்ச்சிகளில் சிறந்த தேர்ச்சியுடைவர் என்பதால் தேரையர் என்று அழைக்கப் பட்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. இவர் ஆகத்தியரின் சீடர் என்றும் இவரே பின்னாளில் தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியர் என்கிற சுவாரசியமான தகவலும் சொல்லப்படுகிறது.

மணி வெண்பா
மருந்துப் பாதம்
ஞான போதம்
பதார்த்த குண சிந்தாமணி
நீர்க்குறிநூல்
மாணிக்க கற்பம்
நோய்க்குறி நூல்
தைல வர்க்க சுருக்கம்
வைத்திய மகா வெண்பா


ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது.பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

இதுவரையில் சித்தர்களைப் பற்றி, சிறிய அளவிலான அறிமுகத்தினை பார்த்தோம். பிரிதொரு சந்தர்ப்பத்தில் மேலும் பல சித்தர்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன். அடுத்த பதிவில் புதியதொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


மச்சமுனி

Author: தோழி / Labels: ,"சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்காலம் மிகுந்த சித்து
சத்தான திரேகமதை நம்பாமல் தான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்தியமும் அகதிகட்கு அன்னந் தந்து
நிட்களங்க நிடேத வழி தெரிந்துமே தான்
பக்தியுடன் னம்பாளின் தரிசனாத்தால்
பாருலகை மறந்ததொரு சித்தனாமே"


- அகத்தியர் 12000 -

இவர் காக புசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”காலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.

மச்சமுனி சூத்திரம் 21
மச்சமுனி
தூல சூக்கும காரண ஞானம் 30
மச்சமுனி பெரு நூல் காவியம் 800
மச்சமுனி வைத்தியம் 800
மச்சமுனி கடைக் காண்டம் 800
மச்சமுனி சரக்கு வைப்பு 800
மச்சமுனி திராவகம் 800
மச்சமுனி ஞான தீட்சை 50
மச்சமுனி தண்டகம் 100
மச்சமுனி தீட்சா விதி 100
மச்சமுனி முப்பு தீட்சை 80
மச்சமுனி குறு நூல் 800
மச்சமுனி ஞானம் 800
மச்சமுனி வேதாந்தம் 800
மச்சமுனி திருமந்திரம் 800
மச்சமுனி யோகம் 800
மச்சமுனி வகாரம் 800
மச்சமுனி நிகண்டு 400
மச்சமுனி கலை ஞானம் 800


ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும், இத்துடன் இவர் மாயாஜாலங்களைப் பற்றி எழுதிய "மாயாஜால காண்டம்" என்னும் நூலும் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன, திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கடுவெளிச் சித்தர்

Author: தோழி / Labels: ,


"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"


- கடுவெளிச் சித்தர் -

கடு வெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கபட்டார்.

கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை, ஆனால் இவரின் வரலாறு யாருக்குமே தெரியாத பொக்கிஷம் போல ஆகி விட்டது.

கடுவெளிச் சித்தர் பாடல்
ஆனந்தக் களிப்பு
வாத வைத்தியம்
பஞ்ச சாத்திரம்


ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. காஞ்சியில் சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சட்டை முனி

Author: தோழி / Labels: ,


"பாலனாம் சிங்களவ தேவ தாசி
பாசமுடன் பயின்றேடுத்த புத்திரன் தான்
சீலமுடன் சட்டை முனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெருண்டாச்சு"


- போகர் 7000 -

சதுரகிரி தல புராணம், போகர் ஏழாயிரம், அகத்தியர் பன்னிரெண்டாயிரம் போன்ற நூல்களில் இவர் பற்றிய பல குறிப்புகள் இடம் பெறுகின்றன.

பொதுவாக சித்தர்கள் மறைபொருள் கொண்டு எழுதுவது வழக்கம். ஆனால் சட்டை முனியோ தமது அனுபவங்களை நேரடியாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

இவர் எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால் சட்டை முனி என்று அழைக்கப்பட்டார். இவர் போகருடைய சீடர் என்று சொல்லப் படுகிறது.

