யோகம் பயில உகந்த காலம் எது?

Author: தோழி / Labels: , ,

"நாலுவேதம் ஓதுகின்ற ஞானம்ஒன்று அறிவீரோ?
நாலுசாமம் ஆகியே நவின்றஞான போதமாய்
ஆலம்உண்ட கண்டனும் அயனும்அந்த மாலுமாய்ச்
சாலஉன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே".


- சிவவாக்கியார் -

இரவின் நாலாம் சாமத்தில் துவங்குவதுதான் பிரம்ம முகூர்த்தம் அல்லது அதிகாலை எனப்படும் பொழுது.

பிரம்ம முகூர்த்தத்தில் சிவமும்,பிரம்மமும் கூடிக்கலந்த உயர்ந்த பிரம்ம சக்தி முழுமையாக நிறைந்திருக்கிறது. இது மனதையும், நினைவையும் ஒருமுகப் படுத்தி ஒருவர் மேன்மை அடைய அடித்தளமிடும் காலமாகும்

எனவே, மனதையும், நினைவையும் ஒருமுகப் படுத்தி மேன்மை அடைய விரும்புவோர் யோகப் பயிற்சிகள் செய்ய இதுவே சிறந்த நேரம் என்கிறார் சிவவாக்கியார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

24 comments:

அகல்விளக்கு said...

நல்ல தகவல்...

நானும் பிரம்ம முகூர்த்தம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்...

நட்சத்திரங்கள் மறையாத காலைனு சொல்வாங்க அதுதானே தோழி...??

தோழி said...

ஆமாம் உண்மை தான்.. நன்றி..

ATOMYOGI said...

ஏங்க நாலாம் ஜாமம் னா அது இரவு 1:42 லிருந்து 04:06 வரை உள்ள் அந்த காலம் தான? (சூரிய உதயம் 06:30 என வைத்துக்கொண்டால்)...
அது தான் அதிகாலையா? கொடுமை. எங்களுக்கு அது தான நடுஇரவு. யோகம் பயில இந்த நேரம் மட்டும் தானா? எங்களுக்கு தோதான நேரம் ஏதாவது இருக்கா?

எவனோ ஒருவன் said...

தோழி
நன்றி
எனக்கு புத்தாண்டில் நம்பிக்கையில்லை. இருந்தாலும்
எனக்கு வாழ்த்து சொன்ன சகோதர தோழிக்கு அவர்கள் விரும்பும் நல்லவைகள் அமைய வாழ்த்துகள்

பாலா said...

வணக்கம் தோழி உங்கள எனக்கு அறிமுகம் செய்த என்னோட குருவுக்கு இங்க என்னோட நன்றியை சொல்லிக்கறேன்
நீங்க எழுதனதை எல்லாம் இந்த மூணு நாளா பார்த்துட்டு இருக்கேன் .நல்ல பண்ணறீங்க வாழ்த்துக்கள் ......

தோழி said...

அந்த நேரம் தான் சித்தர்கள் யோகம் செய்ய உரிய காலம் என்று சொல்லிருக்காங்க.. நன்றி. மாயாவி

தோழி said...

மிக்க நன்றி... 'BULL'et மணி

தோழி said...

மிக்க நன்றி...bala

சொல்லச் சொல்ல said...

நன்றி தோழி!! சித்தர்களின் வாக்குகளை நன்கு புரியும் படி எங்களுக்கு விளக்கம் தரும் உங்கள் சேவை, வரும் ஆண்டுகளில் தொடர எங்களின் மனமுவந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

பிரம்மா முஹுர்த்தம் 4 - 6 என்று எண்ணி இருந்தேன். ஒரு வழியாக இப்போ தான் நான் 6.30 எந்திரிக்கிறேன்! 2-4, அய்யன்கப்பாடியோவ்!

தோழி said...

மிக்க நன்றி.. சொல்லச் சொல்ல

தோழி said...

மிக்க நன்றி..Dinesh babu

Radhakrishnan said...

அதி காலை என்பது அனைவரும் நன்றாக துயில் கொண்டிருக்கும் நேரம். அப்பொழுது தியானம் செய்வதற்கு யோகம் பயில்வதற்கு எந்த தொந்தரவும் இருக்காது. எனவே அதுவே சரியான தருணம் என சொல்லிவிட்டார்கள். புது வீட்டில் பால் காய்ச்சுவது என்பது கூட அதுவே நல்ல நேரம் என சொல்வார்கள். மற்ற நேரங்களில் மனிதர்கள் வேலைக்கு போக வேண்டாமா?

எத்தனை சப்தங்கள் வந்தாலும் அத்தனையும் புறந்தள்ளி இருக்கும் யோகமே சித்த யோகம். நமது மனதில் எப்பொழுது சிவனும், திருமாலும் ஒருங்கே நிறைந்து இருக்கிறார்களோ அந்த தருணமே சிறந்தது என பொருள் கொள்ளல் வேண்டும்.

தோழி said...

மிக்க நன்றி... V.Radhakrishnan

தோழி said...

@சொல்லச் சொல்ல
மிக்க நன்றி...

Anonymous said...

சிவவாக்கியாரா அல்ல சிவவாக்கியரா? எது சரி?

Anonymous said...

மிகவும் நல்ல பதிவு . யோகத்தில் மேன்மை அடைய விரும்பும் அனைவருக்கும் இது ஒரு நல்ல செய்தி , தங்களுக்கு சித்தர்களின் அருள் நிறைய உள்ளது , இல்லையெனில் இத்தகைய செய்திகளை அவ்வளவு எளிதாக சேகரிக்க இயலாது .

Unknown said...

Rishi muhurtham 3-4.30

Brame muhurtham 4.30-6

Suriyaa Screens said...

very very Thanks for yours usefully website.

Thanks
LVS.

RJ Dyena said...

this blog is really useful n amazing..........

thozhikku nandri

THIRUMAL said...

ethuvm super

Girish Subramaniam said...

engalukku samam padi oru naalai pagutthu koorungalen. illaiyel katruk kodungalen

Unknown said...

awesome information...

Unknown said...

awesome information...

Post a comment