என் கண்ணம்மா பொருளெனக்கு தாராயோ!

Author: தோழி / Labels: , ,

புல்லரிடத்திற் போய்ப் பொருள் தனக்குக்கையேந்தி
பல்லைமிகக் காட்டிப் பரக்க விழிக்கிறண்டி!
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல்
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா
பொருளெனக்கு தாராயோ!

- அழுகுணிச் சித்தர் -

அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கார். அந்தக் காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் இதுதான் நிலைமை போல.

தோழி said...

மிக்க நன்றி... பித்தனின் வாக்கு.

Radhakrishnan said...

மெய் ஞானம் மட்டுமே போதுமா? என்ன இது, மிகவும் அழுகுணி ஆட்டம் பாடி இருக்கிறார். பொன்னும் பொருளும் தந்து உனது அருளும் தாவென பாடுவதுதான் நமது முறை. அவர் சித்தர், நாம் பித்தர்.

தோழி said...

மிக்க நன்றி... V.Radhakrishnan

Anonymous said...

பல்லை கட்டி இல்லாதவனை போல கண்களை வைத்து பணக்காரனிடம் கையேந்தி நிற்கிறனர்
அப்படி பல்லை கட்டாமல் கண்களை வைத்துக்கொள்ளாமல் பணக்காரனிடம் கையேந்தாமல் எனக்கு பொருள் தருவாயா என்று கேட்கிறார்

Post a comment