சட்டை முனி உண்மை விளக்கம் 51
சட்டை முனி கற்பம் 100
சட்டை முனி நிகண்டு 1200
சட்டை முனி முன் ஞானம் பின் ஞானம் 200
சட்டை முனி வாகடம் 200
சட்டை முனி சரக்கு வைப்பு 500
சட்டை முனி வாத காவியம் 1000
சட்டை முனி நவரத்தின வைப்பு


ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் சீர்காழியில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகின்றது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


உரோம ரிஷி

Author: தோழி / Labels: ,

"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "


- உரோம ரிஷி -

இவர் செம்படவ தந்தைக்கும், குறத்தாய்க்கும் பிறந்ததாக போகர் தனது நூலில் குறிப்பிடுகிறார். இவர் புசுண்ட முனிவரின் சீடராவார்.

போகர் சீனதேசத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததுபோல, இவர் உரோமாபுரியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் இதனால் உரோம ரிஷி என்று அழைக்கப் பட்டார்.

இவர் கும்பகோணதிட்கு அருகிலுள்ள கூந்தலூர் என்னுமிடத்தில் தங்கியிருந்த பொது தாடி வழியாக பொன் வரவழைத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

"உரோம ரிஷி ஞானம் " என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் மொத்தமாக பதின்மூன்று பாடல்களே இடம் பெற்றிருக்கின்றன.

வகார சூதிரம்
நாகாரூடம்
சிங்கி வைப்பு
உரோம ரிஷி வைத்தியம் 1000
உரோம ரிஷி சோதிட விளாக்கம்
உரோம ரிஷி காவியம் 500
உரோம ரிஷி குறுநூல் 50
உரோம ரிஷி முப்பு சூத்திரம் 30
உரோம ரிஷி இரண்டடி 500
உரோம ரிஷி பெரு நூல் 500
உரோம ரிஷி ஞானம்
உரோம ரிஷி பூஜா விதி
உரோம ரிஷி வைத்திய சூத்திரம்

உரோமரிஷி பஞ்சபட்சி சாத்திரம்

ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் திருக்கயிலையில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகின்றது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


கோரக்கர்

Author: தோழி / Labels: ,

"சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை
சுந்தரனார் வசிஷ்ட மகா ஷியாருக்கு
புல்லவே காணக் குற ஜாதியப்பா
புகழாகான கன்னியவள் பெற்ற பிள்ளை
வெல்லவே அனுலோமன் என்னலாகும்
வேதாந்த கோரக்கர் சித்து தாமும்
நல்லதொரு பிரகாசமான சித்து "


- போகர் 7000 -

கோரக்கர் வசிட்டரின் மகன் என்று போகர் தனது போகர் ஏழாயிரத்தில் குறிப்பிடுகிறார்.

சட்டை முனி, கொங்கணவர் போன்றோரின் நெருங்கிய நண்பாராக இருந்ததாய் தனது நூலான கல்ப போதம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்க்காடு என்ற ஊரில் இவர் தவம் செய்ததாகவும் அதனால் அந்த ஊருக்கு கோர்க்காடு என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப் படுகிறது.

இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு எளிமையாகாவும் பொருள் புரிந்து கொள்ள இலகுவாகாவும் உள்ளது குறிப்பிட தக்கது.

கோரக்கர் கல்ப போதம்
கோரக்கர் காள மேகம்
கோரக்கர் கபாடப் பூட்டு
கோரக்கர் ஞான சோதி
கோரக்கர் முனி ஜென்ம சித்து
கோரக்கர் பஞ்ச வர்த்தம்
கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமனாசத் திறவுகோல்
கோரக்கர் பிரம்மமா ஞானம்
கோரக்கர் கற்ப சூத்திரம்
கோரக்கர் தாண்டகம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் வசார சூத்திரம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் அட்ட கர்மம்
கோரக்கர் முத்திநெறி
கோரக்கர் கற்பம்
கோரக்கர் மலை வாகடம்
கோரக்கர் முத்தாராம்
கோரக்கர் ரஷ மேகலை
கோரக்கர் முனி ஆன்ம சித்து


ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் பேரூரில் சித்தியடைந்ததாக சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பாம்பாட்டிச் சித்தர்

Author: தோழி / Labels: ,
"கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல்
காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர்
மேனிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மேய்யன்பதம் நாடுவாரேன்று ஆடுபாம்பே!"

"தெளிந்து தெளிந்து தெளிந்து ஆடு பாம்பே - சிவன்
சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடு பாம்பே!
ஆடு பாம்பே! தெளிந்து ஆடு பாம்பே சிவன்
அடியினைக் கண்டோம் என்று ஆடு பாம்பே"


- பாம்பாட்டிச் சித்தர் -

பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருக சீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றும், சட்டை முனியின் சீடர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.

