மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி?

Author: தோழி / Labels: ,

மரணத்தை அண்மித்தவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சித்தர்கள் சொன்னவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

"நாக்குச் சிவந்து முன்பிறந்த
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும்
உலகோர் அறிய உரைத்தோம்
நாம் பாக்குத் தின்னும் துவர்
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே"


- அகத்தியர் நயன விதி -

நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள் தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள் என்று உலகத்தவர்கள் தெரிந்துகொள்ள சொல்கிறேன்.


"சிவேத சிவக்கச் சுரமுண்டாம்
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம்
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய்
நாடிக் கொள்வாய் நாள்குறியே"

- அகத்தியர் நயன விதி -

உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி , வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள் போல் முளைகள் நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக வேதனை தரும், தொண்டை இறுகி குரல் மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில் மரணம் என்று அறிந்து கொள்.


"எண்ணியஅவத்தை சொல்வேன்
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு
நலம்பெற குளிர்ந்து காட்டி
திண்ணமா உச்சி யங்கி
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில்
மரணமேன்றறிந்து சொல்லே"


- அகத்தியர் நயன விதி -

கை, மார்பு, மூக்கு, காது, முதலான உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும், உச்சந்தலையில் இடி இடிப்பது போல வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும் இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப் புவியில் ஐந்து நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்.

"அறிந்தபின் மமர்ந்து வாத
சிலேத்தும மதிக மாகில்
நிறைந்தோர் வார்த்தை தானும்
நேர்பட வெடிப்பாய் பேசும்
சிறந்திடு முகம்வெளுத்து
மார்ப்பது குடில்போல் சென்றால்
மறந்தனார்க்கடி கைதொண்ணுறா
மளவிலே மரண மெய்யே"

- அகத்தியர் நயன விதி -

பித்த நாடி அடங்கி வாத சிலேத்தும நாடிகள் அதிகரிக்குமானால், நல்ல மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பவர் வார்த்தைகள் சீற்றத்தோடு அதாவது கோபமானவையாக இருக்கும், முகம் வெளுக்கும், மார்பானது குழல் போல் குறுகும், இத்தகு அறிகுறிகள் தோன்றினால் தொண்ணூறு நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்.

சித்தர்கள் சொல்லிச் சென்ற எளிய சில மருத்துவ முறைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

டவுசர் பாண்டி... said...

மரணமில்லா பெருவாழ்வு பத்தி சொன்னவங்க, மரணத்தையும் அதன் அறிகுறிகளையும் சொல்லீருக்காங்க!

எல்லாம் மாயை!

தோழி said...

@டவுசர் பாண்டி...

மரணம் எப்படி வரும் என்றத கண்டு பிடித்தால் தானே.. அதை தடுக்க முடியும் ... சின்னபுள்ள தனமான பின்னூட்டாம் .. நன்றி...

டவுசர் பாண்டி... said...

என்னை சின்ன பையன் என ஒத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி :)

Anonymous said...

இந்த பூஉலகில் பிறந்த அனைவருக்குமே ஒரு நாள் மரணம் நிச்சயம் ,ஆனால் இதை அறிந்தும் மனிதர்கள் எத்தனை ஆட்டம் போடுகிறார்கள் . இந்த மானுட வழக்கை வெறும் மாயையை என்பதை நாம் உணராதவரையில் நாம் கடவுளை அடைய முடியாது .

Anonymous said...

is it possible to cure hiv?

Dinesh Nataraj said...

அகத்தியர் நயன விதி மற்றும் நாகமுனி நயன விதி நூல் கண் மருத்துவத்திற்காக தேவைபடுகிறது. உதவவும். இது உங்களிடம் இருந்தால் மின்னூலாக பகிர முடியுமா?

Unknown said...

Accident ஆனாலும் இந்த அறிகுறி வருமா?

Post a comment