மூலாதரத்தில் இருக்கும் குண்டலினியை உறங்கிக் கிடக்கும் பாம்பு என்று சித்தர்கள் சொல்வர். இந்த குண்டலினி சக்தியானது சுழிமுனை நோக்கி ஏறுவதை, பாம்பு புற்றிலிருந்து ஏறுவது போல என குறியீடாக சொல்வர். இதையே கருத்தாக கொண்டு குண்டலினி சக்தியை மேல் எழுப்புவதை பற்றிய பாடல்கள் பல பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார்.

இவரின் பல பாடல்களில் ஆடு பாம்பே என குண்டலினியை விளித்து பாடியதை அவதானிக்கலாம்.

பாம்பாட்டி சித்தர் பாடல்
சித்தரா ரூடம்
பாம்பாட்டி சித்தர் வைத்தியம்


ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப் படுகிறது.

இவர் தவம் செய்த குகை மருதமலையில் இன்றும் காணப்படுவதாக சொல்லப் படுகின்றது.

இவர் விருத்தாசலத்தில் சமாதியடைந்ததாகவும் சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சுந்தரானந்தர்

Author: தோழி / Labels: ,"சொல்லவே சுந்தரானந்த ரப்பா
தொல்லுலகில் கேசரியாம் வித்தை தன்னை

புல்லவே அதீதமென்ற மாண்பருக்கு

புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்"


- போகர் -

இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.

இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு.

இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.

இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது.

இவர் சுந்தரானந்தர் சோதிட காவியம் என்னும் பெரும் நூலையும்,

சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் தாண்டகம்

சுந்தரானந்தர் முப்பு

சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

சுந்தரானந்தர் அதிசய காராணம்

சுந்தரானந்தர் பூஜா விதி

சுந்தரானந்தர் தீட்சாவிதி

சுந்தரானந்தர் சுத்த ஞானம்

சுந்தரானந்தர் கேசரி

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்

சுந்தரானந்தர் காவியம்

சுந்தரானந்தர் விஷ நிவாரணி


ஆகிய நூல்களையும் எழுதியுள்ளதாக தெரிகிறது.

இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பிண்ணாக்கீசர்

Author: தோழி / Labels: ,
"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல்
தேவமாதா இரவல் - ஞானம்மா

தெரியா அலைவாரே.!"


"இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்

துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா

சொன்னால் வருமோசம்.!"


- பிண்ணாக்கீசர் -

இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார்.

இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.

பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது.

இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம்.

இவர்,

பிண்ணாக்கர் மெய்ஞானம்
பிண்ணாக்கர் ஞானப்பால்

பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர்


ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது.

இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலஸ்தியர்

Author: தோழி / Labels: ,
"உருவான புலஸ்தியரின் மார்க்கம் கேளு
ஓகோகோ நாதர்கள் அறிந்ததில்லை
கருவான தேவரிஷி தன் வரத்தால்
கமலமுனி தன் வயிற்றில் பிறந்த பேரன்
திருவான அகத்தியருக் உகந்த சீடன்
தீர்க்கமுள்ள சிவராஜ புனித யோகன்
பருவான திருமந்திர உபதேசந்தான்
பாருலகில் புலஸ்தியர் என்றறைய லாமே".

- போகர் 7000 -

கமலமுனியின் பேரன்தான் புலஸ்தியர் என்றும், அகத்தியருக்கு பிரியமான சீடன் என்றும், சிவராஜ யோகியான இவர் திருமந்திர உபதேசம் பெற்றவர் என்றும் போகர் தனது போகர் 7000 என்னும் நூலில் சொல்லியிருக்கிறார்.

திரணபிந்துவின் மகள் ஆவிருப்பு என்பவளை இவர் மணந்ததாகவும், இவருக்கு விசித்திர வாசு என்று ஒருமகன் பிறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இவர்,

புலஸ்தியர் வைத்தியவாதம்
புலஸ்தியர் வாத சூத்திரம்
புலஸ்தியர் வழலைச் சுருக்கம்
புலஸ்தியர் ஞான வாத சூத்திரம்
புலஸ்தியர் வைத்தியம்
புலஸ்தியர் கற்ப சூத்திரம்

ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது.

பொதிகை மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் இடத்தில் சமாதியடைந்த இவர், தேரையாருக்கு உபதேசம் செய்ய வெளியே வந்து, அவருக்கு போதித்து விட்டு இரண்டாவது முறையாக ஆவுடையார் கோவிலில் சமாதியாடைந்தார் என்று சொல்லப்படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


இடைக்காட்டுச் சித்தர்

Author: தோழி / Labels: ,
"மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!".

"அல்லும் பகலும்நிதம் - பசுவே!
ஆதி பதந்தேடில்
புல்லும் மோட்சநிலை - பசுவே!
பூரணங் காண்பாயே".

"தோயாது இருந்திடும் பால்கற
தொல்லை வினையறப் பால்கற
வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார உண்டிடப் பால்கற"

- இடைக்காட்டுச் சித்தர் -


மதுரைக்கு அருகே உள்ள இடைக்காடு என்னும் ஊரில் பிறந்ததனால் இடைக்காடர் என்று அழைக்கப் பட்டார் என்றும் இவர் ஆயர் குலத்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

இவரது பாடல்களில், தாண்டவக்கோனே, பால்கற, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம்.

இடைக்காடருக்கு ஞானத்தை உபதேசித்தவர் போகர் என்றும், போகர் சமாதி கொள்ளப் போகும் முன்னர், புலிப்பாணியை பழனியிலும், இடைக்காடரை திருவண்ணாமலையிலும் இருந்து இறைச்சேவை செய்ய பணித்ததாக சொல்லப் படுகிறது.

இடைக்காடர் ஞான சூத்திரம் 70
இடைக்காடர் வைத்தியம் 64
இடைக்காடர் பூஜா விதி 27

ஆகிய நூல்கள் இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது.

இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்ததாய் சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


புலிப்பாணிச் சித்தர்

Author: தோழி / Labels: ,
"ஆள்தவே காலங்கி கடாட்சத்தாலே
அப்பனே வேங்கை தனில் ஏறிக்கொண்டு
தாழ்ந்திடவே ஜலம் திரட்டி புனிதவானும்
சாங்கமுடன் தரணியிலே சுற்றிவந்தான்".

- போகர் -

போகருடைய சீடார்களில் ஒருவர், தமிழகத்தி பொன் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறார்.

போகர் நவபாஷாணதைக் கொண்டு பழனி முருகன் சிலையை வடிக்கும் போது இவர் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப் படுகிறது.

போகர் சமாதியடைய முன்னர் இவரை அழைத்து தமக்குப் பின் தண்டாயுதபாணி கோவில்ப் பூசை , புனஸ்காரங்களை இவரே செய்யவேண்டும் என்று பணித்ததாகவும் சொல்லப் படுகிறது.

இவர்,

புலிப்பாணி வைத்தியம் 500
புலிப்பாணி சோதிடம் 300
புலிப்பாணி ஜாலம் 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் 200
புலிப்பாணி பூஜா விதி 50
புலிப்பாணி சண்முக பூஜை 30
புலிப்பாணி சிமிழ் வித்தை 25
புலிப்பாணி சூத்திர நாணம் 12
புலிப்பாணி சூத்திரம் 9

ஆகிய நூல்களை இயற்றியாதாக சொல்லப்படுகிறது.

இவர் பழனி அருகில் வைகாவூர் எனுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அகப்பேய் சித்தர்

Author: தோழி / Labels: ,
"உன்னை அறிந்தக்கால் - அகப்பேய்
ஒன்றையும் சேராயே
உன்னை அறியும்வகை- அகப்பேய்
உள்ளது சொல்வேனே".

"நாச மாவதற்கே - அகப்பேய்
நாடாதே சொன்னேனே
பாசம் போனாலும் - அகப்பேய்
பசுக்களும் போகாவே".

"ஐந்துதலை நாகமடி - அகப்பேய்
ஆதாயங் கொஞ்சமடி
இந்த விடந்தீர்க்கும் - அகப்பேய்
எம் இறை கண்டாயே".

- அகப்பேய் சித்தர் -

”நான்” என்ற அகந்தையை பேயாக உருவகித்து பாடியதால், இவர் அகப்பேய் சித்தர் என்று அழைக்கப் பட்டார்.

இவர் வேளாளர் குலத்தில் பிறந்தவர் என்றும், வணிக குலத்தவர் என்றும் மாறு பட்ட கருத்துக்கள் உண்டு.

அகப்பேய் சித்தர் பாடல் 90.
அகப்பேய் சித்தர் பூரண ஞானம் 15.

ஆகிய நூல்களை இவர் எழுதியதாக சொல்லப்படுகிறது.

அகப்பேய் சித்தர் திருவையாறில் சமாதியாடைந்தார் என்று சொல்லப்படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


பத்திரகிரியார்

Author: தோழி / Labels: ,

"வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்?"

"நவசூத்திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்?"

"புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?"

- பத்திரகிரியார் -

பட்டினத்தார் வடமாநிலங்களில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அவரை கள்வன் என்று பழிசுமத்தி கழுவிலேற்ற உத்தரவிட்ட அதே பத்திரகிரி மன்னன் தான் இந்த பத்திரகிரியார்.

அரசனாக இருந்த இவர் சுக போகங்களை துறந்து சித்தரானவர்.

ஒருநாள் அவர் அருகில் வந்த பெண் நாய்க்குட்டி ஒன்றிற்கு சிறிது உணவிட்டாராம், அன்றிலிருந்து அந்த நாய் அவரை பின்தொடர்ந்து அவர் பார்வை பட்டு விமோசனம் அடைந்து, பின்னர் அது காசி மன்னனின் மகளாக பிறந்து முற்பிறவி நினைவுடனேயே இருந்து பத்திரகிரியாரையே மணந்ததாக சொல்வர்.

பத்திரகிரியார் பாடல்கள் பெரும்பாலும் "எக்காலம்?" என்ற கேள்வியுடன் முடிவதாக அமைகின்றன.

இவர் திருச்செட்டாங்குடியில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


அழுகணிச் சித்தர்

Author: தோழி / Labels: ,

"வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ!"

- அழுகணிச் சித்தர் -

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது.

இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள்.

இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மை.

பொதுவாக இவர் தனது பாடல்களில் "உன்னை அறியாமல் உலகத்தில் உள்ளவைகளை அறிவதால் எந்தவிதப் பயனுமில்லை" என்னும் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.

இவர்,

அழுகணி சித்தர் பாடல் 200
ஞான சூத்திரம் 23
அழுகண் வைத்தியம்
அழுகண் யோகம்
அழுகண் ஞானம்

ஆகிய நூல்களை இயற்றியதாக சொல்லப் படுகிறது.

நாகப் பட்டினத்தில் உள்ள நீலாய‌தாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இவர் சமாதி இன்றும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அழுகணிச் சித்தர் ஜீவசமாதி......


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


சிவவாக்கியார்

Author: தோழி / Labels: ,
"
நட்ட கல்லை தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி
வந்து முனுமுனுவென்று

சொல்லும் மந்திரம் ஏதடா?
"

- சிவவாக்கியார் -

சித்தர்களுள் சிறந்தவராக கருதப்படுபவர் சிவவாக்கியார். தாயுமானவர், பட்டினத்தார் ஆகியவர்களால் பாராட்டப் பட்டவர். சிவவாக்கியார் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர்.

பிறக்கும் போதே "சிவ" "சிவ" என்று சொல்லிக் கொண்டு பிறந்த படியால் சிவவாக்கியார் என்று அழைக்கப் படுவதாக சொல்லப் படுகிறது.

போகர் தனது சப்தா காண்டத்தில் சிவவாக்கியார் தை மாதத்தில் வரும் மகநட்சத்திரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார்.

நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

சிவவாக்கியார் கும்பகோணத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


போகநாதர் ( போகர் )

Author: தோழி / Labels: ,தமிழ் கடவுளான பழநி தண்டாயுத பாணியை வழிபட்ட போகர், வேட்கோவர் குலத்தில் பிறந்ததாக கருதப் படுகிறார். தற்போது பழநியில் அருள்பாலிக்கும் தண்டாயுத பாணியின் சிலையினை நவபாசானம் என்கிற ஒன்பது விஷங்களினால் ஆன கூட்டுக் கலவையினால் உருவாக்கியவர் இவர் என்றும் கூறப் படுகிறது.

போகர் ஆகாய மார்க்கமாக செல்லக் கூடிய ஊர்தியை உருவாக்கி சீன தேசம் சென்றதாகவும், அங்கு போதிக்கும் பணியை மேற்கொண்ட போகருக்கு சீனாவில் "போ-யாங்" என்ற பெயர் வழங்கப் பாட்டதாகவும் சொல்லப் படுகிறது.

"சித்தான சித்து முனி போக நாதன்
சிறந்த பதினெண் பேரில் உயர்ந்த சீலன்
கத்தநேனும் காலாங்கி நாதர் சீடன்
கனமான சீனபதிக் குகந்த பாலன்
முத்தான அதிசயங்கள் யாவற்றும்தான்
மூதுலகில் கண்ட முதல்வன் சித்தன்
நித்தமுமே மாசில்லாக் கடவுள் தன்னை
மாநிலத்தில் மறவாத போகர் தானே"

என்று அகத்தியரே இவர் பெருமையைப் பாடியுள்ளார்.

இவர் கைலாய மலை அருகே தங்கி இருந்த காலத்தில் எழுதிய ஏழாயிரம் பாடல்கள் தான் பின்னாளில் போகர் சப்த்த காண்டம் என்று அழைக்கப் படுகிறதாம்.

இது தவிர....

போகர் 12000
போகர் நிகண்டு 1700
போகர் வைத்தியம் 1000
போகர் வைத்தியம் 700
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜெனன சாகரம் 550
போகர் கற்பம் 360
போகர் கற்பம் 300
போகர் உபதேசம் 150
போகர் இரண வாகடம் 100
போகர் நானா சாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜா விதி 20
போகர் மாந்திரீகம் 74

என்கிற நூல்களையும் இயற்றியதாக கூறப் படுகிறது.

பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...


திருமூலர்

Author: தோழி / Labels: ,
யோக மார்க்கமும், ஞானத் தேடலும் உள்ளவர்கள் திருமந்திரத்தைப் பற்றி அறியாமல் இருக்க முடியாது, திருமந்திரத்தை அறிந்த அளவு அதை இயற்றிய திருமூலரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. திருமூலர் பற்றி பல கதைகள் வழக்கத்திலுள்ளன. அதில் எதை நம்புவது என்பதில் ஐயம் எழுவது இயற்கையே. ஆகவே அது பற்றிய தேடல்களை விட்டு விடலாம். திருமூலர் என்ற ஒரு சித்தர் வாழ்ந்தது உண்மை, அது போதும்..

இவர் நந்தீசரின் சீடராவார்.

இவரால் எழுதப்பட்ட மூவாயிரம் பாடல்களின் தொகுப்பை "மந்திர மாலை" என்று அழைத்தனர். பிற்காலத்தில் அவற்றை ஆராய்ந்த சான்றோர் அதை திருமந்திரம் என்று பெயரிட்டு ஒன்பது பகுதிகளாக வகுத்தனர்.

திருமந்திரம் என்று அழைக்கப்படும் அந்த நூலில் பல யோக ரகசியங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார்.

தாமறிந்த உண்மைகள் உலகத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருந்தார் இவர்.

"யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே"

- திருமந்திரம் -

இவர் திரு மந்திரம் மட்டு மல்லாது,

திருமூலர் காவியம் 8000
திருமூலர் சிற்ப நூல்100
திருமூலர் சோதிடம் 300
திருமூலர் மாந்திரீகம் 600
திருமூலர் சல்லியம் 1000
திருமூலர் வைத்திய சாரம் 600
திருமூலர் வைத்திய காவியம் 1000
திருமூலர் வைத்தியக் கருக்கிடை 600
திருமூலர் வைத்தியச் சுருக்கம் 200
திருமூலர் சூக்கும ஞானம் 100
திருமூலர் பெருங்காவியம் 1500
திருமூலர் தீட்சை விதி 100
திருமூலர் தீட்சை விதி 8
திருமூலர் தீட்சை விதி18
திருமூலர் யோகா ஞானம்16
திருமூலர் கோர்வை விதி 16
திருமூலர் விதி நூல் 24
திருமூலர் ஆறாதாரம் 64
திருமூலர் பச்சை நூல் 24
திருமூலர் ஞானம் 84
திருமூலர் ஞானோபதேசம் 30
திருமூலர் நடுவணை ஞானம் 30
திருமூலர் ஞானக் குறி 30
திருமூலர் சோடச ஞானம் 16
திருமூலர் ஞானம் 11
திருமூலர் குளிகை 11
திருமூலர் பூஜாவிதி 41
திருமூலர் வியாதிக் கூறு 100
திருமூலர் முப்பு சூத்திரம் 200... என்ற நூல்களும் இயற்றியதாக சொல்லப் படுகிறாது.

இவர் மேலை சிதம்பரம் என்னும் இடத்தில் சமாதி அடைந்ததாக சொல்லப் படுகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...